இந்தியாவில் மத்திய மாநில அரசுகளே மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டங்களை வழங்கி வருகின்றன. மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழும் தமிழ்நாடு அரசு விரிவான கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழும் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்குகிறது. குடும்ப அட்டைதாரர்கள் இந்த காப்பீடுக்கு விண்ணப்பம் செய்து அட்டை பெற்று கொள்ளலாம்.
இதில் குறிப்பாக நாடு முழுவதும் இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மத்திய அரசு 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ காப்பீடு வழங்குகிறது.மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் வய வந்தனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள இந்திய குடிமகன்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும்.

முதியவரின் குடும்ப பின்னணி, வருமானம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் அனைவருக்குமே இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே இந்த திட்டத்தில் இணைந்து ஆயுஷ்மான் வய வந்தனா திட்ட அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
Senior citizens aged 70 and above can now get their Ayushman Vay Vandana Card through the Ayushman App and access ₹5 lakh of free treatment.
— Ministry of Health (@MoHFW_INDIA) May 25, 2025
Watch this video to learn how to create Ayushman Vay Vandana Card and unlock essential healthcare benefits.#HealthForAll… pic.twitter.com/ZH005Xx410
இந்த அட்டை வைத்திருப்பவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சேவைகளை பெற முடியும். இந்த அட்டைக்கு நாம் எளிதாக ஆன்லைன் வாயிலாக செயலி மூலமே விண்ணப்பம் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளை தற்போது காணலாம்.
- முதலில் ஆயுஷ்மான் பாரத் செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதில் பயனாளியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- அதற்கு உங்களின் மொபைல் எண், அங்கீகார முறை உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படும் அவற்றை உள்ளிட வேண்டும்.
- பயனாளியின் அடிப்படை விவரங்கள் கேட்கபப்டும் பெயர், வயது, மாநிலம், ஆதார் அட்டை விவரங்கள் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் கேட்கும். அதனை உள்ளிட வேண்டும்.
- பின்னர், eKYC செயல்முறை நடைபெற்று விவரங்கள் சரிபார்க்கப்படும், உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை கொண்டு ஒப்புதல் அளிக்கவும்.
- eKYC முடிந்த பின்னர், ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையை பதிவிறக்கலாம்.
EPFOஇல் எப்படி ஆன்லைனிலேயே KYC அப்டேட் செய்வது? – விரிவான வழிகாட்டி..
இந்த திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எப்படி இணைந்து பயனாளிகளாக முடியும் என்பது குறித்த வீடியோவையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அட்டை பெறுவது தொடர்பாகவும் மருத்துவ காப்பீடு தொடர்பாகவும் இருக்கும் சந்தேகங்களுக்கு மக்கள் 1800 11 0770 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க அரசே செயல்படுத்தும் மருத்துவ காப்பீடு திட்டம், இந்த அட்டையை எந்த ஒரு மருத்துவமனையிலும் காட்டி சிகிச்சை பெற்று கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications