இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஓய்வு காலத்திற்கு நிதி பாதுகாப்பை தரக்கூடிய ஒரு திட்டம்தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என அழைக்கப்படும் epfo திட்டம். இபிஎப்ஓ திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்திலிருந்தும் அவர்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனம் சார்பாகவும் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்திற்கு அரசு சார்பாக ஆண்டுதோறும் வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த பணம் காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைந்து ஓய்வு பெறும்போது அந்த ஊழியருக்கு ஒரு பெரிய தொகையை பெற்று தரும். பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை ஓய்வு பெறுவதற்கு முன்னரே நமக்கு ஒரு அவசர நிதி தேவை ஏற்படுகிறது நாம் எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன.

விரைவில் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யூபிஐ மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வாயிலாக எடுத்து பயன்படுத்தக்கூடிய வசதியை இபிஎப்ஓ அறிமுகம் செய்ய இருக்கிறது. அதற்காக இபிஎப்ஓ அமைப்பிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னதாகவே உங்களுக்கு ஒரு அவசர தேவை இருக்கிறது பிஎப் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் பின்வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்.
முதலில் உங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் 12 இலக்க UAN நம்பர் ஆக்டிவேட் ஆக இருக்க வேண்டும். அடுத்ததாக உங்களுடைய ஆதார் எண் மற்றும் வங்கி எண் ஆகியவை உங்களுடைய பிஎஃப் கணக்கோடு இணைக்கப்பட்டு கேஒய்சி சரிபார்ப்பு என்பது முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் எண் உங்கள் கைவசம் இருக்க வேண்டும், அந்த மொபைல் எண் ஓடிபி மெசேஜ் பெறும் வகையில் ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும்.
ஆன்லைன் வாயிலாகவே பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.
முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணையதளத்திற்கு சென்று உங்களுடைய UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
அதில் online services என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் Claim Form-31, 19, 10C & 10D என காட்டும் அதில் எந்த படிவம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்
உங்கள் விவரங்கள் ஸ்கிரீனில் தோன்றும், உங்களுடைய வங்கி கணக்கு எண்ணின் கடைசி நான்கு இலக்க எண் கேட்கும் அதனை கொடுத்து verify தர வேண்டும்.
உங்களுடைய வங்கி கணக்கு சரி பார்க்கப்பட்ட உடன் process for online claim என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் எந்தெந்த ஆப்ஷன்களுக்காக நீங்கள் பணத்தை எடுக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கும்.
Form-31, 19, 10C & 10D என இதில் எது தேவையோ அதனை கிளிக் செய்து தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும். இதனை அடுத்து உங்களுடைய பாஸ்புக் அல்லது காசோலையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும்.
இதன் பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்களுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி கிளிக் செய்தால் உங்களுடைய விண்ணப்பம் அனுப்பப்படும்.
நீங்கள் வேலையில் இருந்து நின்று விட்டீர்கள் இனி வேலைக்கு செல்ல மாட்டேன் எனும் போது பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை முழுமையாக எடுப்பதற்கு Form-19 பயன்படுத்த வேண்டும். இபிஎஸ் திட்டத்தில் ஓய்வூதியத்தில் இருக்கக்கூடிய பணத்தை எடுக்க வேண்டும் என்றால் 10C படிவத்தை பயன்படுத்த வேண்டும். உங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை ஒரு மருத்துவ தேவை, திருமணம் , குழந்தைகளின் கல்வி ,வீடு வாங்குவது போன்ற தேவைகளுக்காக எடுக்கும்போது படிவம் 31 நிரப்ப வேண்டும.
உங்களுடைய கிளைம் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதையும் நீங்கள் ஆன்லைன் வாயிலாகவே தெரிந்து கொள்ள முடியும். இதற்காக இபிஎப் அலுவலகத்திற்கு அலைய வேண்டிய தேவையில்லை. உங்களுடைய அனைத்து தகவல்களும் சரியாக இருக்கிறது நீங்கள் பணம் கோருவதற்கான காரணம் நியாயமானதாக இருக்கிறது எனும் போது உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டு ஒரு வாரத்திற்குள்ளாகவே உங்களுடைய கணக்கிற்கு பணம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.


Click it and Unblock the Notifications

