என்ன பாஸ், 18 வயது ஆயிடுச்சா? காலேஜ் போயாச்சு. லைசென்ஸ் எடுத்தாச்சு, அடுத்து என்ன? நம்ம நாட்டோட தலையெழுத்தை தீர்மானிக்கும் வாக்காளர் அடையாள அட்டை வாங்க வேண்டாமா? ஐயோ நாள் கணக்கில் போய் அரசு அலுவலகங்களில் காத்து கிடக்கணுமேங்கிற கவலை இருக்கா, அப்படி எல்லாம் யோசிக்காதீங்க. இப்போ இருக்கிற டிஜிட்டல் உலகத்துல, நீங்க உங்க பெட்ல படுத்துகிட்டே கூட, 10 நிமிடங்களில் அப்ளை செய்து விடலாம்.
அதற்கு என்னென்ன ஆவணங்கள் எல்லாம் வேணும்? எப்படி அப்ளை செய்வது எப்படி? செய்ய வேண்டியது என்ன? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

வாக்காளர் அடையாள அட்டை என்பது இந்தியாவில் வாக்களிக்க தகுதியுள்ள குடிமக்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் ஒரு அதிகாரப்பூர்வ புகைப்பட அடையாள ஆவணமாகும். இந்த அடையாள ஆவணத்தை ஆன்லைன், ஆப்லைன் என இருமுறைகளிலும் பெறலாம்.
ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது?
ஸ்டெப் 1: https://voters.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: முகப்பு பக்கத்தில் வலது மேல் மூலையில் உள்ள Sign up என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்கள் மொபைல் எண், இமெயில் ஐடி மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் முதல் பெயர்/கடைசி பெயர் கொடுத்து Resend OTP என்பதை கொடுக்கவும்.
ஸ்டெப் 5: அதன் பிறகு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும், மெயில் ஐடிக்கும் வரும் OTP -ஐ பதிவு செய்து verify பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: இப்போது Login பக்கம் மீண்டும் தொடங்கும். அதில் உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை கொடுத்து மீண்டும் Request OTP கொடுக்கவும்.
ஸ்டெப் 7: உங்கள் மொபைலுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு, Verify & Login பட்டனை கிளிக் செய்து உள்நுழையவும்.
ஸ்டெப் 8: முகப்பு பக்கத்தில் உள்ள New voter registration பிரிவின் கீழ் இருக்கும் Fill Form 6 என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 9: படிவம் 6-ல் (Form 6) கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், உறவினர் விவரங்கள், தொடர்பு எண், ஆதார் எண், பிறந்த தேதி, முகவரி போன்ற அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும். தேவையான ஆவணங்களை (Documents) உரிய இடங்களில் பதிவேற்றம் செய்து, Preview and Submit பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 10: நீங்கள் உள்ளீடு செய்த அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துவிட்டு, Submit என்பதை கிளிக் செய்யவும்.
பான் - ஆதார் இன்னும் லிங்க் பண்ணலயா? ஆன்லைனில் ஈஸியா லிங்க் செய்வது எப்படி?
நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்து முடித்திருந்தால், உங்களுடைய பார்ம் நிலையை தெரிந்து கொள்ள மீண்டும் https://voters.eci.gov.in/ என்ற பக்கத்திற்கு சென்று லாகின் செய்து, உங்களுடைய அப்ளிகேஷனை டிராக் செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் அப்ளை செய்யத் தெரியாதவர்கள், அருகில் இருக்கும் மாநில தேர்தல் அலுவலகம் சென்று, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து பார்ம் 6 கொடுக்க வேண்டும். அதோடு ஒரு போட்டோ மற்றும் தேவையான ஆவணங்கள் (அடையாள அட்டை, முகவரிக்கான ஆவணம்(ஆதார் கார்டு, லைசென்ஸ்..) பிறந்த தேதிக்கான ஆவணம்) கொடுக்க வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications