சென்னை: ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்று. எல்லா விதமான அரசு சம்பத்தப்பட்ட விஷயங்களுக்கும் ஆதார் அட்டையே முதன்மை ஆவணமாக கருதப்படுகிறது. அரசாங்கம் வழங்கும் அனைத்து திட்டங்களுக்கும் அடையாள சான்றாக ஆதார் அட்டை தான் இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக இருப்பதால் இதில் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக இருப்பது அவசியமாகும்.
பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் என ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கவேண்டும். இல்லாத பட்சத்தில் அவை உடனடியாக திருத்தம் செய்யப்பட வேண்டும்.

முக்கியமாக ஒருவர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடிபெயரும் பொழுது அந்த நபரின் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டும். முகவரி மாற்றம் செய்வது என்பது எளிதான செயல்முறை தான். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் முகவரியை ஈசியாக புதுப்பிக்கலாம்.
ஆன்லைனில் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை எப்படி புதுப்பிப்பது?:
ஸ்டெப் 1: முதலில் UIDAI இணையதளத்திற்க்குள் ( https://myaadhaar.uidai.gov.in/ ) செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: ஆதார் நம்பருடன் பதிவு செய்யப்பட்ட, மொபைல் நம்பரை என்டர் செய்து, 'Send OTP' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: தற்போது உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP-யை என்டர் செய்து Login என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: இப்பொழுது UIDAI தளத்தில் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதன் கீழே Scroll செய்து "Address Update" என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் "Update Aadhaar Online" என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 5: அதன்பின் அங்கு புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் உள்ள தகவல்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். பின்பு "Process to Update Aadhaar" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: இப்போது எந்தெந்த தகவல்களை மாற்ற வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து திருத்திக் கொள்ளலாம். அதன்பின் Address என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, தற்போதைய முகவரி திரையில் தோன்றும். பின்னர் மாற்றம் செய்ய விரும்பும் புதிய முகவரி விவரங்களை அதன் கீழ் தோன்றும் Details to be Updated என்ற பிரிவில் என்டர் செய்ய வேண்டும்.
புதிய முகவரியை முழுவதுமாக பதிவேற்றிய பிறகு, முகவரிக்கான ஆதாரமாக ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பேங்க் பாஸ்புக், டிரைவிங் லைசன்ஸ், சமீபத்திய எலக்ட்ரிசிட்டி பில், சமீபத்திய லேண்ட்லைன் பில், ஓய்வூதிய அட்டை, பெயர் மற்றும் முகவரி அடங்கிய பள்ளி டிரான்ஸ்பர் சர்டிபிகேட் (TC)
இவை அல்லாத இன்னும் சில ஆவணங்களையும் வைத்து ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம். மீண்டும் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், Preview page என்ற
optionக்கு சென்று பார்த்துவிட்டு அதன் பின் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
அப்டேட் செய்த தகவல்கள் யாவும் சரியாக இருப்பதை உறுதிபடுத்திக் கொண்ட பின்னர் Next என்ற பட்டனை அழுத்தவும். பின்னர் சேவை கோரிக்கை எண் (SRN) ஒன்று வழங்கப்படும். எதிர்கால தேவைக்காக அதை சேமித்து வைத்து கொள்ளலாம். கடைசியாக முகவரி புதுப்பிப்பிதற்கான ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவுடன் சில நாட்களில் உங்கள் புதிய முகவரியுடன் ஆதார் கார்டு புதுப்பிக்கப்பட்டுவிடும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications