இந்தியாவில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 1.10 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புதிதாக பணம் கொடுத்து நகை வாங்க முடியாத நிலையில் இருக்கக்கூடிய மிடில் கிளாஸ் மக்கள் தங்களுடைய பழைய நகைகளை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் செய்து அதற்கு பதிலாக புதிய தங்க நகைகளை வாங்கிக் கொள்கின்றனர்.
பல்வேறு நகை விற்பனை நிறுவனங்களும் கூட பழைய நகைகளை மாற்றும் போக்கு மக்களிடையே அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றன. இவ்வாறு பழைய தங்க நகைகளை விற்பனை செய்து புதிய நகைகளை வாங்கும் போது சில குறிப்பிட்ட விஷயங்களை கவனிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அவை என்னென்ன என்பதை விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய நகை விற்பனையாளர் சங்கத்தின் தலைவரும் ரித்தி சித்தி நிறுவன உரிமையாளருமான பிரித்விராஜ் கோத்தாரி, பழைய நகைகளை கொடுத்து புதிய நகை வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்கவில்லை என்றால் ஏமாற நேரிடும் என்கிறார்.
பழைய நகையின் எடை என்ன, அதன் தூய்மை தன்மை என்ன, அதில் ஹால்மார்க் குறியீடு இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்து தான் நகை விற்பனை நிறுவனங்கள் அவற்றை எவ்வளவு தொகைக்கு எடுத்து கொள்ளலாம் என்ற முடிவினை எடுக்கும். எனவே பழைய நகையில் ஹால்மார்க் குறியீடு இருக்கும்பட்சத்தில் கணிசமான தொகை கிடைக்கும் இல்லை என்றால் அன்றைய விலையை விட சற்று குறைவாகவே எடுத்து கொள்ல வாய்ப்புள்ளது.

சில நகைகடைகள் அந்த கடையிலேயே வாங்கிய நகைகளை கொடுத்து புதுசு வாங்குகிறோம் என்றால் பெரிய அளவில் கழிக்காமல் அதிகபட்ச தொகையை வழங்கும். எனவே முடிந்த வரை நீங்கள் வாங்கிய கடையிலேயே மாற்ற முயற்சி செய்யுங்கள், அந்த கடையில் தற்போது ஹால்மார்க் நகைகள் விற்கப்படுகின்றன என்றால் மட்டும் வாங்குங்கள் இல்லை என்றால் வேறு கடைக்கு செல்லுங்கள் என்கிறார்.
நகை கடையில் பழைய நகையை எடை போட்டு அதனை எவ்வளவு தொகைக்கு எடுத்து கொள்வார்கள் என்ற கணக்கினை உங்களுக்கு எழுதி கொடுப்பார்கள் அதன் அடிப்படையில் புதிய நகை எவ்வளவுக்கு வாங்கலாம் என்ற முடிவினை எடுக்கலாம். பெரும்பாலான பழைய நகைகளில் ஹால் மார்க் குறியீடுகள் இருக்காது, ஏனெனில் அண்மை காலமாக தான் மத்திய அரசு இதனை கட்டாயமாக்கியது.

எனவே நீங்கள் வாங்க கூடிய புதிய நகையில் ஹால்மார்க் குறியீடு, நீங்கள் நகை வாங்கும் கடை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்று பெறப்பட்ட கடை என்பதையும் உறுதி செய்து கொள்வது நல்லது. பழைய நகையை விலைக்கு கொடுக்கும் போது அதில் எவ்வளவு கிராமை கழிக்கிறார்கள் என்பதை கவனித்து நீங்களும் ஒரு முறை கணக்கிட்டு பார்க்க வேண்டும் என கூறுகிறார் பிரித்விராஜ் கோத்தாரி.
நீங்கள் வாங்கக்கூடிய புதிய நகையில் பிஐஎஸ் ஹால்மார்க் குறியீடும் அந்த தங்கத்தின் தூய்மை தன்மை மற்றும் அந்த நகை விற்பனை செய்யக்கூடிய நிறுவனத்தை குறிக்கக்கூடிய HUID ஆகியவை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என அவர் குறிப்பிடுகிறார். ஹால்மார்க் இல்லாத தங்கத்தை ஒரு போதும் வாங்க கூடாது ஏனெனில் அது போலியாக கூட இருக்கலாம் என்கிறார். சில கடைகளில் ரொக்கமாக கொடுங்கள் என விலை குறைவாக கூறி ஹால்மார்க் இல்லாத நகைகளை தலையில் கட்டிவிட வாய்ப்புள்ளது, இப்படி வாங்கும்போது உரிய ரசீதும் கொடுக்க மட்டார்கள். அந்த நகை போலி என நீங்கள் கண்டறிந்தாலோ அல்லது வாங்கியதை விட குறைவான எடையில் இருப்பதை கண்டுபிடித்தாலோ ரசீது இல்லை என்றால் அவர்களிடம் சென்று கேட்க கூடாது முடியாது என்கிறார்.
எனவே பழைய நகை கொடுத்து புது நகை வாங்கும் போது பழைய நகையை எடுப்பதற்கான கணக்கினை கவனிக்க வேண்டும், நகை கடை அரசின் சான்றிதழ் பெற்றதா என அறிய வேண்டும் வாங்கும் புதிய நகைகளில் ஹால்மார்க் இருக்கிறதா என பார்க்க வேண்டும், நகையின் எடை, செய்கூலி , ஜிஎஸ்டி ஆகிய அனைத்தும் குறிப்பிட்ட தெளீவான ரசீது வாங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications