சமீப காலமாக தங்கத்தை விட வெள்ளி தான் கெத்துன்னு நம்பி முதலீடு செஞ்சவங்களுக்கு எல்லாம், தற்போது மிகப்பெரிய குழப்பத்தில் இருக்காங்க. ஆரம்பத்தில் மின்னல் வேகத்துல ஏறிய வெள்ளியோட வேகம், இப்போ திடீர்னு ஒரு பெரிய பிரேக் அடிச்சிருக்கு. கடந்த சில மாதங்களாக தங்கத்தை விட அதிக லாபம் கொடுத்த வெள்ளி, கடந்த ஒரே மாதத்தில் 15% குறைந்து, முதலீட்டாளர்களை ஷாக் ஆக்கிருக்கு. அதே நேரத்துல தங்கம் மெதுவா, நின்று நிதானமா 3% ஏறி, என்னை நம்பியவர்களை கைவிட மாட்டேன் எனும் விதமாக ஏற்றம் கண்டிருக்கு.
எகிறி அடிச்ச வெள்ளி ஏன் இப்படி சறுக்குச்சு, இப்போ இருக்குற சரிவு ஒரு வாய்ப்பா? இல்ல இன்னும் குறையுமா அப்படின்னு குழப்பத்தில் இருக்கீங்களா? தங்கத்தோட இந்த ஸ்டெடி ஏற்றமும், வெள்ளியோட இந்த அதிரடி வீழ்ச்சியும் உங்களுக்கு சொல்ல வர்ற விஷயம் தான் என்ன? இந்த தருணத்தில் ஒரு ஸ்மார்ட் இன்வெஸ்டரா நீங்க எடுக்க வேண்டிய முடிவு என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

கடந்த ஒரு மாத காலமாக தங்கம் மற்றும் வெள்ளியும் வேறு வேறு பாதைகளில் சென்றுள்ளன. உதாரணத்திற்கு வெள்ளி இடிஎஃப் சுமார் 15.66% சரிவை கண்டிருக்கு. இதே தங்க இடிஎஃப் கிட்டத்தட்ட 3% ஏற்றம் கண்டு இருக்கு. இந்த ஏற்ற இறக்கமானது பல முதலீட்டாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிக ஏற்ற இறக்கத்தை கண்டு வந்த வெள்ளியானது, தற்போது வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது. ஆனால் தங்கம் அப்படியில்லை. அது மெதுவாக படிப்படியாக ஏற்றம் கண்டு வருகிறது. அதற்கான காரணமும் வலுவாக காணப்படுகின்றன. குறிப்பாக சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணிகள், முதலீட்டாளர்களை தங்கத்தில் முதலீட்டை ஒதுக்க வைக்கின்றன. இது தொடர்ந்து ஏற்றம் காண வழிவகுக்கலாம்.
தங்கம் Vs வெள்ளி:ETF ரேஸில் ஜெயிப்பது யாரு? 2026-ல் உங்கள் பணத்தை எதில் போடலாம்?
இது குறித்து நிபுணர்கள், வெள்ளியின் தேவையை தாண்டி, அதன் விலையானது முதலீட்டாளர்களின் அதீத ஆர்வம் மற்றும் சீனாவின் அதிகப்படியான கொள்முதலால் மிகப்பெரிய ஏற்றம் கண்டது. ஆனால் அதன் பிசிகல் தேவையானது பலவீனமாகவே காணப்படுகிறது. அதனால் தற்போது வெள்ளி விலையானது சரிவை கண்டுள்ளது. ஆனால் தங்கம் விலையானது எப்போதும் நிலையான விலை மாற்றத்தை கொண்டது. உலகளாவிய அளவிலான அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் கொள்முதல், பணவீக்கம் போன்ற காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து தேவையானது அதிகளவில் காணப்படுகிறது. இது தங்கம் விலையை ஊக்குவித்துள்ளது. இருப்பினும் முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கம் வெள்ளி என இரண்டிலுமே பிரித்து முதலீடு செய்யலாம். சரியான நிபுணர்களின் ஆலோசனையுடன் எவ்வளவு வாங்கலாம், குறைக்கலாம், விற்பனை செய்யலாம் என்பதை திட்டமிடலாம்.
கோடிக்கணக்கான டன் தங்கம் எங்கே? இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் எவ்வளவு? அதிர வைக்கும் உண்மைகள்?
குறுகிய காலத்தில் வெள்ளி இடிஎஃப்-பில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த போக்கை நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, அது சாதகமான ஒன்றாகத் தான் இருக்கிறது. ஆக தொடர்ந்து வீழ்ச்சி காண வாய்ப்பில்லை. மேலும் தங்கத்தை விட அதிக ஏற்றம் கண்ட நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யவும் நினைத்திருக்கலாம். ஆனால் தொழில் துறையில் நிலவி வரும் வலுவான தேவை, சப்ளையில் பற்றாக்குறை, சீனாவின் கட்டுப்பாடுகள் என பலவும் நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்க வழிவகுக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications