சமீபகாலமாக பங்குச் சந்தைகளில் பல தரப்பினரும் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக இளம் தலைமுறையினர், கல்லூரி மாணவர்கள், சில பள்ளி மாணவர்கள் கூட தற்போது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை முதலீடு என்பது இப்போது பலரது வீட்டில் குடும்ப ஹாப்பியாக மாறியுள்ளது, ஒன்றாக ஆலோசித்து முதலீடு செய்யும் பழக்கத்தை கொண்டு உள்ளது.
இந்த நிலையில் பங்குச் சந்தையில் சம்பாதிக்கும் பணத்துக்கு பல வகையில் வரி விதிக்கப்படுகிறது. பங்குச் சந்தை வருமானத்துக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு முதலீட்டாளரும் அறிந்து வைத்து கொள்வது அவசியம். பங்குகள் விற்பனை மற்றும் வாங்குதலின் வாயிலாக கிடைக்கும் வருமானம் வணிக வருமானம் அல்லது மூலதன ஆதாயத்தின் கீழ் வரும்.

பங்குகளை நாம் எவ்வளவு காலம் வைத்திருந்து அதனை விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறோம் என்பதை பொறுத்து அது நீண்ட கால மூலதன ஆதாயமா அல்லது குறுகிய கால மூலதன ஆதாயமா என்று முடிவு செய்யப்படும்.
12 மாதங்களுக்கு மேல் பங்குகளை வைத்திருந்தால் அது நீண்ட கால மூலதன ஆதாயத்தின் கீழ் வரும். அதேசமயம் 12 மாதங்களுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் அது குறுகிய கால மூலதன ஆதாயமாக கருதப்படும்.
லைன் டெலிவரியில் பங்குகளை விற்கப்பட்டால் அது ஊகமற்றது மற்றும் சாதாரண வணிக வருமானம் அல்லது மூலதன ஆதாயமாக வரி விதிக்கப்படலாம். futures and options-ல் வர்த்தகம் செய்தாலும் அது ஊக வணிகம் அல்லாத வருமானமாக கருதப்படுகிறது என்று தெரிவித்தார்.
வணிக வருமானத்துக்கு வழக்கமான ஸ்லாப் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது. குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கு பொதுவாக 15 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மேலும் வணிக லாபத்திலிருந்து தற்செயலான செலவினங்களை குறைத்து வரி விதிக்கக்கூடிய லாபத்தை கணக்கிட அனுமதிக்கிறது.
அதேசமயம் பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் உள்ள நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ.) வாயிலான வருமானத்துக்கும் அதே விதிகள்தான். பங்கு ஒதுக்கீடு இறுதி செய்த பிறகு டீமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்பட்ட தேதியிலிருந்து ஹோல்டிங் காலம் கணக்கிடப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications