பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது முதலீடு செய்ய நினைக்கும் பலருக்கும் வரும் முதல் கேள்வி இதுதான். மியூச்சுவல் ஃபண்டில் (Mutual Fund) பணம் போடலாமா அல்லது இப்போது டிரண்டாக இருக்கும் இடிஎஃப் (ETF)-ல் முதலீடு செய்யலாமா? இரண்டுமே லாபம் தரும் வழிகள் தான் என்றாலும், உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் வேகம் நீங்கள் எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது.
ஒருவர் ஸ்மார்ட் ஆக சிந்தித்து குறைந்த கட்டணத்தில் அதிக லாபம் பார்க்க நினைக்கிறார் என்றால், அவருக்கு ETF கைகொடுக்கும். அதேசமயம் எனக்கு மார்க்கெட் பத்தி அவ்வளவா தெரியாது, ஒரு நிபுணர் என் பணத்தை நிர்வகிக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு மியூச்சுவல் ஃபண்ட் வரப்பிரசாதம். இன்று (மார்ச் 2, 2026) நிலவும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், உங்கள் சேமிப்பு இலக்கிற்கு எது ஏற்றதாக இருக்கும்? எதில் ரிஸ்க் குறைவு? எதில் லாபம் அதிகம்? இந்த இரண்டுக்கும் இடையிலான அந்த ரகசியங்களை தெரிந்து கொள்வோமா?

இடிஎஃப் முதலீடு என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை போன்றது. இதை நீங்கள் பங்குச் சந்தை இயங்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் டீமேட் மூலம் வாங்கலாம் அல்லது விற்பனை செய்யலாம். இதன் விலை தங்கம் அல்லது பங்கு விலையை போன்று அவ்வப்போது மாறி கொண்டே இருக்கும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் அப்படியில்லை. இவை நேரடியாக வர்த்தகம் செய்யப்படுவதில்லை. நீங்கள் நேரடியாக ஒரு ஃபண்ட் ஹவுஸ் அல்லது ஏஜெண்ட் மூலம் வாங்கிக் கொள்ளலாம். இதில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்.ஏ.வி (NAV).
ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?
மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் மதியம் 3 மணிக்கு முன்பு பணம் செலுத்தினால், அன்றைய நாளின் இறுதி விலையில் யூனிட்கள் கிடைக்கும். 3 மணிக்கு மேல் சென்றால் அடுத்த நாள் விலையில் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இடிஎஃப்-ல் முதலீட்டாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் அப்படி முடியாது. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு கட்டமைப்பு உள்ளது. ஆக உங்கள் தேவைக்கு எது சிறந்ததோ அதை தேர்வு செய்யலாம்.
PPF கணக்கு ஆரம்பிக்க போறீங்களா? இந்த ஒரு தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!
ETF ஃபண்டானது ஒரு குறியீட்டை அப்படியே பின்பற்றும். உதாரணமாக நிஃப்டி 50 இடிஎஃப் என்பது நிஃப்டியில் உள்ள 50 நிறுவனங்களின் பங்குகளை அதே விகிதத்தில் வைத்திருக்கும். இங்கே மூளையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, சந்தை எப்படி போகிறதோ அப்படியே லாபம் கிடைக்கும். இதே மியூச்சுவல் ஃபண்ட் ஆக்டிவ் என்பது, இங்கே ஒரு அனுபவமிக்க ஃபண்ட் மேனேஜர் இருப்பார். அவர் தனது அறிவை பயன்படுத்தி எந்த பங்கை வாங்கலாம், எதை விற்கலாம் என்று முடிவு செய்வார். எனவே, உங்கள் லாபம் அந்த மேனேஜரின் திறமையை பொறுத்தே அமையும். இதுதான் மிக முக்கியமான பகுதி. பெரிய நிறுவனங்கள் அடங்கிய சந்தையில் தகவல்கள் அனைவருக்கும் எளிதாக கிடைப்பதால், அங்கே சந்தையை மிஞ்சி லாபம் சம்பாதிப்பது ஃபண்ட் மேனேஜர்களுக்கு கடினமாக உள்ளது. இதில் 2024 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் முன்னணி லார்ஜ்-கேப் ஃபண்டுகளில் 74% ஃபண்டுகள் தங்களின் பெஞ்ச்மார்க் குறியீட்டை விடக் குறைவான லாபத்தையே தந்துள்ளன. ஆக பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இடிஎஃப் ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும். ஆனால், மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பிரிவுகளில் திறமையான ஃபண்ட் மேனேஜர்கள் சந்தையை விட அதிக லாபத்தை ஈட்டி தருகிறார்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications