சென்னை: இந்தியாவில் முக்கியமான முகவரி சான்று என்றால் அது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தான். பேங்க் பரிவர்த்தனைகள் முதல் அரசாங்க திட்டங்கள் வரை அனைத்திற்கும் மிக முக்கியமான அடையாள சான்றாக ஆதார் அட்டை தான் இருக்கிறது. எனவே உங்களுடைய ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் என ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவை உடனடியாக திருத்தம் செய்யப்பட வேண்டும்.
முக்கியமாக ஒரு நபர் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு குடிப்பெயரும் பொழுது, அந்த வீட்டின் முகவரி கண்டிப்பாக ஆதார் கார்டில் அப்டேட் செய்யப்பட வேண்டும். முகவரி மாற்றம் செய்வது என்பது எளிதான செயல்முறை தான். நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார் கார்டில் முகவரியை அப்டேட் செய்வதற்கு எலக்ட்ரிசிட்டி பில் மட்டும் இருந்தால் போதுமானது

ஆன்லைனில் எலக்ட்ரிசிட்டி பில்லைப் பயன்படுத்தி ஆதார் அட்டையில் உள்ள முகவரியை எப்படி புதுப்பிப்பது?:
ஸ்டெப் 1: முதலில் UIDAI-இன் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: ஆதார் நம்பருடன் பதிவு செய்யப்பட்ட, மொபைல் நம்பரை என்டர் செய்து, "Send OTP" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: இப்போது உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும். அந்த OTP-யை என்டர் செய்து "Login" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: அதன் பின் இணையதளத்தில் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். கீழே ஸ்க்ரோல் செய்து "Address Update" என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் "Update Aadhaar Online" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: அதன்பின் அங்கு புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் உள்ள தகவல்களை பார்த்துவிட்டு பின்பு "Process to Update Aadhaar" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: எந்தெந்த தகவல்களை மாற்ற வேண்டுமோ அதைத் திருத்திக் கொள்ளலாம். அதன்பின் Address என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், தற்போதைய முகவரி திரையில் தோன்றும். பின்னர் மாற்றம் செய்ய விரும்பும் புதிய முகவரி விவரங்களை அதன் கீழ் தோன்றும் "Details to be Updated" என்ற பிரிவில் என்டர் செய்ய வேண்டும்.
புதிய முகவரியை முழுவதுமாக பதிவேற்றிய பிறகு, முகவரிக்கான ஆதாரமாக எலக்ட்ரிசிட்டி பில்லை அப்லோட் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 7: முகவரி மாற்றத்தைச் செயல்படுத்த ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும்.
நீங்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பேங்க் பாஸ்புக், டிரைவிங் லைசன்ஸ், சமீபத்திய எலக்ட்ரிசிட்டி பில், சமீபத்திய லேண்ட்லைன் பில், ஓய்வூதிய அட்டை, பெயர் மற்றும் முகவரி அடங்கிய பள்ளி டிரான்ஸ்பர் சர்டிபிகேட் (TC) என எதை வைத்து வேண்டுமானாலும் வைத்து ஆதார் புதுப்பிக்கலாம்.
முகவரியை புதுப்பித்த பிறகு மீண்டும் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், "Preview Page" என்பதற்கு சென்று பார்த்துவிட்டு அதன் பின் மீண்டும் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications