தங்கத்தை விரும்பாதவர்கள் யார்..? இந்தியா, சீனா, அரபு நாடுகளில் தங்கத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தினாலும், அமெரிக்கா, ஐரோப்பாவில் அரசு, மத்திய வங்கிகள் தங்களுடைய பணவீக்கம், நாணய புழக்கம், நாணய மதிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் தங்கம் பயன்படுகிறது.
இதனால் தங்கம் உலகெங்கிலும் மதிப்புமிக்க ஒரு பொருளாகவே திகழ்கிறது. இது நகை செய்வது, அலங்கார பொருட்கள், சில உணவுகள் முதல் முதலீடு செய்வது வரையில் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட தங்கத்தின் விலை இந்தியாவில் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது.

சர்வதேச தங்க விலை : தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் மிக முக்கியமான விஷயம் சர்வதேச தங்க விலை. லண்டனில் உள்ள லண்டன் புல்லியன் மார்க்கெட்டில் (London Bullion Market) தீர்மானிக்கப்பட்ட விலையில் தான் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கத்தை வாங்கவும் விற்கவும் செய்கின்றன, இதில் இந்தியாவும் ஒன்று. London Bullion Market போல் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் பல அமைப்புகள் உள்ளது.
இந்தியாவின் தங்க இறக்குமதி: இந்தியா தனது தங்கத்தின் தேவையைப் பெரும்பகுதியை இறக்குமதி வாயிலாகவே ஈடு செய்கிறது. எனவே, இந்தியாவில் தங்கத்தின் விலையில் இறக்குமதி கட்டணமும் பெரும் பகுதி வகிக்கிறது.
அன்னிய செலாவணி: இறக்குமதி கட்டணத்தில் பெரிய பிரச்சனையே தங்கத்தை இந்தியாவின் ரூபாய் மதிப்பில் வாங்க முடியாது, இதற்காக ரூபாயை அமெரிக்க டாலருக்கு மாற்றப்பட்டு அதன் வாயிலாகத் தான் வாங்க முடியும். உதாரணமாக இந்திய மக்கள் அதிகப்படியான தங்கம் வாங்கினால் நாட்டின் அன்னிய செலாவணி குறைந்து ரூபாய் மதிப்பும் சரியும்.
சவ்ரின் கோல்டு பாண்ட் : இதைச் சரி செய்யவே மத்திய அரசின் உத்தரவின் பெயரில் இந்திய ரிசர்வ் வங்கி சவ்ரின் கோல்டு பாண்ட் அறிமுகம் செய்து தங்கத்தில் முதலீடு செய்வதைப் போலவே தங்கத்தின் விலையில் பத்திரங்கள் விற்கப்பட்டு அதற்கு வட்டியும் கொடுக்கப்படுகிறது.
ஆர்பிஐ : இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் காலாண்டில் மட்டும் 9 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. உலக நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் செப்டம்பர் காலாண்டில் வாங்கப்பட்ட 337 டன் தங்கத்தில் இந்திய வெறும் 9 டன்கள் மட்டுமே வாங்கியுள்ளது.
டிமாண்ட் : இந்தியாவில் தங்கத்தின் விலையில் விநியோகம் மற்றும் தேவையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. திருமணங்கள், பண்டிகைகள், மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகளின் போது தங்கத்தின் தேவை அதிகரிக்கும்போது, தங்கத்தின் விலை உயரும். அதேபோல், தங்கத்தின் விநியோகம் அதிகரிக்கும்போது, விலை குறையும்.
ஹெட்ஜிங் : பொருளாதாரம் நிலையற்றதாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். இதன் விளைவாக, தங்கத்தின் விலை உயரும்.
மத்திய அரசு நடவடிக்கை: இந்திய அரசின் கொள்கைகளும் இந்தியாவில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக அரசு தங்கம் இறக்குமதி வரியை அதிகரித்தால், தங்கத்தின் விலை உயரும். அதேபோல், அரசு தங்கத்தின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தினால், தங்கத்தின் விலை குறையும்.


Click it and Unblock the Notifications