UPI பேமெண்ட் என்றாலே விரைவில் பண பரிவர்த்தனை செய்ய முடியும். அதையும் இருந்த இடத்தில் இருந்தே செய்ய முடியும் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான். ஆனால் இப்படி விரைவாகவும் எளிதாகவும் பரிவர்த்தனை செய்யும் முன்பு, உங்கள் யுபிஐ பின் நம்பரை உருவாக்க வேண்டியிருக்கும், அதற்கு வழக்கமான முறையான ஏடிஎம் கார்டு நம்பரை வைத்தும் உருவாக்கலாம். ஏடிஎம் கார்டு இல்லாமலும் செய்யலாம். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? இது சாத்தியமான ஒன்று தான். உங்களிடம் ஏடிஎம் கார்டு இல்லை என்றால், ஆதார் எண்ணை பயன்படுத்தி பின் நம்பரை உருவாக்கி கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலருக்கும், நம்மால் அதை சரியாக பயன்படுத்த முடியுமா? பாதுகாப்பானதா? என்ற தயக்கம் இன்னும் பலர் மத்தியில் இருக்கவே செய்கிறது. ஆனால், உங்கள் வங்கி கணக்கை உங்கள் போனுடன் இணைத்து, மிக எளிமையாகவும் பாதுகாப்பாகவும் பணப் பரிவர்த்தனை செய்வது எளிது. முதன்முறையாக UPI-ஐப் பயன்படுத்த தொடங்குபவர்களாக இருந்தால், முதலில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் யுபிஐ ஆப்பை (கூகுள் பே, போன் பே, பேடிஎம்..) உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய வங்கி கணக்கை லிங்க் செய்து, உங்களுடைய டெபிட் கார்டு எண்ணை வைத்து 4 முதல் 6 எண் கொண்ட பின் நம்பரையும் உருவாக்குங்கள்.
டெபிட் கார்டு இல்லாமல் எப்படி யுபிஐ பின் உருவாக்குவது?
UAN இல்லாமலே பிஎஃப் பேலன்ஸ் பார்க்கலாம்! இதோ அந்த சீக்ரெட் ட்ரிக்!
உதாரணத்திற்கு உங்கள் பேடிஎம் ஆப்பில் டெபிட் கார்டு இல்லாமல் எப்படி பின் நம்பரை உருவாக்குவது என தெரிந்து கொள்வோம்.
ஸ்டெப் 1: உங்கள் மொபைலில் Paytm ஆப்பை லாகின் செய்து, திரையின் இடது மேல் மூலையில் உள்ள உங்கள் Profile ஐகானை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: புரொபைல் பகுதியில் கீழே ஸ்க்ரோல் செய்து, UPI & Payment Settings என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இங்கே உங்கள் பேமெண்ட் தொடர்பான அனைத்தையும் நிர்வகிக்கலாம்.
ஸ்டெப் 3: இப்போது உங்கள் Paytm கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளின் பட்டியல் திரையில் தோன்றும். எந்த வங்கி கணக்கிற்கு நீங்கள் UPI PIN செட் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: வங்கி கணக்கை தேர்ந்தெடுத்த பிறகு, அதன் கீழே உள்ள Set PIN என்ற ஆப்ஷனை கிளிக் செய்து செயல் முறையை தொடங்கவும்.
ஸ்டெப் 5: அடுத்த திரையில், UPI PIN செட் செய்ய பல்வேறு வழிகள் காட்டப்படும். அதில் Aadhaar Card என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 6: இப்போது பின்வரும் விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும். உங்கள் ஆதார் எண்ணின் முதல் 6 இலக்கங்கள். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் 6 இலக்க ஆதார் OTP, வங்கியிலிருந்து சரிபார்ப்பிற்காக வரும் 6 இலக்க வங்கி OTP என அனைத்தையும் கொடுத்து சரிபார்க்கவும்.
ஸ்டெப் 7: ஆதார் மற்றும் வங்கி OTP வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்களுக்கான 6 இலக்க UPI PIN-ஐ உருவாக்கலாம். மற்றவர்கள் எளிதில் யூகிக்க முடியாத, அதேசமயம் உங்களுக்கு மறக்காத ஒரு எண்ணை தேர்ந்தெடுத்து, அதை மீண்டும் உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.
அப்புறம் என்ன, இனிமேல் கையில் காசே இல்லை என்றாலும் கூட ஈஸியா ஷாப்பிங் செய்யலாம்.. இது கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பெயரில் கணக்கு தொடங்கியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications