நிலம் , தங்கம், எஃப்டி- தான் பெஸ்ட்!! அடித்துக் கூறும் முதலீட்டு ஆலோசகர்

இந்தியாவை சேர்ந்த பல்வேறு முதலீட்டாளர்களும் அவர்களுக்கென ஒரு முதலீட்டு பாணியை வைத்திருக்கின்றனர். சிலர் நேரடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்குவார்கள், ஒரு சிலர் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என கூறுவார்கள் அல்லது வளர்ந்து வரக்கூடிய தொழில் நிறுவனங்களின் முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்குவார்கள்.

இப்படி ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் என ஒவ்வொரு முதலீட்டு பாணி இருக்கிறது. அப்படி இந்தியாவின் புகழ்பெற்ற முதலீட்டாளரான சங்கர் சர்மா அளித்த அறிவுரையை ஏற்று ஒரு தம்பதியினர் சரியான முறையில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்து தற்போது மிகச்சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. சங்கர் சர்மா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தன்னுடைய சகோதரியும் அவருடைய கணவரும் எவ்வாறு தன்னுடைய அறிவுரையை பின்பற்றி சரியான முதலீடுகளை மேற்கொண்டு தற்போது நிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பது குறித்து கூறியுள்ளார்.

நிலம் , தங்கம், எஃப்டி- தான் பெஸ்ட்!!  அடித்துக் கூறும் முதலீட்டு ஆலோசகர்

சங்கர் சர்மா அவர்களிடம் பங்குச்சந்தை பக்கமே போக வேண்டாம் என அறிவுரை வழங்கினாராம், அப்படி என்றால் அவர்கள் எவ்வாறு பணத்தை சேமிப்பது அவர்களுடைய செல்வத்தை எவ்வாறு பெருக்குவது என்ற கேள்வி எழுந்த போது அவர்களுக்கு சங்கர் சர்மா வழங்கிய அறிவுரை இதுதான்:

1. 40 சதவீத தொகை ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் போட வேண்டும். இது ஒரு நிலையான நீடித்த வருமானத்தை நமக்கு தருகிறது இதில் எந்த ஒரு ரிஸ்க்கும் கிடையாது.

2. 30 சதவீத தொகையை தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும், பாரம்பரியமாகவே பணவீக்கத்தை விட அதிக அளவு வருமானம் தரக்கூடிய ஒரு முதலீட்டு கருவி என்றால் அது தங்கம் தான்.

3. மீதமுள்ள 30 சதவீததொகையை அவர்கள் வசிக்கும் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் வெளியே அடுத்த சில ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை தரும் இடத்தில் நிலத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

அவரது இந்த அறிவுரையை சகோதரி குடும்பத்தினர் மிகச் சரியாக பின்பற்றியுள்ளனர். ஒரு சிறிய நகரத்தில் வசிக்கக்கூடிய அவர்கள் 35 ஆண்டு காலம் இதை ஒழுக்கமான முறையில் பின்பற்றினார்களாம் தற்போது அவர்கள் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றனர், அவர்கள் கைவசம் அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு செல்வம் இருக்கிறது என சங்கர் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த சொத்துக்காக அவர்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா குறித்தோ , அரசு வரி குறித்தோ, வட்டி விகிதங்கள் குறித்தோ , ஜிடிபி குறித்தோ , வர்த்தகப் போர் குறித்தோ கவலை இல்லாமல் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். அதாவது எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் பணத்தை சேமித்து வந்த அவர்கள் தற்போது எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாத நிம்மதியான வாழ்வை வாழ்கின்றனர் என கூறியுள்ளார்.

பொதுவாக தற்போதிருக்கும் முதலீட்டு ஆலோசகர்கள் சிக்கலான நிதி திட்டங்களை தான் பரிந்துரைக்கின்றனர், உடனடியாக தங்களுடைய பணத்தை பெருக்கி விட வேண்டும் என்பதற்காக பலரும் தங்களுக்கு தெரியாத மற்றும் புரியாத விஷயங்களில் முதலீடு செய்து விட்டு தினம் தினம் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஆனால் தன்னுடைய அறிவுரை அத்தகைய பிரச்சனைகளை தராது என கூறியுள்ளார்.

அதாவது நாம் எளிதாக புரிந்து கொண்டு எளிதாக மேலாண்மை செய்யக்கூடிய கருவிகளில் முதலீடு செய்வது தான் சிறந்தது என தெரிவித்துள்ளார். தான் கூறிய மூன்று விதமான முதலீடுகளுமே காலம் காலமாக நமக்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்தவை என்பதற்கான சான்று இருக்கக்கூடிய முதலீடுகள் ,மேலும் இதில் ஆபத்து குறைவாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

அளவு செல்வத்துடன் ஓய்வு பெற வேண்டும் என எண்ணுபவர்கள் எல்லாம் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து விட்டு சந்தை ஏறுகிறதா இறங்குகிறதா, நம்முடைய போர்ட்போலியோ மதிப்பு என்ன என்பது குறித்து நாள்தோறும் கவலைப்பட வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் இந்த பாரம்பரியமான சேமிப்பு முறை நமக்கு எந்த விதமான அழுத்தமும் இன்றி ஒழுக்கமான முறையில் பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பையும் பிற்காலத்தில் அதனை மன அமைதியோடு அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் தருகிறது என கூறியுள்ளார்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறோம் என்றால் தினந்தோறும் பங்குச்சந்தை ஏறுகிறதா இறங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும், இந்த பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் என்பது நம் நாட்டின் பொருளாதார சூழலை அடிப்படையாகக் கொண்டது. அதேபோல அரசு வெளியிடக்கூடிய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

தேர்தல் முடிவுகளை பொறுத்து சந்தையில் நாம் மாற்றங்களை காண முடியும், இது மட்டுமின்றி சர்வதேச அரசியல் சூழல்கள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என பல்வேறு காரணிகள் பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு ஏறுவதை முடிவு செய்கின்றன.

அதே போல தான் மியூச்சுவல் ஃபண்ட் என்பது நாம் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் நிறுவனங்கள் வழியாக முதலீடு செய்வது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச்சந்தை ஆகிய இரண்டிலுமே நமக்கு கிடைக்கக்கூடிய லாபங்கள் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. எனவே உறுதியாக இதில் இவ்வளவு லாபம் நமக்கு கிடைத்துவிடும் என்பதை நம்மால் கூற முடியாது.

நாம் பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என நினைக்கும் போது பங்குச்சந்தை இறக்கத்தில் இருந்தால் நம்முடைய போர்ட்போலியோ குறைந்து இருக்கும். நாம் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. இதான் நாம் பெரிய அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். எனவே ஒரு முதலீட்டு ஆலோசகர்களிடம் சென்று நாம் அவ்வப்போது நம்முடைய போர்ட்போலியோவை சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்தாக வேண்டும் .

அதுவே சர்மாவின் இந்த அறிவுரைப்படி நாம் செய்யக்கூடிய முதலீடுகள் நமக்கு காலம் காலமாக தெரிந்த முதலீடுகள் என்பதால் இதனை நாம் நிர்வகிப்பது மிகவும் எளிதானது அதுதான் இந்த தம்பதிகளுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்துள்ளது . தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து தான் வருகிறது. நிலத்தை பொறுத்தவரை நாம் சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+