கஷ்டப்பட்டு உழைத்த பணம் கண்ணுக்கு முன்னால் தெரியவில்லை என்றாலே ஒருவித பதற்றமானது பலருக்கும் தொற்றிக் கொள்ளும். வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் பிஎஃப் (PF) என்பது ஒரு மிகப்பெரிய சேமிப்பு பலம். ஆனால், பல நேரங்களில் நமது UAN தொலைந்து போயிருக்கும் அல்லது அதை ஆக்டிவேட் செய்யத் தெரியாமல் தவிக்கிறோம். யுஏஎன் இல்லையென்றால் பிஎஃப் பேலன்ஸ்-ஐ பார்க்கவே முடியாதா? என்று நீங்கள் நினைத்தால், அது தான் தவறு.
எங்கும் தொழில்நுட்பம், எதிலும் தொழில்நுட்பம் எனும் அளவுக்கு வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், உங்கள் மொபைல் எண்ணே, உங்கள் பணத்தை சரிபார்க்க போதுமானது.

வேலைக்கு செல்லும் பலருக்கும் தங்களுடைய சம்பளத்தில் இருந்து மாத மாதம் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகையானது, இபிஎஃப் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். இந்த தொகையானது பணி ஓய்வுக்கு பிறகு ஒரு முக்கிய நிதி ஆதாரமாகவும் இருக்கும். இதில் அவசர தேவைகளுக்காக ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளவும் முடியும். எனவே உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.
முன்பெல்லாம் பிஎஃப் அலுவலகம் சென்று எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இன்று அப்படியில்லை. இருக்கும் இடத்தில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உங்களுடைய பிஎஃப் வரலாற்றையே தெரிந்து கொள்ள முடியும். சிலர் பிஎஃப் கணக்கின் முக்கிய குறியீட்டு எண் ஆன யுஏஎன்-ஐயே மறந்து விடுகின்றனர். சில சமயங்களில் அந்த எண் செயல்படாமல் கூட இருக்கலாம். ஆனால் யுஏஎன் இல்லாமல் இன்னும் எளிதாக உங்கள் பிஎஃப் தொகையை மாற்று வழிகளில் அறிந்து கொள்ள முடியும்.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
உங்களுடைய இபிஎஃப் கணக்கில் இருக்கும் தொகையை ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் செக் செய்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். அந்த எண்ணுக்கு கால் செய்தால் தானாகவே உங்கள் கால் ஆனது துண்டிக்கப்படும். அதன் பிறகு சில நிமிடங்களில் உங்கள் கணக்கில் எவ்வளவு தொகை, உங்களுடைய மெம்பர் ஐடி, கடைசி டெபாசிட் எவ்வளவு, மொத்த இருப்பு எவ்வளவு என அனைத்தும் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு உங்களுடைய யுஏஎன் ஆக்டிவ்-வில் இருக்க வேண்டும். உங்களுடைய கே.ஓய்.சி-யில் ஆதார், பான், வங்கி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
உங்களுடைய யுஏஎன் எண் இல்லாமல், பிஎஃப் இருப்பை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம். இங்கு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு EPFOHO UAN ENG என்ற பார்மேட்டில் எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். அதாவது EPFOHO அதை தொடர்ந்து உங்களுடைய யுஏஎன் ENG என டைப் செய்து அனுப்ப வேண்டும். உங்களுக்கு ஆங்கிலத்தில் வேண்டும் எனில், ENG என்றும், தமிழ் எனில் TAM, ஹிந்தியில் HIN எனவும் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பப்படும் பட்சத்தில், உங்களுடைய விவரங்கள் சரியாக இருந்தால், விவரங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். இது உங்களிடம் இணைய வசதி இல்லாவிட்டாலும் கூட பார்க்க உதவிகரமாக இருக்கும்.
சில நிறுவனங்களில், பிஎஃப் நிதியானது அரசுக்கு மாற்றப்படாமல் அந்தந்த நிறுவனங்களின் தனியார் அறக்கட்டளைகள் மூலமாகவே நிர்வகிக்கப்படுகிறது. அத்தகைய ஊழியர்கள் தங்கள் பிஎஃப் இருப்பை நேரடியாக EPFO போர்ட்டலில் காண முடியாது. அத்தகைய பிஎப் சந்தாதாரர்கள் உங்கள் நிறுவனத்தின் உட்புற இணையதளம், உங்கள் மாத சம்பளப் பட்டியல் அல்லது நேரடியாக நிறுவனத்தின் ஹெச்ஆர் (HR) துறையை அணுகி உங்கள் பிஎஃப் இருப்பை தெரிந்து கொள்ளலாம்.
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏப்ரல் 1 முதல் ஏடிஎம் விதிமுறைகள் மாற்றம்?
உங்களுடைய பிஎஃப் கணக்குடன் உங்கள் மொபைல் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். அப்போதுதான் எஸ்.எம்.எஸ் போன்ற வசதிகளை பெற முடியும். அதேபோன்று உங்கள் பிஎஃப் கணக்கில் ஆதார், பான் கார்டு மற்றும் வங்கி விவரங்கள் ஆகியவை கேஒய்சி-யில் சரியாக அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது பணம் எடுக்கும் போது சிக்கல்களை தவிர்க்க உதவும். சில சமயங்களில் சமீபத்தில் தான் உங்கள் UAN எண்ணை ஆக்டிவேட் செய்திருந்தால், ஆன்லைன் பாஸ்புக்கில் விவரங்கள் பிரதிபலிக்க சற்று கால அவகாசம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக கொடுத்தவுடன் இருப்பு தெரியவில்லை என்று பதற்றம் கொள்ளாதீர்கள்.


Click it and Unblock the Notifications