நம் நாட்டில் நாளுக்கு நாள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிரெடிட் கார்டின் சாதக மற்றும் பாதகங்களை முழுமையாக தெரிந்துதான் அதனை அவர்கள் பயன்படுத்துகிறார்களா என்றால், நிச்சயமாக ஆமாம் என்று சொல்ல முடியாது.
பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம் என்று ஆசையில் அதனை வாங்குகிறார்கள். கிரெடிட் கார்டு பில்லை நிலுவை தேதிக்குள் சரியாக செலுத்தி விட்டால் அது அவர்களுக்கு வரம்தான், ஆனால் நிலுவை தொகையை செலுத்த தவறினால் அது அவர்களுக்கு பெரும் சாபமாக அமைந்து விடும்.

கிரெடிட் கார்டு பில்லை சரியான நேரத்தில் செலுத்த தவறினால் என்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
1.தாமதக் கட்டணம்
பொதுவாக கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் செலுத்த வேண்டிய மொத்த நிலுவை தொகையில் 5 சதவீதத்தை குறைந்தபட்ச நிலுவை தொகையாக கிரெடிட் கார்ட் வழங்குவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள். இது கிரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் செலுத்த வேண்டிய தேதி அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டிய வேண்டிய தொகையாகும்.
நிலுவை தேதிக்குள் செலுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகையை கூட நீங்கள் திருப்பி செலுத்த தவறினால் நிறுவனங்கள் தாமத கட்டணம் வசூலிக்கும். கூடுதலாக உங்கள் கிரெடிட் காா்டில் ஏற்கனவே உள்ள இ.எம்.ஐ.க்கள் மற்றும் பொருந்தக்கூடிய பல்வேறு கட்டணங்களும் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையில் சேர்க்கப்படும். குறைந்தபட்சத் தொகையை செலுத்தாததற்கு தாமதமாக செலுத்தும் கட்டணம் ஒரு பில்லிங் சுழற்சிக்கு ரூ.1,000-1,500ஆக இருக்கலாம்.
செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை சரியான நேரத்தில் செலுத்துவது தாமதமான கட்டண கட்டணத்திலிருந்து உங்களை காப்பாறும். அதேசமயம், மொத்த கிரெடிட் கார்டு பில் நிலுவை தொகையை விட குறைவாக செலுத்தினால், செலுத்தப்படாத பில் தொகையின் மீது ஆண்டுக்கு 40-49 சதவீதம் வரை அதிகமான நிதிக் கட்டணங்கள் விதிக்கப்படும் என்பதை மறந்து விடாதீங்க.
2.கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு
கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் மற்றும் முழுமையாக திருப்பி செலுத்த தவறினால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும். கிரெடிட் ஸ்கோர் என்பது உங்கள் கடன் தகுதியின் மூன்று இலக்க எண் பிரதிநிதித்துவமாகும்.
உங்கள் கடனை திருப்பி செலுத்திய வரலாற்றின் அடிப்படையில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. கிரெடிட் கார்டு பில்லை திருப்பி செலுத்த தவறினால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கலாம். இதனால் எதிர்காலத்தில் கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளை பெறுவது கடினமாகி விடும்.
உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் அடிக்கடி 30 சதவீத வரம்பை தாண்டினால், இது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு மேலும் எதிர்மறையாக அமையும். கிரெடிட் ஸ்கோர் கம்மியாக இருந்தால், உங்கள் கடன் மற்றும் கிரெடிட் கார்டு தகுதியை குறைக்கும் மேலும் எதிர்காலத்தில் ஒப்புதல் வாய்ப்புகளை குறைக்கிறது.
3.வட்டியில்லா காலம் திரும்ப பெறும் அபாயம்
உங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை செய்த தேதிக்கும் அதை செலுத்த வேண்டிய தேதிக்கும் இடைப்பட்ட காலம் வட்டி இல்லாத காலம். இந்த காலம் பொதுவாக 18 முதல் 55 நாட்கள் வரை இருக்கலாம். இந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்படும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், நிலுவை தேதிக்குள் திருப்பி செலுத்தப்படும் வரை நிதிக் கட்டணங்கள் வடிவில் வட்டி செலவுகள் வராது.
உங்கள் கிரெடிட் கார்டு நிலுவை தொகையை நீங்கள் சரியான நேரத்தில் செலுத்த தவறினால், கடன் வழங்குபவர்கள் உங்கள் வட்டியில்லா காலத்தை திரும்ப பெறலாம் மற்றும் புதிய கடன் பரிவர்த்தனைகளுக்கு முழு நிலுவை தொகையும் திரும்ப செலுத்தப்படும் வரை நிதி கட்டணங்கள் விதிக்கலாம். எனவே அடுத்தடுத்த பில்லிங் சுழற்சியில் உங்கள் புதிய பரிவர்த்தனைகளும் பொருந்தக்கூடிய நிதிக் கட்டணங்களையும் ஈர்க்கும்.
4.சலுகைகளை இழக்கும் ஆபத்து
கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் அறிக்கையின் அடிப்படையில் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளை வழங்குகின்றனர். உங்கள் திருப்பி செலுத்தும் வரலாற்றில் உள்ள முறைகேடுகள் மோசமான கிரெடிட் ஸ்கோரை விளைவிப்பதால், இது உங்களை தகுதியற்றதாக ஆக்கிய அத்தகைய முன் அங்கீகரிக்கப்பட்ட சலுகைகையும் அதனுடன் தொடர்புடைய பலன்களையும இழக்க செய்யலாம்.
கிரெடிட் கார்டு சலுகைகள் பொதுவாக சிறந்த புராடக்ட் அம்சங்கள், குறைந்த செயலாக்க நேரம் மற்றும் குறைந்த செலவினம் ஆகியவற்றை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், உங்கள் கடன் மற்றும் கிரெடிட் கார்டு தகுதியை பற்றிய நியாயமான கருத்தை பெறவும், மேலும் சிறந்த ஒப்பந்தத்தை பெற மற்ற கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் உதவலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications