தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என்பது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை எப்படி இணைப்பது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
தட்கல் டிக்கெட் ஆதார் கட்டாயம்: இன்று முதல் தங்களுடைய ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து otp சரிபார்ப்பு நடைமுறையை முடித்த பயணிகளால் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். எனவே ஐஆர்சிடிசி கணக்கு வழியாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் தன்னுடைய ஆதார் எண்ணை ஐ ஆர் சி டி சி கணக்குடன் இணைத்து , அதனை ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி பெற்று கேஒய்சி நடைமுறைகளை சரி பார்த்து வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுடைய கணக்கிலிருந்து நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியாது .

தட்கல் முன்பதிவில் மாற்றம்: தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்களுக்கு முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில் கணக்கு வைத்திருக்கும் மக்கள் முதல் 30 நிமிடங்களை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். முகவர்கள் 30 நிமிடங்கள் முடிந்த பின்பே தட்கல் டிக்கெட் எடுக்க முடியும்.
அதே போல ஜூலை 15ஆம் தேதியிலிருந்து ஐஆர்சிடிசி கணக்கு வழியாக தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது டிக்கெட் முன்பதிவு சமயத்தில் பயனரின் ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்க்கப்படும், அதன் பின்னரே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
- ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்கு சென்று லாகின் செய்யவும்
- Profile பிரிவில் Link Aadhaar என்பதை தேர்வு செய்யவும்
- ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டையில் இருக்கும் பெயரை உள்ளிடவும்
- இதனை அடுத்து Send OTP என்பதை தேர்வு செய்யவும்
- ஓடிபி-ஐ உள்ளிட்டு Verify OTP ஐ கிளிக் செய்ய வேண்டும் பின்னர் KYC விவரங்கள் சரிபார்க்கப்படும்.
- 'Update' என்பதை தேர்வு செய்தால் போதும் உங்களின் ஆதார் கணக்கு ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்கப்பட்டு விடும்.
ஈரானிடம் இருந்த 400 கிலோ யுரேனியம் அழிக்கப்பட்டதா? இடம் மாற்றப்பட்டதா ? - நடந்தது என்ன?
ஆதார் கணக்கை ஐஆர்சிடிசி கணக்குடன் அங்கீகரிப்பது எப்படி?
- முதலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் உங்களுடைய பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து லாகின் செய்ய வேண்டும்
- 'My Account' என்ற பிரிவில் 'Authenticate User' என்பதை தேர்வு செய்ய வேண்டும்
- உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்
- 'Verify Details' என்பதை கிளிக் செய்ய வேண்டும்
- ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்களின் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்
- அந்த ஓடிபி-ஐ திரையில் உள்ளிட வேண்டும், பின்னர் Submit button கிளி செய்தால் ஆதார் அமைப்பிடம் இருந்து உங்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
சரிபார்ப்பு வெற்றி பெற்றால் திரையில் அதற்கான தகவல் காண்பிக்கப்படும் அல்லது MY ACCOUNT என்ற பிரிவில் Authentication status என்பதை கிளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications