மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்புதான் இபிஎஃப்ஓ. இந்தியாவில் உள்ள பணியாளர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தை நிர்வகித்து கண்காணிக்கும் பொறுப்பை இது கொண்டிருக்கிறது.
இதில் இபிஎஃப் கணக்கு வைத்து பணியாளர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனம் சார்பாக அவர்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் பங்களிப்பாக செய்வார்கள். இந்த பங்களிப்பு தொகையானது இபிஎப் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதற்கு வட்டி வழங்கப்படும். இந்த பணியாளர் ஓய்வு பெறும் காலத்தில் ஒரு கணிசமான தொகை கையில் கிடைக்கும். இது தவிர ஓய்வூதியமும் இதன் மூலம் கிடைக்கும்.

இபிஎஃப்ஓ என்பது ஊழியர்களுக்கான ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும். இதில் நம்முடைய பங்களிப்புகளை செய்து தேவையான போது நம்முடைய பணத்தை பெற வேண்டுமென்றால் நாம் நம்முடைய கேஒய்சி விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ள வேண்டும். ஆதார், பான், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை எப்பொழுதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.
இபிஎஃப்ஓ-வில் எப்படி கேஒய்சி விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம் என்பதை தற்போது விளக்கமாக அறியலாம்.
படி 1: இபிஎஃப்ஓ தளத்தில் லாகின் செய்யவும்
- https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
- உங்களுடைய Universal Account Number (UAN) எண் and பாஸ்வேர்டை உள்ளிட்டு , அதில் காட்டும் captcha codeஐயும் உள்ளிடவும்
படி 2: கேஒய்சி பிரிவுக்கு செல்லவும்
- இந்த இணையதளத்தின் ஹோம் பேஜில், 'Manage' என்பதை கிளிக் செய்யவும்
- அதில் 'KYC' என்பதை கிளிக் செய்யவும்
படி 3: ஆவணங்களை அப்டேட் செய்யவும்
- இதில் பான், ஆதார், வங்கி கணக்கு விவரம், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற பல ஆவணங்கள் பட்டியலாக காட்டப்படும்
- இதில் காட்டப்படும் ஆவணங்களில் எதை அப்டேட் செய்ய வேண்டுமோ அதை கிளிக் செய்து அதற்கான ஆவணத்தை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யவும்
- நீங்கள் அப்லோட் செய்த ஆவணத்தில் உள்ள தகவல்களும் நீங்கள் உள்ளீடு செய்த தகவல்களும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்யவும்.
படி 4: தகவல்களை சேமிக்கவும்
- உங்களின் அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்த உடன், 'Save' என்பதை கிளிக் செய்யவும்.
- இதனை அடுத்து status பிரிவில் "Pending for Approval" என காட்டும்.
படி 5: நிறுவனத்தின் அங்கீகாரம்
- உங்கள் கேஒய்சி விவரங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் அதனை அங்கீகரிக்க வேண்டும்.
- உங்கள் நிறுவனம் கோரிக்கையை ஏற்ற உடன் status "Approved by Employer" என்றும் அதன் பின்னர் அப்டேட்டட் என்றும் மாறிவிடும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
- உங்களின் UAN உடன் ஆதார் மற்றும் பான் விவரங்களை இணைத்திருப்பது அவசியம்.
-EPFO தளத்தில் கேஒய்சி அப்டேட் செய்ய எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications