இந்தியாவில் ஆன்லைன் நிதி .மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது புது புது வழிகளை கையாண்டு மோசடியாளர்கள் நம்மிடம் இருந்து பணத்தை பறிக்கின்றனர். மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மற்றும் போன் கால்கள் மூலம் வங்கியில் இருந்தோ அல்லது அரசு நிறுவனங்களிலிருந்து பேசுவது போலவோ பேசி அல்லது தகவல்களை அனுப்பி நமது ரகசிய தகவல்களை பெறுவது. அதன் மூலம் நமது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவது நடக்கிறது.
சில குறிப்பிட்ட லிங்குகளை அனுப்பி அதன் மூலம் நமது போனில் உள்ள தகவல்களை திருடுவது ஒருவகையான ஸ்கேம். இத்துடன் whatsapp, telegram உள்ளிட்ட தளங்கள் வழியாக நம்மை தொடர்பு கொண்டு நாம் குறைந்த முதலீடு செய்தாலே போதும் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி நம்மிடம் பணத்தை பறிப்பது ஒரு வகையான மோசடி.

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாக கூறிய ஏமாற்றுவது , வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஏமாற்றுவது என பல்வேறு வகையான மோசடிகள் தற்போது இந்தியாவில் அரங்கேறி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் நமக்குத் தெரிந்தவர்களை புகைப்படம் மற்றும் தகவல்களைக் கொண்டு போலியான ப்ரொபைல்களை உருவாக்கி அவர்களைப் போலவே பணம் கேட்டு பெறுவது மற்றும் யுபிஐ வாயிலாக நமது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுப்பது. இப்படி டிஜிட்டல் ரீதியான பண மோசடிகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
ஒருவேளை இப்படி ஒரு மோசடியில் நீங்கள் சிக்கிக் கொண்டு உங்களது பணத்தை இழந்தால் என்ன செய்ய வேண்டும் ? முதலில் இவ்வாறு உங்களுக்கு உங்களை மோசடி செய்தவர்கள் உடனான அனைத்து தகவல் தொடர்புகளையும் உடனடியாக நிறுத்துங்கள். அவர்களது தொலைபேசி அழைப்புகளுக்கோ அல்லது மெசேஜ்களுக்கோ அல்லது மின்னஞ்சல்களுக்கோ எந்த ஒரு பதிலையும் அளிக்கக்கூடாது.
இரண்டாவதாக உங்களது வங்கியிடம் இதுபோல பண மோசடி செய்யப்பட்டது தொடர்பான தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உங்களது கணக்கினை பிளாக் செய்வது குறித்து நீங்கள் உடனடியாக தகவல் தெரிவித்தால் மேற்கொண்டு உங்கள் கணக்கிலிருந்து பணம் பறிபோவதை தடுக்க முடியும். தற்போது அனைத்து வங்கிகளுமே ஆன்லைன் வாயிலாகவே இது போன்ற புகார்கள் அளிப்பதற்கு வழிவகை செய்துள்ளன.
அடுத்ததாக உடனடியாக உங்களது கணக்குகளின் பாஸ்வேர்டுகளை மாற்றி உங்களது கணக்குகளை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும். குறிப்பாக உங்களது யுபிஐ பின் மற்றும் மொபைல் பேங்கிங் பாஸ்வேர்டுகள் உள்ளிட்டவற்றை மாற்ற வேண்டும். முடிந்த அளவு 2 factor authentication பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
இவ்வாறு சைபர் கிரைம் வாயிலாக பணத்தை இழந்தவர்கள் உடனடியாக சைபர் கிரைம் தளத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும். cybercrime.gov.in தளத்திற்கு சென்று உங்கள் கைவசம் இருக்கக்கூடிய ஆதாரங்களை குறிப்பிட்டு நீங்கள் புகார் அளிக்கலாம். எவ்வளவு சீக்கிரம் புகார் அளிக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் உங்களது பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications