இன்றைய வேகமான உலகில், பணி ஓய்விற்கு பிறகு யாருடைய உதவியும் இல்லாமல், கௌரவமாக வாழ்வதே பலரின் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அந்த கனவை நனவாக்க எல்ஐசி (LIC) ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. ஒரே முறை முதலீடு, வாழ்நாள் முழுவதும் வருமானம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் இந்த திட்டம், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மூத்த குடி மக்களிடையே மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
பொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே மாத மாதம் பிரீமியம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை பிரீமியம் செலுத்த வேண்டும் என்ற டென்ஷன் இருக்கும். ஆனால் இந்த திட்டத்தில் அப்படியில்லை. மொத்தமாக ஒரே பிரீமியம் தான். இதில் மற்றொரு முக்கிய விஷயம் நீங்கள் உயிருடன் இருக்கும் வரையில், சந்தை நிலவரம் எப்படி இருந்தாலும், உங்களுக்கு பென்ஷன் தொகை தொடர்ந்து மாறாமல் கிடைக்கும். அதுவும் எல்ஐசி என்பதால் பாதுகாப்பிற்கும் பிரச்சனை இல்லை. ஆக வங்கி வைப்பு நிதி போன்ற வழக்கமான திட்டங்களை காட்டிலும் இதில் வருமானம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தொடர்ச்சியாக பிரீமியம் என்ற பிரச்சனையும் இல்லாமல், வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான வருமானம், உறுதி அளிக்கப்பட்ட லாபம் தரும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், எல்ஐசி உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை தருகிறது. கடந்த ஜனவரி 12ம் தேதி ஜீவன் உத்சவ் சிங்கிள் பிரீமியம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் ஓரே ஒரு ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்தினால் போதும்.
இதனால் ஒவ்வொரு மாதமும் அல்லது வருடமும் பிரீமிய தவணை செலுத்த வேண்டிய பிரச்சனை இருக்காது. குறிப்பாக வழக்கமான வருமானம் இல்லாதவர்கள் அல்லது பணி ஓய்வுக்கு பிறகு வருமானம் இல்லாதவர்கள் இத்திட்டத்தை தேர்வு செய்யலாம்.
ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?
இந்த திட்டம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. எதிர்பாராத விதமாக பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், முன்கூட்டியே உறுதி செய்யப்பட்ட தொகை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும். மொத்தத்தில் இது நீங்கள் இல்லாவிட்டாலும் குடும்பத்தினர் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
இது சந்தையுடன் தொடர்பில்லாத ஒரு திட்டமாகும். ஆக உங்கள் பணமானது பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படாது. ஆக சந்தையே கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாலும் உங்களுக்கு பிரச்சனை இருக்காது. ஆக வருமானம் உறுதி என்பதால், இது சேமிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் கொடுக்கும் திட்டமாகும். ஆக ரிஸ்க் எடுக்க விரும்பாத, அதேசமயம் சீரான வருமானம் தரக்கூடிய திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் உகந்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications