பாதுகாப்பான முதலீடு மற்றும் வரி சேமிப்பு என்று வரும்போது, நம்ம ஊர் மக்களின் முதல் சாய்ஸ் PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) தான். பணம் போட்டால் வட்டி வரும், வட்டிக்கு வரியும் கிடையாது என்கிற தைரியத்தில் தான் பலரும் ஆர்வமாக இதில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் இந்த ஆர்வத்தில் நம்மில் சிலர் செய்யும் ஒரு சிறிய தவறு, பல வருட உழைப்பை வீணடித்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்திய சட்டப்படி ஒரு தனிநபர் தன் பெயரில் ஒரே ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும்.
இன்னொரு பேங்க்ல ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணிக்கலாமே, அதிக வட்டி வரும் என்று நினைத்து நீங்கள் இரண்டாவது கணக்கை தொடங்கினால், அரசாங்கம் அதற்கு பெரிய செக் வைத்திருக்கிறது. அந்த இரண்டாவது கணக்கிற்கு வட்டி கிடையாது என்பது மட்டுமின்றி, உங்கள் முதலீடும் சிக்கலில் முடியும். அப்படியென்றால், தெரியாமல் இரண்டு கணக்கு வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? மைனர் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாமா? பிபிஎஃப் விதிகளில் உள்ள அந்த ட்விஸ்ட் என்ன? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

அரசின் பாதுகாப்புள்ள திட்டமான பிபிஎஃப் இன்றும் பலரின் கனவு திட்டமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிலையான வருமானம், பாதுகாப்பு, வரிச்சலுகை என பிரபல திட்டமாக உள்ளது. இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 7.1% அளவுக்கு நிலையான வட்டி வருமானமும் கிடைக்கிறது. ரிஸ்க் இல்லை என்பதால் பலரும் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும் பலரும் ஆர்வத்தில் ஒருவர் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வெள்ளி 15% சரிவு.. தங்கம் 3% ஏற்றம்! குழப்பத்தில் முதலீட்டாளர்கள் - இப்போது என்ன செய்வது?
ஒரு தனிநபர் ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே தொடங்கி கொள்ள முடியும். நீங்கள் வெவ்வேறு வங்கிகளிலோ அல்லது தபால் நிலையத்திலோ கணக்கு வைத்திருந்தாலும், பிபிஎஃப் என்று வரும்போது ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். தெரியாமல் கூடுதல் கணக்கு தொடங்கினால், அது விதிகளுக்கு புறம்பானதாக கருதப்பட்டு அதற்கு வட்டி வழங்கப்படாது. இதில் கூட்டாகவும் கணக்கு தொடங்க முடியாது. உங்களுடைய பிபிஎஃப் கணக்குடன் பான் கார்டும் இணைக்கப்படுவதால், நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்திருந்தால், தணிக்கையின் போது எளிதாக கண்டறியப்பட்டு விடும்.
ஒரு வேளை விதிமுறைக்கு மாறாக ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருப்பது கண்டறியப்பட்டால், கூடுதல் கணக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்படும். அத்தகைய கணக்குகளில் நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி வழங்கப்படாமல், அசல் மட்டும் திருப்பி தரப்படும். ஒரே ஒரு கணக்கு மட்டுமே தொடர அனுமதிக்கப்படும்.
நிஃப்டி காட்டும் பளபளப்பு நிஜமா? 80% பங்குகள் கரடியின் பிடியில் - முதலீட்டாளர்களே உஷார்!
ஒரு பாதுகாவலராக உங்களுடைய மைனர் குழந்தை அல்லது மனநலம் குன்றியவர் பெயரில் பிபிஎஃப் கணக்கை தொடங்கி கொள்ளலாம். ஆனால், ஒரு குழந்தையின் பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய் மட்டுமே. அதிகபட்ச முதலீடு 1.5 லட்சம் ரூபாயாகும். நீண்ட கால அடிப்படையில் நிலையான வருமானம் வேண்டும் என நினைக்கும் முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தை வரி சலுகையுடன் பெறலாம். எனினும் இதை மட்டுமே முதலீடாக கருத கூடாது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications