வரவிருக்கும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்க அனுமதி கிடையாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் நகை ஆர்வலர்கள், ஏற்கனவே பெரியளவில் நகை வைத்துள்ளவர்கள் மத்தியில் பல கேள்விகளையும் குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக முத்திரை இல்லாமல் இருக்கும் பழைய நகைகள் மதிப்பிழந்து விடலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கையில் நகைகளை என்ன செய்யலாம். விற்று விட்டு புதிய நகைகளாக வாங்கிக் கொள்ளலாமா? ஏன் அவசியம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஹால்மார்க் கட்டாயம்
தங்க நகைகளுகு அவசியம் என கூறப்படும் ஹால்மார்க் முத்திரை என்பது (HUID) ஆறு இலக்க எண்கள் கொண்ட ஒரு குறியீடாகும். ஆக இந்த குறியீட்டினைத் தான் தங்க நகைகளுக்கு இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை என்பது நகைகளுக்கு மதிப்பளிக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பகத்தன்மையை கொடுக்கிறது.
ஏன் அவசியம்?
தங்க நகைகளின் மீதான இந்த ஹால்மார்க் தரக் குறியீடானது, உங்கள் தங்கத்தின் தூய்மை மற்றும் தரத்தினை உறுதி செய்யும் வகையில் இந்திய தர நிர்ணய அமைப்பான BIS மூலம் தான் தரப்படுகிறது. ஆக நீங்கள் வாங்கும் தங்க நகை என்பது தரமானதா? என்பதை நீங்கள் இந்த குறியீட்டினை வைத்தே தீர்மானித்துக் கொள்ளலாம்.
சரியாக பார்த்து வாங்குங்கள்?
ஒரு வேளை நீங்கள் வாங்கும் நகைகளில் இந்த ஹால்மார்க் முத்திரை என்பது இல்லாவிட்டால், இதனை ஏன் போடவில்லை என கடைகாரர்களிடம் கேட்கலாம். அப்படி இல்லாவிட்டால் அது கலப்பட நகையாக தரம் குறைந்த நகையாகவும் இருக்கலாம். ஆக கட்டாயம் ஹால்மார்க் இருக்கும் நகையாக வாங்குவது நல்லது.
என்னவெல்லாம் அவசியம்?
ஹால்மார்க் முத்திரை என்பது மூன்று குறியீடுகளை கொண்டது.
ஒன்று BIS குறியீடு
தரம் மற்றும் தூய்மை குறியீடு
HUID எண் என இடம்பெற்றிருக்க வேண்டும்.
எனினும் நகைகளை பொறுத்தவரையில் எந்த நகையும் தூய்மையான தங்கம் கிடையாது. ஏனெனில் தூய்மையான 24 கேரட் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது என்பதால், அவற்றில் சில உலோகங்கள் கலக்கப்படும். இதில் கலக்கப்படும் உலோகங்களின் விகிதத்ங்களை பிரித்து பல்வேறு ரகங்களாக பிரிக்கப்படுகின்றது.
எவ்வளவு தங்கம் இருக்கும்?
91.6% தங்கம் உள்ள நகை 22 கேரட் 916 நகையாகும். 18 கேரட் 750 என்றால் 18 கேரட் ஆகும், இதில் 75% தங்கம் இருக்கும். இதே 14 கேரட் எனில் 58.5% தங்கம் இடம்பெற்றிருக்கும்.
ஆக இனியேனும் தங்கம் வாங்கும்போது அவற்றில் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா? நீங்கள் வாங்கும் நகை தரமானதா? என பார்த்துக் வாங்க வேண்டும். அப்படி இல்லாவிடில் நீங்கள் உங்கள் நகைகளை திரும்ப விற்பனை செய்யும்போது அவற்றின் மதிப்பு குறைக்கப்படலாம். இது உங்களுக்கு தான் பிரச்சனையாக மாறும். ஆக வாங்கும்போதே அதனை சரி பார்த்து வாங்கிக் கொள்வது நல்லது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications