இந்திய குடும்பங்களில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய உணர்வுப்பூர்வமான முதலீடு. ஆனால், கடந்த சில காலங்களாக முதலீட்டாளர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கிறது வெள்ளி. தங்கம் பாதுகாப்பானது என்றால், வெள்ளி லாபகரமானது என கூறப்படுகிறது. தொடர்ந்து அனுதினமும் சந்தையானது உச்சத்தை எட்டி வரும் சூழலில், பிசிக்கலாக வாங்கி வைப்பதை விட ETF (Exchange Traded Funds) மூலம் டிஜிட்டலாக முதலீடு செய்வது இப்போது நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
சமீபத்திய காலமாக தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியில் இருந்து முதலீட்டாளர்கள், புராபிட் புக்கிங் காரணமாக வெளியே எடுத்து வந்தனர். விலை குறைந்தால் வாங்கலாம் என எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், சமீபத்திய வாரங்களாக பெரிய ஏற்றமோ அல்லது இறக்கமோ இன்றி ஒரு ஒருங்கிணைந்த கட்டத்தை அடையத் தொடங்கியுள்ளது எனலாம். பதுங்குவது பாய்வதற்கு தானே என்ற நிலையில், குறைத்த முதலீடுகளை திரும்பவும் முதலீடு செய்யலாமா? புதிய முதலீடுகள் செய்யலாமா அல்லது இன்னும் விலை குறைய காத்திருக்கலாமா என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். தங்கத்தின் நிதானமான வளர்ச்சியா அல்லது வெள்ளியின் அதிரடி லாபமா? உங்கள் பணத்திற்கு எது அதிக வருமானம் தரும்? பாதியில் நின்ற உங்கள் முதலீட்டுப் பயணத்தை மீண்டும் எப்படி தொடரலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

அனுதினமும் மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ள தங்கம் மற்றும் வெள்ளியில், நேரடியாக முதலீடு செய்யாமல் இடிஎஃப் வடிவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். தங்கம் இடிஎஃப் ஆனது கடந்த 10 ஆண்டுகளில் 16.65% முதல் கடந்த ஓராண்டில் 82.32% வரை லாபம் கொடுத்துள்ளன. அதேசமயம் வெள்ளி இடிஎஃப் ஆனது கடந்த 10 ஆண்டுகளில் 59.24% முதல், கடந்த ஓராண்டில் 171% லாபம் கொடுத்துள்ளது. இது நேரடியாக பிசிகலாக வாங்குவதோடு ஒப்பிடுகையில் சிறந்த லாபகரமான ஆப்ஷனாகவும் பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரிக்கும் என்றாலும், இந்த அளவுக்கு வித்தியாசம் கண்டுள்ளது பலரையும் ஆச்சரியத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக இந்த இடிஎஃப்-க்கள் உள்நாட்டு விலையைப் பின்பற்றாமல், லண்டன் புல்லியன் சந்தை அசோசியேஷன் விலையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இதுவே சந்தை விலைக்கும் இடிஎஃப் விலைக்கும் இடையிலான மாற்றத்திற்கு காரணமாகும்.
தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலையானது உச்சத்தை எட்டி வரும் சூழலில், தொடர்ந்து தேவையானது அதிகரித்த வண்ணமே உள்ளது. இது மேற்கொண்டு வரும் காலத்தில் அவற்றின் விலையை ஊக்குவிக்கலாம்.
குறிப்பாக அமெரிக்கா - ஈரான் இடையேயான பிரச்சினை. அமெரிக்காவின் வரி பதற்றம், வட்டி விகிதம் குறைப்பு எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிகளின் கொள்முதல், ஆபரண தங்கத்தின் தேவை, தொழில் துறையில் வெள்ளியின் தேவை என பல சாதகமான காரணிகள் உள்ளன. ஆக இது தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப் மதிப்பும் அதிகரிக்க காரணமாக அமையலாம். ஆக அவற்றில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வது நல்ல விஷயம் தான். குறுகிய காலத்தை கருத்தில் கொள்ளாமல், நீண்ட கால அடிப்படையில் திட்டமிட்டு சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்வது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications