பொதுவாக தங்கம் என்றாலே இன்றைய நடுத்தர குடும்பங்களில் அவசர காலத்தில் உதவும் ஆபத்பாந்தவானாக உள்ளது. இன்றும் பல குடும்பங்களில் தங்கம் வாங்குவதே அவசர தேவைக்கு தங்கத்தினை வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பதால் தான்.
தங்கத்தினை 18 காரட் முதல் 24 காரட் வரையில் வாங்கிக் கொள்ளலாம். இதனை வைத்து கடன் வாங்குவதும் எளிது. விரைவில் பெற்றுக் கொள்ளலாம். வட்டியும் குறைவு.
இந்த தங்கத்தினை எதற்காக பிணையமாக வைத்து கடன் வாங்கலாம், நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
வணிக தேவைகள்
வணிக தேவைகளுக்காக உங்கள் தங்கத்தினை அடமானமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு விழாக்கால பருவம் மற்றும் விடுமுறை பருவத்தில் விற்பனை அதிகரிக்கும்போது, கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அந்த மாதிரியான சமயங்களில் உங்களது நகையினை அடகு வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் விரைவில் பெற முடியும். மற்ற கடன்களை காட்டிலும் வட்டியும் குறைவாக இருக்கும்.
திருமணம்
இந்திய திருமணங்களில் தங்கம் என்பது இல்லாமல் நிச்சயம் இருக்காது. எனினும் இந்த திருமணங்களை நடத்த, அதுவும் திடீரென திருமணம் வைக்கப்படும்போது, தங்கத்தினை பிணையமாக வைத்துக் கடன் பெற்றுக் கொள்ளலாம். அதன் மூலம் உங்களுக்கு தேவையான நேரத்தில், எளிதில் கடன் பெற்றுக் கொள்ளலாம். திருமண செலவுக்கும் பெற்றுக் கொள்ளலாம்.
ஹெல்த் பிரச்சனை
பலரும் உடல் நலப்பிரச்சனைகளுக்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் கடன் பெறுகின்றனர். அதனை இப்படி தங்கத்தின் மீதான கடனாகவும் பெறலாம். இது அவசர தேவைக்கும் உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் ஹெல்த் பிரச்சனைகளையும் விரைவில் சமாளிக்க முடியும்.
போக்குவரத்து
விழாக்கால பருவத்தில் ஏதேனும் தூரமான தளங்களுக்கு பயணம் செய்ய நினைக்கும்போது, அந்த மாதிரியான சமயங்களில் செலவுக்காக இதனை அடகு வைத்துக் கொள்ளலாம். பலரும் விடுமுறை காலத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது இது போன்று திட்டமிடுவதுண்டு.
சொத்து வாங்கும்போது
சில நேரங்களில் தங்கத்தின் மீது கடன் வாங்கி அதனை மற்றொரு சொத்துகளில் முதலீடு செய்வார்கள். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வீடு அல்லது பெரிய வாகனங்கள் வாங்குகிறீர்கள் எனில், இதனை வைத்துக் கடன் வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் அதிக வட்டியில் இருந்து தப்பிக்க முடியும். இதில் தனி நபர் கடன்களை காட்டிலும் வட்டி குறைவு தான்.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

அட்சய திருதியை: தங்கம் Pre- Booking செய்வதால் நமக்கு என்ன லாபம்? Pre- Bookingஇல் கவனிக்க வேண்டியது என்ன?

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?



Click it and Unblock the Notifications