நேற்று ஒரு விலை, இன்று ஒரு விலை என ராக்கெட் வேகத்தில் தங்கம் விலையானது அனுதினமும் எகிறிக் கொண்டிருக்கிறது. நடுத்தர குடும்பங்களின் திருமண கனவுகளையும், சிறு முதலீட்டாளர்களின் லாப கணக்கையும் தவிடு பொடியாக்கி இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராமுக்கு 1.60 லட்சம் ரூபாயை கடந்துள்ளது. இந்த விலை ஏற்றம் இன்னும் தொடருமா அல்லது உச்சத்தில் இருப்பதால் இப்போது வாங்குவது ரிஸ்க்கா? நிபுணர்களின் கணிப்பு என்ன என பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்தியர்களை பொறுத்த வரையில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் என்பதை தாண்டி, மிகவும் இக்கட்டான சூழல்களில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. இருப்பினும் இந்த உச்ச விலையில் வாங்குவது நல்லதா, அது புத்திசாலித்தனமா அல்லது விலை சரியும் வரை காத்திருக்க வேண்டுமா? வாருங்கள் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு அரசியல் பதற்றங்கள் மத்தியில், இந்திய கமாடிட்டி சந்தையில் 10 கிராம் தங்கம் விலையானது 1,60,049 ரூபாயாக உச்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த வர்த்தக தினத்தில் இருந்து பார்க்கும்போது 2.02% ஏற்றம் கண்டுள்ளது.

காமெக்ஸ் சந்தையை பார்க்கும்போது அவுன்ஸூக்கு 5,182 டாலர் என்ற நிலையில் காணப்படுகிறது. இதுவும் கடந்த 24 மணி நேரத்தில் 2% ஏற்றம் கண்டுள்ளது. இந்த போக்கானது ஆபரண சந்தையிலும் தங்கம் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 90.73 ரூபாயாக காணப்படும் நிலையில், தொடர்ந்து வீழ்ச்சி காணலாமோ என்ற அச்சமும் காணப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையை மேலும் ஊக்குவிக்கலாம்.
கடந்த வாரத்தில் டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சிமாநாட்டில் இந்தியாவிற்கேற்ற பிரத்யேக ஏஐ கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இது இனி வரும் காலத்தில், இந்தியாவிற்குள் வெளிநாட்டு நிதி முதலீடுகள் தொடர்ந்து வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் கைகோர்த்திருப்பது இந்த முதலீட்டு வரவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய காலமாக பல்வேறு புவிசார் அரசியல் பிரச்சனைகள் தொடர்ந்து தங்கத்தை ஊக்குவித்து வருகின்றன. குறிப்பாக தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்திற்கு வர 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வார இறுதியில் தங்கத்தின் விலையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஒருவேளை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு அமைதி திரும்பினால், லாபத்தை எடுக்க முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பார்கள். இதனால் விலை சற்று குறையும். மாறாக மோதல் அதிகரித்தால், தங்கத்தின் விலை மீண்டும் கிடுகிடுவென உயரக்கூடும்.
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் விலையானது கிராமுக்கு 180 ரூபாய் அதிகரித்து, 14,860 ரூபாயாக காணப்படுகிறது. ஒரு சவரன் விலை 1,18,880 ரூபாயாக காணப்படுகிறது. இதே 24 கேரட் தங்கம் விலையானது 196 ரூபாய் அதிகரித்து, 16,211 ரூபாயாகவும் காணப்படுகிறது. தங்கம் விலையானது தற்போது உச்சத்தில் இருப்பதால், சாமானியர்கள் மூன்று முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று அவசரத் தேவையாக இருந்தால் வாங்கலாம் அல்லது லாப நோக்கத்திற்காக முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் என்றால் டிஜிட்டல் தங்கமாக வாங்கலாம். அதில் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என அனைத்தும் மிச்சம்.. ஆக தங்கம் வாங்க நினைப்பவர்கள் மேற்கண்ட காரணிகளை கருத்தில் கொள்வது நல்லது.
தொடர்ந்து நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலையானது உயரலாம் என கூறப்படும் நிலையில், குறைந்தால் சிறிது சிறிதாக வாங்கி போடலாம். எனினும் அதையும் சரியான ஆலோசனையுடன் செய்வது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications