தங்கம் விலை தற்போது வரலாறு காணாத உச்சங்களை எட்டி இருக்கிறது . இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் பொதுவாகவே இந்த பண்டிகை காலங்களிலும், தங்கம் விலை உயர்வாக இருக்கும் போதும் சந்தையில் போலி தங்க நகைகள் புழக்கத்திற்கு வரும். இத்தகைய சூழலில் பொதுமக்கள் தாங்கள் வாங்கிய தங்கம் அல்லது தங்கள் வாங்கக்கூடிய தங்கம் தூய்மை தன்மை கொண்டதுதானா என்பதை போன் மூலமே அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அனைத்து தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எனவே நகைக்கடைகளுக்கு சென்று நகை வாங்கும்போது அது உண்மையிலேயே தூய்மையான தங்கம் தானா என்பதை கண்டறிவதற்கு மக்கள் முதலில் அந்த நகையில் பிஐஎஸ் ஹால்மார்க் குறியீடு இருக்கிறதா என்பதை பார்ப்பது அவசியம். இந்தியாவில் தற்போது வெள்ளி நகைகளுக்கும் கூட இந்த பிஐஎஸ் ஹால்மார்க் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நகையோ நாணயமோ அதில் தங்கம் எவ்வளவு சதவீதம் கலந்திருக்கிறது என்பதை உறுதி செய்யக்கூடிய ஒரு சான்றிதழாக தான் இந்த ஹால்மார்க் குறியீடுகளை நாம் பார்க்கிறோம். இந்தியாவில் தங்க நகைகளுக்கான ஹால்மார்க் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அமைப்பாக பிஐஎஸ் எனப்படும் இந்திய தர சான்றிதழ் அமைப்பு செயல்படுகிறது.
அனைத்து தங்க நகைகளையும் அதன் தூய்மை தன்மையும் ஆய்வு செய்து அதற்கான ஹால்மார்க் குறியீடை வழங்குகிறது இந்த அமைப்பு. BIS care என்ற செயலி வாயிலாகவே வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க கூடிய தங்கத்தின் தூய்மை தன்மையை எளிதாக கண்டறியக்கூடிய வசதியை வழங்கி இருக்கிறது.
இதற்கு முதலில் நாம் google பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு சென்று BIS care செயலியை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி நம்முடைய போனில் இருந்தால் போதும் அனைத்து நகைகளையும் தூய்மை தன்மையையும் அவை உண்மையானவாயா போலியான நகைகளாக என்பதை எளிதாக நாம் கண்டுபிடித்து விடலாம். இந்த செயலி பதிவிறக்கம் செய்த பிறகு நம்முடைய பெயர் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொண்டு லாகின் செய்ய வேண்டும்.

இதனை அடுத்து ஒரு நகையின் தூய்மை தன்மையை கண்டறிவதற்கு verify HUID என்பதை கிளிக் செய்ய வேண்டும் அதனை கிளிக் செய்தவுடன் நீங்கள் வாங்க இருக்கக்கூடிய அல்லது நீங்கள் வாங்கி வைத்திருக்கக்கூடிய நகையின் HUID எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் search என்பதை கிளிக் செய்தால் அந்த நகை தொடர்பான அனைத்து விவரங்களும் அதில் காட்டும்.

உதாரணமாக அது என்ன மாதிரியான நகை ,எந்த தேதியில் அது ஹால்மார்க் செய்யப்பட்டது, அதன் தூய்மை தன்மை என்ன அதனை விற்பனை செய்யும் நகை கடையின் பதிவு எண் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் காட்டும். HUID என்பது ஒரு ஆறு இலக்க Alphanumerical கோடு ஆகும். அதாவது எழுத்துக்களும் எண்களும் கலந்த ஒரு குறியீடு தான் இது.
ஒவ்வொரு நகைக்கான ஹால்மார்கிங் செய்யும்போது அந்த நகைக்கென HUID கோடு என்பது வழங்கப்பட்டு. விடும் அது அந்த நகைக்கான ஒரு தனித்துவ எண். ஒருவேளை குறிப்பிட்ட நகைக்கான விவரங்கள் செயலியில் காட்டவில்லை என்றால் நகை விற்பனையாளரிடம் கேட்கலாம். நீங்கள் ஏற்கனவே வாங்கிய நகை என்றால் இந்த செயலி வாயிலாகவே புகார் அளிக்கலாம். இதற்கு நகை வாங்கியதற்கான ரசீது தேவை.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications