புதிய நிதியாண்டு பிறக்கும் போதே புதிய கட்டுப்பாடுகளும் சேர்ந்தே பிறக்கின்றன. இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கி, தனது ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள், சாமானிய வாடிக்கையாளர்கள் முதல் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடும்.
இலவச பரிவர்த்தனை வரம்புகள், கூடுதல் கட்டணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதால், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தேவையில்லாத கட்டணங்கள் பிடிக்கப்படாமல் இருக்க இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. வாருங்கள் அவற்றை விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 1, 2026 முதல் யுபிஐ மூலம் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் முறை, மாதந்தோறும் வழங்கப்படும் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக யுபிஐ மூலம் பணம் எடுப்பது தனிப்பட்ட முறையில் இலவசமாக இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்காது என அறிவித்துள்ளது. இதுவும் டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை போன்றே கணக்கில் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஆக இனி உங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகள் முடிவடையும் பட்சத்தில் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்? பதவி, பென்சனில் முக்கிய மாற்றங்கள்?
என்னென்ன விதிமுறைகள்?
தற்போதைய நிலையில் சேமிப்பு மற்றும் சம்பள கணக்குகள் மூலம் ஒருவருக்கு 5 முறை இலவச பரிவர்த்தனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் பணம் எடுத்தல் மற்றும் நிதி சாரா பரிவர்த்தனைகளும் அடங்கும். 5 பரிவர்த்தனைகளுக்கு மேல் சென்றால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் கட்டணம் மற்றும் வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். இதர வங்கி ஏடிஎம்களில், மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவச வரம்பு உண்டு. அதற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு 23 ரூபாய் கட்டணம் பொருந்தும். தற்போது யுபிஐ மூலம் பணம் எடுப்பதும், இந்த விதியின் கீழ் வருகிறது. ஆக கவனமுடன் இருப்பது நல்லது.
ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?
இருப்பினும் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் பாதிப்பு இல்லை எனலாம். அதாவது சில குறிப்பிட்ட நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஹெச்டிஎஃப்சி ஏடிஎம்களில் வரம்பற்ற இலவச பரிவர்த்தனைகள் தொடரும். குறிப்பாக ஹெச்டிஎஃப்சி பிஷ் லைட் பிளஸ், பிஷ் ப்ரோ பிளஸ், பிஷ் அல்ட்ரா பிளஸ், பிஷ் எலைட் பிளஸ், பிளெக்ஸி பிளஸ், ஆக்டிவ், பிளஸ், ஏசென்ட், மேக்ஸ் அட்வான்டேஜ், மேக்ஸ், புரபெஷனல் எகாம், அபெக்ஸ், அல்டிமா, மெர்ச்சன்ட் அட்வான்டேஜ் பிளஸ், சுப்ரீம், ஸ்டார்ட் அப், ஸ்மார்ட் அப் குரோத் மற்றும் ஜிகா கரன்ட் அக்கவுன்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனினும் மற்ற வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இனிமேல் கூகுள் பே, போன்பே, பேஷ்பிபி (Payzpp), பேடிஎம் போன்ற ஆப்களை பயன்படுத்தி பணம் எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இருப்பினும், உள்நாட்டு வர்த்தக மையங்கள் அல்லது இணையதளங்களில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் கிடையாது. ஆனால் IRCTC போன்ற குறிப்பிட்ட இடங்களில் கட்டணம் உண்டு. சர்வதேச ஏடிஎம்களில் இருப்பு சரிபார்ப்பிற்கு 25 ரூபாய் + வரியும், பணம் எடுப்பதற்கு 125 ரூபாய் + வரியும் கட்டணமாஅ வசூலிக்கப்படும். இதர வங்கி ஏடிஎம்களில் கட்டணம் 21 ரூபாயிலிருந்து 23 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
More From GoodReturns

ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்: ஏடிஎம் பரிவர்த்தனை முதல் QR ஸ்கேனர் வரை புதிய கட்டுப்பாடுகள்!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications