நம் கனவை நனவாக்க கூடிய உயர் கல்வியை படிக்க விரும்பும் போது அதற்கான கல்விக் கட்டணம் நம்மை திணறச் செய்யும். இப்படி கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு கை கொடுப்பது கல்விக் கடன்.
இந்த கல்வி கடன்களுக்காக நீங்கள் வட்டி செலுத்தி வருகிறீர்கள் எனில் அதற்கு உங்களால் வரிச் சலுகை கோர முடியும். இது தொடர்பான பிரிவு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80E குறித்து விரிவாக பார்க்கலாம்...

பிரிவு 80E: வருமான வரி சட்டத்தின் பிரிவு 80E, கல்வி கடன்களுக்காக செலுத்தப்பட்டு வட்டிக்கு வரிச் சலுகை அளிக்கிறது. இந்த வரி விலக்கு எந்த வித உச்சவரம்பையும் அரசு நிர்ணயிக்கவில்லை என்பதால் நீங்கள் செலுத்திய வட்டி தொகை முழுவதையும் விலக்காக கோரலாம்.
யாரெல்லாம் வரிச் சலுகை பெற முடியும்?:
வருமான வரிச் சலுகை கோரும் நபர் அவருக்கோ, அவரது மனைவி, குழந்தைகள்.
- ஒரு மாணவருக்கு சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்கும் நபர்.
- அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து உயர் கல்வி படிப்பிற்காக வாங்கி கல்வி கடன்கள்.
- இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில பெற்ற கடன் தனிநபர் மட்டுமே வரி விலக்கு கோர முடியும், பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் மற்றும் பிற வரி செலுத்துபவர் கோர முடியாது.
மருத்துவ காப்பீடு இருந்தால் ரூ.50,000 வரை வரிச் சலுகை? என்ன சொல்கிறது பிரிவு 80D?
நிபந்தனைகள் என்னென்ன ?
- கல்வி கடனை திரும்ப செலுத்த தொடங்கிய ஆண்டில் இருந்து அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை வரி விலக்கு பெற முடியும்
- வருமான வரி சட்டத்தின் வேறு எந்த பிரிவின் கீழும், அதே வட்டி தொகைக்கு வேறு எந்த சலுகையையும் கோர முடியாது
- வட்டிக்கு செல்லும் தொகைக்கு மட்டுமே வரிச்சலுகை கிடைக்கும், கடன் தொகைக்காக செலுத்தும் பணத்தை கணக்கில் கொள்ள கூடாது
- ஒரு ஆண்டுக்கு இவ்வளவு தான் என உச்ச வரம்பு எதுவும் இல்லை, எவ்வளவு தொகை வட்டியாக செலுத்துனீர்களோ அந்த தொகையை அப்படியே கோரலாம்
உதாரணம்: மற்ற பிரிவுகளில் வரி சலுகைகள் பெற்ற பின், உங்கள் வருமானம் 6.7 லட்சமாக இருக்கிறது எனில் அதில் நீங்கள் ரூ.2 லட்சத்தை கல்வி கடனுக்கான வட்டியாக செலுத்தி இருந்தால் , அந்த தொகை முழுவதும் கழிக்கப்பட்டு உங்கள் வருமானம் ரூ.4.7 லட்சம் என கணக்கில் கொள்ளப்படும்.
வங்கியின் சான்றிதழ் கட்டாயம்: நீங்கள் கல்வி கடன் பெற்ற வங்கியில் இருந்து நிதியாண்டில் செலுத்திய தவணை தொகை, அதில் எவ்வளவு மூல தொகையாக சென்றது, எவ்வளவு வட்டியாக சென்றது என குறிப்பிட கூடிய சான்றிதழ் அவசியம்.


Click it and Unblock the Notifications