இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான நிஃப்டி (Nifty 50), முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சங்களை தொட்டு சாதனை படைத்து வருகிறது. இதை பார்க்கும் சாதாரண முதலீட்டாளர்களுக்கு சந்தை மிக வலிமையாக இருப்பது போன்ற ஒரு போலியான பிம்பம் கிடைக்கிறது. ஆனால் திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மையே வேறு.
சந்தையில் உள்ள சுமார் 80% பங்குகள் தற்போது பியர் மார்க்கெட் (Bear Market) எனப்படும் கரடியின் பிடியில் சிக்கி, தங்கள் உச்சத்தில் இருந்து 20% க்கும் மேல் சரிந்துள்ளன. ஒரு சில முன்னணி நிறுவனங்களின் பங்குகள் மட்டும் நிஃப்டியை தாங்கி பிடிப்பதால், ஒட்டுமொத்த சந்தையுமே லாபத்தில் இருப்பது போன்ற ஒரு மாயை நிலவுகிறது. இந்த முரண்பாடான சூழல் முதலீட்டாளர்களுக்கு சொல்லும் பாடம் என்ன? சந்தை காட்டும் இந்த பளபளப்பு நீடிக்குமா அல்லது இது ஒரு பெரிய சரிவிற்கான எச்சரிக்கை மணியா? விரிவாகப் பார்ப்போம்.

தற்போதைய சூழலில் நிஃப்டி குறியீடானது அதன் வரலாற்று உச்சத்தின் அருகில் காணப்படுகிறது. இத் சந்தை தொடர்ந்து வலிமையாக இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் உண்மை நிலவரமே வேறு. கடந்த செப்டம்பர் 2024 முதல் தற்போது வரை சந்தையில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மூலதனம் கொண்ட சுமார் 80% பங்குகள் பியர் மார்கெட் நிலைக்கு சென்றுள்ளன. அதாவது அப்பங்குகள் அவற்றின் சமீபத்திய உச்சத்தில் இருந்து கடும் சரிவை கண்டுள்ளன. ஒரு சில பங்குகள் மட்டுமே நிஃப்டியை உச்சத்தில் இருக்க வைத்துள்ளன. இதனிடையே பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் நஷ்டத்தையே கண்டுள்ளனர்.
தற்போது பங்குச் சந்தையில் காணப்படும் இந்த முரண்பாட்டிற்கு முக்கிய காரணம், ஒரு சில ஹெவிவெயிட் பங்குகள் மட்டுமே குறியீட்டை மேல் நோக்கி தள்ளி கொண்டிருப்பது தான். இதனால் சந்தையின் ஒட்டுமொத்த பலவீனம் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. இதன் விளைவாக, நிஃப்டியின் வளர்ச்சி என்பது பெரும்பாலான முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவில் உள்ள நிஜமான நஷ்டத்தை பிரதிபலிப்பதில்லை. நிஃப்டி குறியீடானது ஏற்றத்தில் இருந்தாலும், பல நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகள் கணிசமாக சரிந்துள்ளன. இந்த சரிவு முன்னதாக எகிறி கிடந்த அந்த பங்குகளின் மதிப்பீட்டை இப்போது ஓரளவுக்கு நியாயமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
இருப்பினும் இதில் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஒரு புறம் லார்ஜ் கேப் பங்குகளின் அதிகப்படியான மதிப்பீடு, அவற்றின் அடுத்த கட்ட ஏற்றத்தை தடுக்கும். அதேசமயம் சந்தை வீழ்ச்சியால் அடிவாங்கிய தரமான பங்குகள் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை வழங்கும்.
ஆக இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது குறியீடுகள் வலுவாக தெரிந்தாலும், ஒட்டுமொத்த சந்தையும் காளையின் பிடியில் இல்லை. இந்த உயர்வு என்பது ஒரு சில பங்குகளை மட்டுமே சார்ந்து மிகக் குறுகிய வட்டத்தில் நடக்கிறது. எனவே இனிவரும் காலங்களில் லாபம் என்பது குறியீடுகளை பின் தொடர்வதை விட, புத்திசாலித்தனமான பங்குகளை தேர்ந்தெடுப்பதில் தான் அடங்கியிருக்கிறது.ஆக கவனமுடன் சிறந்த பங்குகளை முதலீட்டுக்கு தேர்வு செய்வது அவசியம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications