டிஜிட்டல் தொழில்நுட்பம் வங்கி சேவைகளை எளிமையாக்கியது, டிஜிட்டல் பண பரிவர்த்தனை சமீப காலமாக அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் யுபிஐ மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.
யுபிஐ பயன்படுத்துவது எளிதாகவும், சில வினாடிகளில் பணத்தை அனுப்பவும் முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலமாக பணம் செலுத்துவதை அதிகம் விரும்புகின்றனர். கூகுள் பே, போன்பே போன்ற பல யுபிஐ செயலிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

யுபிஐ பரிவர்த்தனைகளில் தவறுதலான பரிமாற்றம் என்பது நடக்க கூடிய சூழ்நிலைகள் அவ்வபோது உருவாகும். யுபிஐ முறையில் பணப்பரிவர்ததனை செய்யும் போது எதிர்பாராத விதமாக தெரியாமல் தவறான யு.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால், உடனடியாக அந்த பணத்தை திரும்ப முயற்சிக்க வேண்டும்.
யுபிஐ பரிவர்த்தனையை திரும்ப பெறுவதற்கான சூழல்கள் தவறான யுபிஐ ஐடி அல்லது தவறான மொபைல் எண்ணை உள்ளிட்டு பணத்தை பரிவர்த்தனை செய்து விட்டீர்கள் என்றால் நீங்கள் பரிவர்த்தனை திரும்ப பெற முயற்சிக்க வேண்டும்.
உங்கள் அங்கீகாரம் இல்லாமல் பணம் அனுப்பப்பட்டிருந்தால் நீங்கள் உங்கள் பணத்தை மீட்டெடுக்க முயற்சிக்கலாம். வெளிப்படையாக, பணம் சட்டவிரோதமாக அனுப்பப்பட்டிருந்தால், பரிவர்த்தனையை திரும்ப கோருவதற்கான அனைத்து காரணங்களும் உங்களிடம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் நீங்கள் முதலில் யுபிஐ சேவை வழங்குநரை ( கூகுள் பே, போன்பே போன்றவை) தொடர்பு கொண்டு கவனக்குறைவாக பணப் பரிமாற்றம் நடந்தது குறித்து தெரிவிக்க வேண்டும். பொதுவாக இந்த இடத்திலேயே பரிவர்த்தனை தோல்வியுற்றால் மற்றும் பணம் கழிக்கப்பட்டால் நீங்கள் பணத்தை திரும்ப பெற்றுவிடலாம்.
பிற காரணங்களுக்கு நீங்கள் பணத்தை இழந்திருந்தால் வங்கிக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டியது அவசியம். இதை நீங்கள் எவ்வளவு சீக்கிரம் செய்கிறீர்களோ அவ்வளவு நல்லது. உங்கள் புகாருக்கு வங்கி பதிலளிக்க தவறினால், நீங்கள் கட்டாயம் வங்கியின் குறைதீர்ப்பாளரை (ombudsman) அணுக வேண்டும். உங்களுக்கு உண்மையான குறை இருந்தால், குறைதீர்ப்பாளரை நாடுவது அசாதாரண விஷயமில்லை.
நீங்கள் விரும்பிய விதத்திலும் வடிவத்திலும் உங்கள் குறை தீர்க்கப்படாவிட்டால் நீங்கள் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை (NPCI வெப்சைட்) அணுக வேண்டும். இது வங்கி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ரீடெயில் பேமெண்ட்ஸ் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸை இயக்குவதற்கான ஒரு தலைமை அமைப்பு NPCI.


Click it and Unblock the Notifications