அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை என்றாலே மக்கள் தங்க நகை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள. தங்களால் இயன்ற அளவு ஒரு கிராம் தங்கமாவது வாங்கி வைத்து விட்டால் இந்த ஆண்டு முழுவதும் செல்வ வளத்தோடு நாம் வாழ முடியும் என்ற நம்பிக்கை பரவலாக மக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனை நடைபெறும் என சொல்லப்படுகிறது. இப்படி அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க செல்பவர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது. ஏராளமான நகை கடைகளில் அட்சய திருதியை முன்னிட்டு பல்வேறு சலுகைகளும் தள்ளுபடிகளும் அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க தவறி, ஆசை வார்த்தைகளை நம்பி தங்க நகையோ, தங்க நாணயமோ வாங்கி விட்டால் பின்னால் உங்களுக்கு பெரிய சிக்கல் ஏற்படும்.

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

அட்சய திருதியை மட்டுமல்ல எப்போது நீங்கள் தங்க நகை வாங்க சென்றாலும் பின்வரக்கூடிய குறிப்பிட்ட சில விஷயங்களை கவனிப்பது நல்லது. இந்தியாவில் அனைத்து தங்க நகைகளுக்குமே ஹால்மார்க் குறியீடு கட்டாயமாக இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் நகையாக வாங்கினாலும் சரி நாணயமாக வாங்கினாலும் சரி நீங்கள் வாங்கியது தங்கம் தானா என்பதை கண்டறிவதற்கு என்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் தான் பிஐஎஸ் ஹால்மார்க் குறியீடு.

நீங்கள் தங்கம் வாங்குவதற்கு முன்பு அதில் பிஐஎஸ் ஹால்மார்க் குறியீடு இருக்கிறதா என்பதை பார்ப்பது அவசியம். தங்க நகையோ அல்லது தங்க நாணயமோ அதில் எவ்வளவு சதவீதம் தூய்மையான தங்கம் கலந்திருக்கிறது என்பதை உறுதி செய்யக்கூடிய ஒரு சான்றிதழ் தான் ஹால்மார்க் குறியீடு. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படக்கூடிய அனைத்து தங்க நகைகளுக்கும் நாணயங்களுக்கும் ஹால்மார்க் குறியீடு வழங்குவதற்கான அதிகாரபூர்வ அமைப்பாக பிஐஎஸ் எனப்படும் இந்திய தர சான்றிதழ் அமைப்பு செயல்படுகிறது.

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

தங்க நகைகள் ஹால்மார்க் குறியீடு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அங்கே அந்த நகையின் தரத்தை ஆய்வு செய்து அது எவ்வளவு தூய்மையான தங்கம் என்பதற்கான சான்றிதழை வழங்குவார்கள். இது தான் ஹால்மார்க் குறியீடாகவும் HUID எண்ணாகவும் நகைகளில் இடம்பெற்றிருக்கும். நீங்கள் வாங்கும் நகையில் ஹால்மார்க் இடம் பெறாமல் இருந்தால் அது போலியான நகை. உங்களின் பணம் மொத்தமும் காலி.

தங்க நகை உண்மையானதா போலியானதா என்பதை கண்டறிய உங்கள் மொபைல் போனில் பிஐஎஸ் கேர் ( BIS CARE ) செயலியை டவுன்லோடு செய்து கொண்டாலே போதும். கூகுள் பிளே ஸ்டோரில் பிஐஎஸ் கேர் செயலியை டவுன்லோட் செய்து லாகின் செய்து கொள்ளுங்கள். இதனை அடுத்து ஒரு நகையின் தூய்மை தன்மையை கண்டறிவதற்கு verify HUID என்பதை கிளிக் செய்ய வேண்டும் அதனை கிளிக் செய்தவுடன் நீங்கள் வாங்க இருக்கக்கூடிய நகையின் HUID எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் search என்பதை கிளிக் செய்தால் அந்த நகை தொடர்பான அனைத்து விவரங்களும் அதில் காட்டும்.

உதாரணமாக அது என்ன மாதிரியான நகை ,எந்த தேதியில் அது ஹால்மார்க் செய்யப்பட்டது, அதன் தூய்மை தன்மை என்ன அதனை விற்பனை செய்யும் நகை கடையின் பதிவு எண் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் காட்டும். HUID என்பது ஒரு ஆறு இலக்க Alphanumerical கோடு ஆகும். அதாவது எழுத்துக்களும் எண்களும் கலந்த ஒரு குறியீடு.

ஒருவேளை குறிப்பிட்ட நகைக்கான விவரங்கள் செயலியில் காட்டவில்லை என்றால் அது போலி நகையாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போலி நகை வாங்கி ஏமாந்துவிடாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+