இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் கேஸ் மற்றும் HP கேஸ் உள்ளிட்ட LPG சிலிண்டர்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஈ-கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வரை ஆகஸ்டு 16-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டு ஆகஸ்ட் 31 வரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஈ-கேஒய்சி செயல் முறையை அரசு சொன்ன காலக்கெடுவுக்குள் முடித்திருக்க வேண்டும். அப்போதுதான் தடையின்றி மானிய விலையில் சிலிண்டர்களைப் பெற முடியும்.
ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் ஈ-கேஒய்சி செயல்முறையை முடிக்க தவறினால் என்ன நடக்கும்?: ஈ-கேஒய்சி செயல்முறையை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி சிலிண்டர் பெறுவதில் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் கேஸ் இணைப்பு உடனடியாக ரத்து செய்யப்படாது. இருந்தாலும் நீங்கள் வீட்டு உபயோக சிலிண்டருக்கு செலுத்தும் கட்டணத்தை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

உதாரணமாக கமர்சியல் சிலிண்டரின் கட்டணம் எவ்வளவோ அதே விலைக்கு சிலிண்டர் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். போலியாக கேஸ் சிலிண்டர் பெற்று பயன்படுத்துபவர்களை தடுப்பதற்காகவும், வீட்டு உபயோக சிலிண்டரை பெற்று தங்கள் வணிகத்திற்காக சட்ட விரோதமாக பயன்படுத்துபவர்களை கண்டுபிடிப்பதற்காகவும் தான் இந்த சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஈ-கேஒய்சி சரிபார்ப்பை பூர்த்தி செய்வது எப்படி?: இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். முதலில் இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் IndianOil ONE மற்றும் Aadhaar FaceRD ஆப் ஆகியவற்றை டவுன்லோட் செய்ய வேண்டும்.
பின்னர் IndianOil ONE ஆப் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரை பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய 16 டிஜிட் எல்பிஜி ஐடியை என்டர் செய்யவும். இந்த நம்பர் உங்களுடைய கேஷ்மெமோ அல்லது ரசீதில் இருக்கும். விவரங்களை வழங்கிய பின்னர் உங்களுடைய அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும். அதில் "My Profile" என்ற பகுதிக்குச் சென்று "re-KYC" என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் அங்குள்ள ஒப்புதல் படிவத்தை படித்துவிட்டு.. அவற்றை "அக்செப்ட்" என்று கொடுத்து ஃபேஸ் ஆத்தன்டிகேஷன் செயல்முறையை நிறைவு செய்யவும். நீங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகத்திற்கு சென்றும் ஈ-கேஒய்சி செயல்முறையை நேரடியாக முடிக்கலாம். ஆன்லைன் மூலம் முடிக்க நினைத்தால் மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி வீட்டில் இருந்தே முடிக்கலாம்.
பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?: Hello BPCL என்ற ஆப்-ஐ டவுன்லோட் செய்து உள்நுழைய வேண்டும். உள் நுழைந்ததுமே முதல் திரையில் e-KYC என்ற ஆப்ஷன் இருக்கும். அதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரைப் பயன்படுத்தி "கெட் ஓடிபி" என்று கிளிக் செய்தால் உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை படித்துவிட்டு ஒப்புதல் வழங்கி செயல் முறையை முடிக்கவும்.
HP கேஸ் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?: முதலில் HP Pay மற்றும் Aadhaar FaceRD ஆகிய ஆப்-களை டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர் உங்களுடைய மொபைல் நம்பரை பயன்படுத்தி MPIN உருவாக்க வேண்டும். "My HP" என்ற பகுதிக்குச் சென்று LPG --> e-KYC என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். "Capture Face" என்ற பட்டனை தேர்வு செய்து ஃபேஸ் ஆத்தன்டிகேஷன் செயல்முறையை நிறைவு செய்யவும்.
ஏற்கனவே வாடிக்கையாளர்கள் ஈ-கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருந்தால் மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதை முடிக்காதவர்களுக்காக தான் ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
