தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES) பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் ஒரு புரட்சிகரமான திட்டமாகும். இத்திட்டத்தின் நோக்கம் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை சுயதொழில் செய்ய வைப்பது தான். இத்திட்டம் பொருளாதாரம், சமூக ரீதியாக பின்தங்கிய பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை தருகிறது. இல்லத்தரசிகள், இளம் பெண்கள் சொந்தக் காலில் நிற்க இத்திட்டம் பெரிய உதவியாக இருந்து வருகிறது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
TWEES திட்டத்தில் ரூ.10 லட்சம் வரையிலான திட்ட மதிப்புக்கு கடன் கிடைக்கும். இதற்கு சொத்து பிணை தேவையில்லை. திட்ட மதிப்பில் 25 சதவீதம் அதாவது அதிகபட்சம் ரூ.2 லட்சம் அரசு மானியமாக தரும். எளிதாக சொல்ல வேண்டுமாயின் நீங்கள் துவங்கும் தொழிலின் மதிப்பு 10 லட்சத்திற்கு கீழ் இருந்தால் இதற்கு 2 லட்சம் வரையில் தமிழ்நாடு அரசு மானியமாக தரும்.
இத்திட்டத்தின் விண்ணப்பதாரர்கள் 5 சதவீதம் மட்டும் முதலீடு செய்தால் போதும். மீதிமுள்ள தொகையை வங்கி கடனாக தரும். இதை எளிய தவணையில் திரும்ப செலுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் வின்ணப்பிக்கும் போது மீதமுள்ள 8 லட்சத்திற்கும் வங்கி வாயிலாக கடன் அளிக்கப்படும்.

யார் விண்ணப்பிக்கலாம்?
18 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி தேவையில்லை. வருமான உச்சவரம்பு இல்லை. விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி/எஸ்டி பிரிவினர், திருநங்கைகள் முன்னுரிமை பெறுவர். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே பயன்பெற முடியும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
எந்த தொழில்கள் துவங்கலாம்?
உற்பத்தி, வர்த்தகம், சேவை சார்ந்த தொழில்களுக்கு கடன் கிடைக்கும். அழகு நிலையம், தையல், பேக்கரி, கேட்டரிங், பொம்மை தயாரிப்பு, ஜிம், யோகா மையம் போன்றவை தொடங்கலாம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தொழில்கள் மட்டுமே TWEES திட்டத்தின் கீழ் அனுமதி கொடுக்கப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் போன்றவற்கு இல்லை. தொழிலை வெற்றிகரமாக நடத்த 3 நாள் ஆன்லைன் இலவச பயிற்சியும் தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை
TWEES திட்டத்திற்கான விண்ணப்பம் http://msmeonline.tn.gov.in/twees என்ற இணைய முகவரியில் செய்யலாம். ஆவணங்கள் மாவட்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டு வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை (DIC) அணுகலாம்.
TWEES திட்டம் பெண்களுக்கு சுயதொழில் தொடங்க பெரிய வாய்ப்பு. சொத்து பிணை இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன், 25% மானியம் ஆகியவை இதை எளிதாக்குகின்றன. இது பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி பெண்கள் தொழில் முனைவோராக உருவாக உதவும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications