இந்தியாவில் தங்க நகைகள் வாங்கும் போது நாம் அந்த தங்கத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்துவது கிடையாது. தங்கத்திற்கான அன்றைய நாளின் விலை அத்துடன் சேர்த்து ஜிஎஸ்டி , செய்கூலி, சேதாரம் என்ற கூடுதல் கட்டணங்களையும் நாம் செலுத்த வேண்டி இருக்கிறது.
தங்க நகை விலை: ஒரு பவுன் நகையின் விலை 95,000 ரூபாய் என்றால் அத்துடன் செய்கூலி, சேதாரம் , ஜிஎஸ்டி ஆகியவை எல்லாம் சேர்த்து கூடுதலாக 10000 முதல் 20000 ரூபாய் என மொத்தம் நாம் ஒரு பவுன் நகை வாங்க 1.15 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டி இருக்கிறது. நகைகளுக்கு மட்டும் இந்த செய்கூலி சேதாரம் ஏன் வசூல் செய்யப்படுகிறது , ஏன் ஒவ்வொரு நகைக்கும் இந்த செய்கூலி சேதாரம் மாறுபடுகிறது என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம் .

நகை வாங்க கடைக்கு செல்லும் முன்பு செய்கூலி என்றால் என்ன, சேதாரம் என்றால் என்ன அது எவ்வளவு சதவீதம் விதிக்கப்படுகிறது , அது எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டால் ஏமாறாமல் கூடுதல் தொகையை செலுத்தாமல் சரியாக நகை வாங்க முடியும்.
செய்கூலி என்றால் என்ன: இந்தியாவில் தங்க கட்டிகளை வாங்கி வந்து அதனை நகையாக மாற்றுவதற்கு ஆகும் செலவுதான் செய்கூலி என அழைக்கிறோம். இதில் நகையை வடிவமைப்பது, அந்த வடிவமைப்புக்கான ஒரு கருத்தியலை கொண்டு வருவது , மற்றும் கைவினை செய்வது ஆகியவை அடங்கும் . இந்த செய்கூலி என்பது ஒவ்வொரு நகைக்கும் ஒவ்வொரு டிசைனுக்கும் மாறுபடுகிறது . அதேபோல ஒவ்வொரு கடைகளுக்கும் மாறுபடுகிறது ஒவ்வொரு நகரங்களுக்கும் மாறுபடுகிறது.
எந்த நகைக்கு செய்கூலி அதிகம்: செய்கூலியை பொறுத்தவரை கைகளால் வடிவமைக்கப்பட்ட நகைகள், மெசின் கட்டிங் நகைகள் என இரண்டு விதங்களில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நகையின் வடிவம் மிகவும் சிக்கலானதாக இருந்தால் அதற்கு செய்கூலி அதிகம், கைகளால் வெட்டி வடிவமைக்கப்படும் நகைகளிக்கு செய்கூலி அதிகம். அதுவே மெஷின் கட்டிங் நகைகளுக்கு செய்கூலி குறைவு.

எப்படி கணக்கீடு: சராசரியாக இந்தியாவில் 22 கேரட் தங்க நகைகளுக்கு 5 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை செய்கூலியாக வசூல் செய்யப்படுகிறது. அதாவது அந்த தங்கத்தின் மொத்த மதிப்பில் 5 லிருந்து 25% என வசூலிக்கப்படுகிறது. சில கடைகளில் ஒரு கிராமுக்கு இவ்வளவு செய்கூலி என முடிவு செய்வார்கள், சில கடைகளில் சதவீத அடிப்படையில் கணக்கிடுவார்கள்.
உதாரணமாக ஒரு கிராமுக்கு 500 ரூபாய் செய்கூலி என முடிவு செய்து வைத்திருப்பார்கள் நாம் 10 கிராம் நகை வாங்குகிறோம் என்றால் 10 *500 = 5000 ரூபாய் என்பது செய்கூலி ஆகும். இதுவே சதவீத அடிப்படையில் பார்த்தால் நீங்கள் 95,000 ரூபாய் மதிப்புள்ள நகை வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் அதில் 10% செய்கூலி என்றால் 9,500 ரூபாய் செய்கூலியாக வசூலிக்கப்படும்.
சேதாரம் என்றால் என்ன: நகை வாங்கும் போது சேதாரம் என ஒரு கணக்கு சொல்வார்கள். அதாவது தங்க கட்டிகளை நகையாக மாற்றும் போது அதனை வெட்டுவது ஒட்டுவது என தங்கம் அதில் வீணாகும். அதற்கும் நம்மிடமே கட்டணம் வசூல் செய்வார்கள் அது தான் சேதாரம் எனப்படுகிறது. நாம் வாங்கக்கூடிய நகையின் எடையில் ஒரு கணிசமான சதவீதத்தை சேதாரமாக விதிக்கிறார்கள் .
இந்தியாவில் 5 லிருந்து 7 சதவீதம் வரை இந்த சேதாரம் என்பது வருகிறது. பாரம்பரிய முறையில் கைகளால் செய்யப்பட்ட நகைகள் எனும் போது சேதாரம் அதிகமாக இருக்கும் , நவீன மாடல் முறைகளில் இயந்திரங்களை கொண்டு செய்யப்படும் நகைகளில் இந்த சேதாரம் என்பது குறைவாக இருக்கும் . செய்கூலி என்பது ஒரு தங்கத்தை வாங்கி அதனை நகையாக மாற்றுவதற்கு ஆகும் செலவு , சேதாரம் என்பது நகையாக மாற்றும்போது ஏற்படக்கூடிய தங்கத்தின் இழப்புக்கு வசூல் செய்யப்படும் கட்டணமாகும் .
More From GoodReturns

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications