டிஜிட்டல் இந்தியாவில் டீ கடையில் இருந்து பெரிய பெரிய ஷோரூம் வரைக்கும் எல்லாமே ஆன்லைன் ஆயிடுச்சு. அந்த வரிசையில் உங்க பான் (PAN) கார்டை ஆதாருடன் (Aadhaar) இணைப்பது இப்போது வெறும் ஆப்ஷன் இல்ல, அது ரொம்ப கட்டாயம்.
அதெல்லாம் சரி, அதைப் பண்ண என்ன பண்ணனும்? வெயில்ல அலைஞ்சு இன்கம் டாக்ஸ் ஆபீஸ் போகணுமா?' அப்படின்னு யோசிக்கிறீங்களா? அதான் இல்ல, ஆபிஸ் ஆபிஸா ஏறி இறங்கி உங்க நேரத்தையும் சக்தியையும் வீணாக்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்க உங்க வீட்ல சோபால ரிலாக்ஸா உட்கார்ந்துகிட்டே, கையில இருக்கிற மொபைல் போன் மூலமா வெறும் 5 நிமிடத்தில், இதை சூப்பரா முடிச்சிடலாம்.

ஆதார்-பான் லிங்க் பண்ணலனா உங்க பான் கார்டு இன்-ஆக்டிவ் ஆகிடும். அதனால பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்றதுல இருந்து, மியூச்சுவல் ஃபண்ட், ஐடி ரிட்டர்ன்ஸ்னு எல்லாத்துலயும் முட்டுக்கட்டை வரும். இந்தச் சிக்கல்கள் எதுவும் இல்லாமல், சிம்பிளா இதை எப்படி முடிக்கிறது? இதோ உங்களுக்கான ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு..
கடந்த ஜுலை 1, 2017-க்கு முன்னதாக பான் கார்டு வாங்கிய அனைவரும் ஆதாருடன் இணைப்பது அவசியமான ஒன்று. இப்போது புதிதாக பான் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு, விண்ண நிலையில் தானாக, ஆதாருடன் இணைக்கப்பட்டு விடுகிறது. எனவே அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் பழைய கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் லிங்க் செய்ய வேண்டும். அப்படி லிங்க் செய்யாவிட்டால் பான் கார்டு இன் - ஆக்டிவ் ஆகிவிடும் என பல முறை நிதியமைச்சகம் கால அவகாசம் கொடுத்துவிட்டது. ஆனால் தற்போது வரையில் சிலர் அதை செய்த பாடில்லை. இதை எளிதாக வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பித்து விடலாம். இதற்காக உங்கள் கையில் பான் கார்டு, ஆதார் எண், செயலில் உள்ள மொபைல் எண் உள்ளிட்டவை அவசியம்.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
ஸ்டெப் 1: வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளமான https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். அங்கு Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: அடுத்ததாக தொடங்கும் புதிய பக்கத்தில் ஆதார் மற்றும் பான் எண்ணை கொடுத்து Validate என்பதை கொடுக்க வேண்டும்.
ஸ்டெப் 3: ஒரு வேளை அபராதம் செலுத்த வேண்டியிருந்தால், e- Pay tax மூலம் கட்டணத்தை செலுத்தலாம். இதற்காக நீங்கள் ஆதார் பான் எண்ணை கொடுத்து உறுதி செய்யும்போதே ஒரு சிறிய பாக்ஸ் ஓபன் ஆகும். அதில் Continue to pay Through e-Pay tax என்பதை கிளிக் செய்ய வேண்டும். இது e-Pay tax என்ற பக்கம் தொடங்கும்.
ஸ்டெப் 4: உங்களுடைய பான் எண்ணை இருமுறை கேட்கும், பிழை இல்லாமல் சரியாக கொடுக்க வேண்டும். அதன் பிறகு உங்களுடைய மொபைல் நம்பரையும் பதிவு செய்ய வேண்டியிருக்கும். பதிவு செய்த பிறகு Continue என்பதை கொடுத்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
ஸ்டெப் 5: ஓடிபி வெரிஃபிகேஷன் முடிந்த பின்னர், அது மீண்டும் e- Pay tax பக்கத்திற்கு திரும்பும். அங்கு வருமான வரி என்ற ஆப்சனில் இருக்கும் Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 6: தொடங்கும் அடுத்த பக்கத்தில் New Payment என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் கீழாக Fee for delay in linking pan with Aadhaar என்பதை கிளிக் செய்து Continue கொடுக்க வேண்டும். இது புதிதாக இன்னொரு பக்கத்தில் தொடங்கும்.
ஸ்டெப் 7: தொடங்கிய New Payment என்ற புதிய பக்கத்தில் Others என்ற ஆப்ஷனில், எவ்வளவு தொகை என்பது பூர்த்தியாகி இருக்கும். அதை கிளிக் செய்த பின்னர் Continue என்பதை கொடுத்தால், அடுத்தாக நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தை எந்த வகையான பரிவர்த்தனை மூலம் செலுத்த போகிறீர்கள் என கேட்கும். அதை கிளிக் செய்தால் நேரடியாக உங்கள் பரிவர்த்தனை ஆப்சனிற்கே செல்லும். அங்கு நீங்கள் வெற்றிகரமாக கட்டணத்தை செலுத்திய பிறகு, நீங்கள் ஆதார் -பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
@ ஏறுமுகத்தில் தங்கம்.. திகைப்பில் சாமானியர்கள்! இப்போதே முதலீடு செய்யலாமா?
பணம் கட்டிய பிறகு எப்படி இணைப்பது?
ஸ்டெப் 1: efiling portal தளத்திற்கு சென்று லாகின் செய்து, அதன் கீழ் உள்ள Dashboard-ல் profile என்ற பிரிவில் உள்ள ஆதார் டூ பான் லிங்க் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து லிங்க் என்பதை கிளிக் செய்யலாம். அப்படி இல்லாவிட்டால் தனிப்பட்ட விவரங்கள் பகுதியில் லிங்க் ஆதார் என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து ஆதார் நம்பரை கொடுத்து உறுதி செய்ய வேண்டும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications