தங்கத்த வங்கி லாக்கர்ல வைக்க போறீங்களா? RBIஇன் இந்த விதிமுறைகள முதல்ல தெரிஞ்சுக்கோங்க..

சென்னையில் வங்கி மேலாளராக பணிபுரிந்த ஒரு நபரே வாடிக்கையாளரின் லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகளை திருடிய சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

வீடுகளில் தங்கத்தை வைத்தால் பாதுகாப்பில்லை என்பதற்காகத்தான் மக்கள் வங்கி லாக்கர்களை நம்பி தங்கத்தை வைக்கிறார்கள் . இதற்கு ஆண்டுதோறும் ஒரு பராமரிப்பு தொகையையும் வழங்குகிறார்கள். இந்த நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக வங்கி மேலாளரே லாக்கரில் இருந்த நகைகளை திருடிய சம்பவம் வங்கி லாக்கர்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

தங்கத்த வங்கி லாக்கர்ல வைக்க போறீங்களா?  RBIஇன் இந்த விதிமுறைகள முதல்ல தெரிஞ்சுக்கோங்க..

வங்கி லாக்கரில் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை வைக்கக்கூடியவர்கள் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், ஒருவேளை அதில் இருக்கக்கூடிய பொருட்கள் திருடு போனால் எவ்வளவு இழப்பீடு கிடைக்கும் என்பன உள்ளிட்ட விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி வங்கிகள் நிலையான லாக்கர் ஒப்பந்தத்தை வாடிக்கையாளரிடம் மேற்கொள்ள வேண்டும் . முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக லாக்கர் இருக்கும் இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். எந்த லாக்கரை யார் அணுகுகிறார்கள் எந்த பொருட்களை வைக்கிறார்கள் , எடுக்கிறார்கள் என்பது குறித்த பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

ஒரு லாக்கரை அணுகுகிறார்கள் எனும் போது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அது தொடர்பான எச்சரிக்கைகள் அனுப்பப்பட வேண்டும். லாக்கரில் இருக்கும் தங்கம் அல்லது பணம் ஊழியரால் திருடப்பட்டது அல்லது கொள்ளையர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது, வங்கியில் தீ விபத்து அல்லது இடிந்து விழுந்து சேதமடைந்து விட்டது எனும் போது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் ஆண்டு லாக்கர் வாடகையில் 100 மடங்கு தொகையை இழப்பீடாக வழங்கும்.

தங்கத்த வங்கி லாக்கர்ல வைக்க போறீங்களா?  RBIஇன் இந்த விதிமுறைகள முதல்ல தெரிஞ்சுக்கோங்க..

உதாரணமாக நீங்கள் ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாயை லாக்கருக்கான வாடகையாக செலுத்துகிறீர்கள் என்றால் வங்கியின் பொறுப்பின்மையால் நேரிடும் மேலே கூறிய இழப்புகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். அதற்கு மேல் மதிப்பு கொண்ட நகையோ பணமோ ஆவணமோ காணாமல் போயிருந்தாலும் உங்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் கூட கிடைக்காது.

மேலும் வங்கிகளில் வெள்ளப்பெருக்கு , நிலநடுக்கம் ஏற்படுவது உள்ளிட்டவற்றின் மூலம் நகைகளை நீங்கள் இழந்திருந்தால் உங்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் கிடையாது. இதனை வங்கிகள் கடவுளின் செயல் என்ற பிரிவில் கொண்டு வருகின்றன . வழக்கமாக லாக்கர் வாடகை , லாக்கரின் அளவு மற்றும் அந்த வங்கி கிளை அமைந்துள்ள இடத்தை பொறுத்து மாறும்.

கிராமப்புறங்களுடன் ஒப்பிடும் போது நகர்ப்புறங்களில் லாக்கர் கட்டணம் அதிகமாக தான் இருக்கும். லாக்கரில் நகை வைக்கும் போது ஒரு முறை பதிவு கட்டணம் செலுத்த வேண்டும், ஆண்டு வாடகை கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர இலவசமாக ஒரு ஆண்டுக்கு இத்தனை முறை தான் லாக்கர் அணுக முடியும் என்ற எண்ணிக்கை இருக்கும் அதை தாண்டி போகும் போது அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஒருவேளை நீங்கள் சாவியை தொலைத்து விட்டீர்கள் என்றால் லாக்கரை உடைத்து திறப்பதற்கான தனி கட்டணம் தேவை.

லாக்கரில் இருக்கும் பொருட்களுக்கு வங்கிகள் காப்பீடு வழங்காது. லாக்கரில் உள்ள பொருட்களை இழந்தால் நீங்கள் செலுத்திய வாடகையில் 100 மடங்கு தொகை இழப்பீடாக கிடைக்கும். எனவே லாக்கரில் இருக்கும் பொருட்களுக்கு காப்பீடு வேண்டும் என்றால் வாடிக்கையாளர் தான் தனிப்பட்ட முறையில் காப்பீடு பெற்று கொள்ள வேண்டும் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+