இந்தியாவின் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு இருக்கிறது. பான் கார்டு நமக்கான மிக முக்கியமான ஒரு நிதி ஆவணம். நம்முடைய பான் எண் இருந்தாலே போதும், நம்முடைய நிதி சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் பெற முடியும்.
வங்கி கணக்கு தொடங்குவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள், சொத்து வாங்குவது , வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது என அனைத்து சேவைகளுக்குமே பான் கார்டு கட்டாயம் கேட்கப்படும். சில சமயங்களில் இந்த பான் கார்டு தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நபர்களுக்கு அவர்கள் பான் கார்டு அவர்களுக்கு தெரியாமலேயே தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவது தெரியாமல் போய்விடுகிறது.

போலியான வங்கி கணக்குகளை உருவாக்கவும் போலியான கடன்களை பெற்று ஏமாற்றுவதற்கும் அடையாள திருட்டின் மூலம் உங்களுடைய பான் எண்ணை மோசடியாளர்கள் திருடி பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனை கவனிக்காமல் விடும் போது போலீஸ் கேஸ் கூட வரலாம். எனவே அவ்வப்போது உங்களுடைய பான் கார்டு விவரங்கள் கசியாமல் பாதுகாப்பாக இருக்கிறது யாரும் அதனை தவறான முறையில் பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
நம்முடைய பான் கார்டு தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதை கண்டுபிடிக்க இருக்கக்கூடிய ஒரே வழி உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை செக் செய்து கொள்வது தான். பொதுவாக நாம் நம்முடைய கிரெடிட் ஸ்கோரை சோதனை செய்து பார்க்கும் போது அதில் நம்முடைய பெயரில் எங்கெல்லாம் கடன் வாங்கப்பட்டிருக்கிறது எவ்வளவு கடன் வாங்கப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரிய வரும்.
தற்போது போன் பே ,கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் வாயிலாகவே நம்முடைய கிரெடிட் ஸ்கோரை நம்மால் கண்டறிந்து விட முடிகிறது. அதில் கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு, உங்கள் பெயரில் இருக்க கூடிய கடன்கள் என்னென்ன, உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்காத கடன் விவரம் ஏதேனும் இடம்பெற்று இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யுங்கள்.
உங்களுக்கு தெரியாமல் உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் உங்களுடைய பான் எண் பயன்படுத்தப்பட்டு கடன் வாங்கப்பட்டிருக்கிறது அல்லது வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது என்பன உள்ளிட்டவை அதில் தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிப்பது நல்லது. இல்லை என்றால் யாரோ வாங்கிய கடனை நீங்கள் செலுத்த நேரிடலாம் இதனால் கிரெடிட் ஸ்கோர் குறைந்து பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலை உண்டாகலாம்.


Click it and Unblock the Notifications