முதலீடு தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. இதில் குடும்ப பெண்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டும் முதலீடு தங்கம் சார்ந்ததாக தான் இருக்கிறது.
நகை கடைகளில் மாதாந்திர சீட்டு போடுவதில் லாபம் இருக்கிறதா? அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்புத்தொகையில் லாபம் இருக்கிறதா என்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட்: நிலையான வைப்பு தொகைகள் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக டெபாசிட் செய்து அதில் மிதமான வட்டி வருமானம் பெறுவது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் பல்வேறு வட்டி விகிதங்கள் மற்றும் காலங்களை வழங்குகின்றன.
குறைந்த ஆபத்து மற்றும் நம்பகமான முதலீடுகளில் நிலையான வைப்பு தொகைகளும் ஒன்று. முதிர்ச்சி அடைந்தவுடன் வட்டியுடன் ஒரு உத்தரவாத தொகையும் கிடைக்கும் . குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன.
எவ்வளவு லாபம்: நிலையான வைப்புத் தொகைகளை பொறுத்தவரை ரிட்டர்ன்ஸ் என்பது டெபாசிட்டின் கால அளவை பொறுத்தது. சராசரியான சேமிப்பு கணக்கில் 4% மட்டுமே வட்டி கிடைக்கும், அதுவே நிலையான வைப்பு தொகைகளில் அந்த பணத்தை போட்டு வைப்பதன் மூலம் நமக்கு 5% முதல் 7% வரை வட்டி கிடைக்கும்.
வரி சுமை: நிலையான வைப்பு தொகைகள் தொடர்பான வரி , வரி விலக்கு ஆகியவை வரிச் சட்டங்களின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு பட்டியலிட்ட வங்கியில் ஐந்தாண்டுகளுக்கு மேல் கால அவகாசம் உள்ள மற்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையான வைப்பு தொகை திட்டங்களை எடுக்கும் போது வருமானவரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் 1,50,000 ரூபாய் வரை ஆரம்ப முதலீட்டிற்கு வரி விலக்கு பெறலாம். இதில் கிடைக்கும் வட்டியானது வரிக்கு உட்பட்டது, தனிநபர்கள் பிறமூலங்களிலிருந்து வருமானம் என்ற தலைப்பின் கீழ் வரி செலுத்த கடமைப்பட்டுள்ளனர்.
நகை சீட்டுகளில் பெரும்பாலும் மேக்கிங் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் முதலீட்டாளர்கள் கூடுதல் பலன்களை பெறுகின்றனர். அதாவது நகை சீட்டு போடுபவர்கள் அதில் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி சேதாரம் மற்றும் பிற கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை.
எவ்வளவு லாபம்: நகை சீட்டுகளில் தங்கத்தின் விகிதத்தை ஆரம்ப முதலீட்டு நேரத்திலேயே நிர்ணயிக்க முடியும். எனவே விகிதத்தில் ஏதேனும் ஏற்ற இறக்கங்கள் முதிர்வு நேரத்தில் வாங்கும் போது நிர்வகிக்கப்படலாம்.
உதாரணமாக நகை சீட்டில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5, 500, ஆனால் முதிர்வு காலத்தில் 6,000 ரூபாயாக இருந்தால் முதலீட்டாளர் 5,500 ரூபாய் என்ற ஆரம்ப விகிதத்தில் வாங்கலாம். இது முதலீட்டாளருக்கு லாபத்தை தருகிறது.
நகை சீட்டுகளில் பெரும்பாலும் மேக்கிங் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் முதலீட்டாளர்கள் கூடுதல் பலன்களை பெறுகின்றனர். அதாவது நகைச்சுவை போடுபவர்கள் அதில் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி சேதாரம் மற்றும் பிற கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை.
வரி சுமை: நகை சீட்டுகளுக்கு வரி விதிப்புகள் இல்லை. தனிநபர் இது தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டிய தேவையில்லை.
இரண்டில் எது சிறந்தது?
தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோர்களில் இந்தியா ஒன்று. பண்டிகை தொடங்கி வீட்டில் நடக்கும் விசேஷங்கள் வரை தங்கம் வாங்குவது நமது பழக்கமாகவே இருப்பதால் விலை அதிகரித்தாலும் தங்கத்திற்கான தேவை தொடர்கிறது.
முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நகை சீட்டு மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் ஆகியவற்றை கவனமாக ஒப்பிட வேண்டும். இதில் உள்ள அபாயம் என்ன, இதில் கிடைக்கும் வருமானம் என்ன மற்றும் பணமாக மாற்றக்கூடிய அம்சங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும் .
Story written by: Devika
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க



Click it and Unblock the Notifications