ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?

கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு, நிலத்துல போட்ட காசு என்னிக்கும் வீண் போகாது என்பார்கள். இதனாலேயே பலரும் கையில் கொஞ்சம் காசு சேர்ந்த உடனே யோசிக்கிற விஷயம், ஒரு இடம் வாங்கலாமா, ஏற்கனவே வீடு இருந்தாலும், வாடகை வருமானத்துக்காக ஒரு இரண்டாவது வீடு வாங்கலாமா என்பது தான்.

ஒவ்வொரு மாதமும் அக்கவுண்டில் கிரெடிட் ஆகுற வாடகை பணம் கேக்க நல்லாதான் இருக்கும். ஆனா அந்த வருமானம் நிஜமாவே உங்க மாத தவணை, சொத்து வரி மற்றும் பராமரிப்பு செலவுகளை சமாளிக்க போதுமானதா? வீடு ஒரு வேளை சில மாதங்கள் வாடகைக்கு போகாமல் காலியாக இருந்தால் என்ன நடக்கும்? ரியல் எஸ்டேட் முதலீடு உண்மையிலேயே லாபகரமானதா அல்லது வெறும் மாயை தானா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்னென்ன? மற்ற முக்கிய அம்சங்களையும் இப்பதிவில் பார்ப்போம்.

ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?

இன்றும் இந்தியர்களின் நிதி திட்டமிடலில் வாடகை வருமானம் என்பது பலரின் முன்னுரிமையாக இருக்கிறது. ஒரு நிலையான முதலீட்டு யோசனையாகவும் இருந்து வருகிறது. ஆனால் இதன் பின்னணியில் உள்ள யதார்த்தமான உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் நன்றாக தோன்றலாம். ஆனால் அது உண்மையல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பலரும் நினைக்கலாம் இது சந்தை சார்ந்த முதலீடுகளை விட பாதுகாப்பானது என்று. ஆனால் வாடகை வருமானத்திலும் சந்தை சார்ந்த சிக்கல்கள் உள்ளன.
வாடகைக்கு விடப்படும் ஒரு சொத்து என்பது வெறும் வருமானம் தரும் இயந்திரம் அல்ல, அது ஒரு தொழில். அதில் பராமரிப்பு செலவுகள், வீடு காலியாக இருக்கும் காலங்கள் மற்றும் வரி இழப்புகள் என பல சவால்கள் உள்ளன. அவற்றை வீட்டு உரிமையாளர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆக சொந்த வீட்டில் குடியிருந்து கொண்டு, மற்றொரு வீட்டுக் கடனில் கையெழுத்திடுவதற்கு முன்பு உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் எதார்த்தமான கணக்குகளை பார்ப்பது அவசியமான ஒன்று.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் உள்ள குடியிருப்பு வீடுகள் ஆண்டுக்கு சராசரியாக 2% முதல் 3% வரை மட்டுமே மொத்த வாடகை வருமானத்தை ஈட்டுகின்றன. அதாவது அந்த சொத்தின் சந்தை மதிப்பில் 2 - 3% மட்டுமே நீங்கள் வாடகையாக பெறுவீர்கள். சில குறிப்பிட்ட இடங்களிலோ அல்லது பழைய வீடுகளிலோ இது 4% வரை செல்லலாம். ஆனால் அதுவும் உறுதியாக சொல்ல முடியாது.
சொத்து வாங்க சரியான நேரம்! 2026-ல் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்களாக மாறப்போகும் அந்த 5 நகரங்கள் எவை?
வீட்டின் பராமரிப்பு செலவுகள், சொத்து வரி, புரோக்கரேஜ், பழுதுபார்ப்புகள், சொசைட்டி சந்தா மற்றும் அவ்வப்போது செய்யப்படும் மேம்பாடுகள் ஆகியவற்றை கழித்துவிட்டால், உங்கள் கையில் கிடைக்கும் நிகர லாபம் பெரும்பாலும் 1.5 முதல் 2% மட்டுமே. இது வருமான வரிக்கு முந்தைய கணக்கு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதனை ஒரு வீட்டுக் கடனுக்கான வட்டியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இன்று பெரும்பாலான வீட்டுக்கடன் வட்டிகள் 8%-க்கும் அதிகமாக உள்ளன. உங்கள் வாடகை வருமானம், உங்களது மாதத் தவணையை கூட ஈடுகட்டவில்லை என்றால், எதிர்காலத்தில் வீட்டின் மதிப்பு உயரும் என்ற நம்பிக்கையில், ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாடகைதாரருக்கு மறைமுகமாக மானியம் வழங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
ஓய்வுக்கால நிதியை எங்கே முதலீடு செய்வது? SCSS Vs Senior citizen FD ? எது பெஸ்ட்?
அதேபோன்று வீடு காலியாக இருப்பது என்பது முக்கியமான ஒரு விஷயம். ஏனெனில் பெரும்பாலான வாடகை வருமான கணக்கீடுகள், வருடம் முழுவதும் வீடு வாடகைக்கு விடப்பட்டு இருப்பதாகவே கருதுகின்றன. ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை. வாடகைதாரர்கள் மாறுவார்கள், கட்டிடங்கள் பழமையாகும், இடங்களுக்கான தோரணை மாறும். ஒரு வருடத்தில் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் வீடு காலியாக இருந்தாலே, அது உங்கள் வருடாந்திர லாபத்தில் 15 முதல் 20% காலி செய்துவிடும். ஒவ்வொரு புதிய வாடகைதாரரை தேடும்போதும், நீங்கள் கொடுக்கும் புரோக்கரேஜ் கட்டணத்தையும் சேர்த்தால், லாபம் இன்னும் குறையும். இதில் இன்னும் சில சவால்களும் உள்ளன. வாடகை அதிகமாக இருந்தாலோ அல்லது அந்த பகுதியில் வீடுகள் அதிகம் கிடைத்து தேவை குறைந்தாலோ இன்னும் பிரச்சனை தான்.

வாடகை வருமானத்துக்கு, பராமரிப்புக்காக வழங்கப்படும் 30% நிலையான வரி கழிவுக்கு பிறகு, உங்கள் வருமான வரி வரம்பிற்கு ஏற்ப முழுமையாக வரி விதிக்கப்படுகிறது. இதில் பணவீக்க சரிசெய்தல் கிடையாது. உதாரணமாக, நீங்கள் 30% வரி வரம்பில் இருந்தால், உங்களுக்குக் கிடைக்கும் 2% நிகர லாபம், வரிக்கு பிறகு 1.4% ஆக குறையும். நீங்கள் வீட்டுக் கடன் கட்டிக் கொண்டிருந்தால் வட்டி தள்ளுபடி ஓரளவுக்கு உதவும், ஆனால் அதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே.

பலரும் சொத்து மதிப்பு உயர்வை லாபமாக பார்க்கிறார்கள். ஆனால் அதற்கு வீடு விற்கப்படும் போது நல்ல விலை கிடைக்க வேண்டும். விற்பனைக்கான செலவுகள், நீண்ட காலம் காத்திருப்பது மற்றும் சந்தை மாற்றங்கள் அந்த லாபத்தையும் குறைத்துவிடக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக கட்டாயம் நீங்கள் வாங்கியிருக்கும் வீட்டின் விலை உயர்வு என்பது உறுதியானது அல்ல.
விவசாயிகளுக்கு ஹோலி கிப்ட்: ரூ. 2,000 ரெடி! 22-வது தவணை எப்போது தெரியுமா?
அப்படியானால் எங்களுக்கெல்லாம் வாடகை வருமானம் வாங்க வாய்ப்பே இல்லையா என சிலர் கேட்கலாம். உங்களிடம் கடன் சுமை என்பது சுத்தமாக இல்லை என்றால் அந்த சமயத்தில் இரண்டாவது வீடு குறித்து யோசிக்கலாம். சிறந்ததொரு சந்தையில் சந்தை விலையை விட குறைவான விலையில் வீடு கிடைத்தால் வாங்கலாம். நிலையான தேவை உள்ள வாடகை சந்தையில் அந்த வீடு அமைந்திருந்தால். மேலும் உங்கள் ஓய்வுக்கால வருமானத்தின் அடித்தளமாக இல்லாமல், உங்களின் ஒட்டுமொத்த முதலீடுகளில் ஒரு சிறு பகுதியாக இருந்தால் மட்டுமே இது சரியாக இருக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+