சென்னை: ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் இருக்கும். ஆதார் கார்டு பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடிய டிஜிட்டல் ஐடி போல செயல்படுகிறது. ஒவ்வொரு ஆதார் நம்பரும், ஒரு தனி நபருக்கு என்று வழங்கப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் கார்டு நம்பர் மறந்து விட்டால் என்ன செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது ஆதார் கார்டு நம்பரை மறந்து விடுவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கலாம். இது சமாளிக்க கூடியது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்டெப்களை மேற்கொள்வதன் மூலம் உங்களுடைய ஆதார் கார்டு நம்பரை நீங்கள் திரும்பப் பெற முடியும்.

எங்களிடம் ஆதார் பிவிசி கார்டு உள்ளது.. நாங்கள் எதற்காக ஆதார் நம்பரை நினைவில் வைத்திருக்க வேண்டும்.. மேலும் அவை மறந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியமா? என்று பல கேள்விகள் உங்களுக்குள் வரலாம். ஆதார் கார்டு நம்பரை உங்களுடைய ஆதார் அட்டையை பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இருப்பினும், ஏதேனும் முக்கியமான இடங்களுக்கு செல்கிறீர்கள், அங்கு உங்களுக்கு ஆதார் கார்டு தேவைப்படுகிறது என்றால், இந்த முறையைப் பயன்படுத்தி எளிதில் நீங்கள் உங்கள் ஆதார் நம்பரை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி சிலர் ஆதார் கார்டை தொலைத்து விட்டு இருப்பார்கள் அவர்களும் இந்த முறையை பயன்படுத்தி எளிதில் ஆதார் நம்பரைப் பெற முடியும்
ஆதார் நம்பரை எவ்வாறு தெரிந்து கொள்வது?:
ஸ்டெப் 1: UIDAI-இன் https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தைப் பார்வை இடலாம்.
ஸ்டெப் 2: தற்போது உங்களுக்குத் தேவை என்ன என்பதை தேர்ந்தெடுக்கவும். சான்றாக ஆதார் அல்லது EID என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்டெப் 3: ஆதார் கார்டில் உள்ளபடி உங்களுடைய பெயர், மொபைல் நம்பர், மெயில் ஐடி போன்றவற்றை என்டர் செய்து "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: தற்போது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும். அதனைப் பயன்படுத்தி OTP-ஐ என்டர் செய்து, உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். அதன் பிறகு SMS மூலம் உங்களுடைய ஆதார் நம்பர் உங்களுக்கு அனுப்பப்படும்.
மேலும் ஆதார் நம்பர் விவரங்களைப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. நீங்கள் உங்களுடைய மொபைல் நம்பரை ஆதார் உடன் இணைக்கப்படாவிட்டாலும், தொலைந்த அல்லது மறந்த ஆதார் நம்பரை கண்டறிவது எளிதான ஒன்றே. ஆதார் பதிவு மையத்திற்கு சென்று உங்களுடைய ஆதார் கார்டை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் ஆதார் பதிவு மையத்தை நேரில் பார்வையிடலாம். அவர்கள் உங்களிடம் ஆதார் நம்பர் இல்லை என்றாலும் பெயர், பாலினம், பின்கோடு, உங்களுடைய பிறந்த ஆண்டு போன்ற விவரங்களை வைத்து எளிதாக ஆதார் நம்பரைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications