போலி ஜிஎஸ்டி பில்கள் மூலம் பல கோடி பணம் மோசடி செய்த செய்திகள் இணையத்தில் பரவலாக உள்ளது. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கான GST பில்லில் உங்களுக்கு சந்தேகம் இருந்தாலோ அல்லது அந்நிறுவனத்தின் GST பில் உண்மையானதா என கண்டறிய விரும்பினால் கீழே கூறப்படும் தகவல்கள் மூலம் சரிபார்க்கலாம்.
அப்படி சரிபார்க்கப்பட்டு அவை போலியானதாக இருக்கும் பட்சத்தில் அரசிடம் புகார் அளிப்பது எப்படி என்பது குறித்தும் இங்குக் காணலாம்.
GST பில்!
ஜிஎஸ்டி பில் அல்லது ரசீது என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் விற்பனையாளர் அல்லது தயாரிப்பாளர் அளிக்கும் ரசீதாகும். அதில் பொருட்களை வாங்குபவரின் விவரங்கள் தொடங்கி விற்பவரின் அடையாளம், தயாரிப்பின் பெயர், விளக்கம், வாங்கிய பொருட்கள் பெயர், சேவைகளின் அளவு, சப்ளையர் விவரங்கள், வாங்கிய தேதி, தள்ளுபடி போன்ற அனைத்து தகவல்களும் அதில் அடங்கியிருக்கும்.
போலி ஜிஎஸ்டி!
வருமான வரித்துறையினரால் பதிவு செய்யப்பட்ட ஏராளமான வழக்குகளில் மோசடிக்காரர்கள் அதிக அளவு போலியான நிறுவனங்களை உருவாக்கி ஜி.எஸ்.டி. பதிவு செய்து, ஜி.எஸ்.டி. இன்வாய்ஸை உருவாக்கியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
பொய்யான ஜி.எஸ்.டி. பில்
உண்மையாக சேவை ஏதும் இல்லாமல் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பொய்யான ஜி.எஸ்.டி. விலைப்பட்டியல் வெளியிட்டு, கமிஷனுக்காக பொய்யான அந்த பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு அளித்து தகுதியற்ற ஐ.டி.சி-யை பெற முயன்றனர். அவர்கள் மேலும் ஜி.எஸ்.டி. வரிக்காக அதனை பயன்படுத்தியும் உள்ளனர். அதனால் அரசுக்கு பல கோடிகளில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
போலி GST பில்லை கண்டறிவது எப்படி?
1. முதலில் கொடுக்கப்பட்ட 15 இலக்க GSTIN எண் சரியானதா என பார்க்க https://www.gst.gov.in போர்டலுக்குச் சென்று 15 இலக்க நம்பரை உள்ளிட்டாலே எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
2. அதன்பின் இன்வாய்ஸ் அல்லது ரசீது எண் மற்றும் தேதியை சரிபார்க்க வேண்டும்.
3. நீங்கள் செலுத்த வேண்டியதாக அந்த பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மற்றும் வரிகள் சரியானதா என செக் செய்ய வேண்டும்.
4. அதனையடுத்து HSN/SAC code-களையும் ஜிஎஸ்டி போர்ட்டல் மூலம் சரியான ஒன்றா எனக் கண்டறியலாம்.
5. இறுதியாக சப்ளையரின் கையொப்பம் மற்றும் ஜிஎஸ்டி வரிகள் சரியானதா என்பது குறித்து ஜிஎஸ்டி போர்ட்டலுக்குச் சென்று உள்ளீடு செய்து பார்க்கலாம்.
புகார்
மேற்கூறியவற்றில் உங்கள் சப்ளையர் அல்லது விற்பனையாளரின் GST பில் போலியன ஒன்று என்று நீங்கள் கண்டறியும் பட்சத்தில் புகார் அளிக்கலாம்!
1. நீங்கள் GST இன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று CBEC Mitra Helpdesk மற்றும் 'Raise Web Ticket' என்பதை கிளிக் செய்தால் புகார் பதிவு செய்யப்பட்டுவிடும்.
2. இல்லையெனில் cbecmitra.heldesk@icegate.gov.in எனும் மெயில் ஐடிக்கு ஈ-மெயில் மூலம் புகாரளிக்கலாம்.
3. அல்லது நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @FinMinIndia அல்லது GST ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான @askGST_GoI சென்று நேரடியாகவும் புகார் அளிக்கலாம்.


Click it and Unblock the Notifications