நாம் வங்கியில் கணக்கு தொடங்கும்போது அல்லது ஒரு காப்பீடு திட்டத்தில் இணையும் போது, முதலீடு செய்யும் போதெல்லாம் எல்லாம் கேஒய்சி( KYC - Know your Customer) அதாவது உனது கஸ்டமரை தெரிந்து கொள் என்பது கட்டாயம். தற்போது அதே போல தான் வாகனங்களுக்கு கேஒய்வி KYV - Know your Vehicle என்பது கட்டாயம்.
KYV என்றால் என்ன , இதனை ஃபாஸ்டேக் பயனர்கள் ஏன் முடிக்க வேண்டும், அப்படி முடிக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள் என்பது தான் இதன் அர்த்தம். அனைத்து ஃபாஸ்டேக் பயனர்களும் தங்களின் ஃபாஸ்டேக் கணக்கில் இணைக்கப்பட்டிருக்கும் வாகனத்திற்கு இந்த KYV-ஐ செய்ய வேண்டும்.

அதாவது அந்த வாகனத்தை புகைப்படத்தை அனைத்து பக்கங்களிலும் இருந்து எடுத்து பதிவேற்றுவதற்கான ஒரு ஒழுங்குமுறை தான் . ஃபாஸ்டேக் சரியான மற்றும் பொருத்தமான வாகனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை சரி பார்க்கவே இந்த நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இந்த கேஒய்வி என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு செல்லுபடியாக. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை குறிப்பிட்ட அந்த ஃபாஸ்டேக்கில் இந்த குறிப்பிட்ட அந்த வாகனத்திற்கு கேஒய்வி செய்யப்பட வேண்டும்.
அதாவது வாகனத்தின் புகைப்படங்களை மீண்டும் அப்லோடு செய்ய வேண்டும். ஃபாஸ்டேக் பயன்படுத்தக்கூடியவர்கள் தங்களுடைய வாகனங்களுக்கான இந்த கேஒய்வி வெரிஃபிகேஷனை முடித்திருப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதாவது உங்களுடைய வாகனத்தின் படங்களை இந்த கேஒய்வி நடைமுறையின் கீழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் . இதனை அடுத்து உங்களுடைய ஃபாஸ்டேக் கணக்கு இணைக்கப்பட்ட வங்கி அதனை சரி பார்த்து அனுமதி அளிக்கும்.

ஒரு வேளை வங்கி அதனை ஏற்கவில்லை என்றால் உங்களுடைய ஃபாஸ்டேக் கணக்கு ஹாட் லிஸ்டில் சேர்க்கப்படும். அதன் பின்னரும் ஃபாஸ்டேக் கணக்கை பயன்படுத்தலாம் ஆனால் அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும் . சில லாரி ஓட்டுநர்கள் கார்களின் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் குறைவான கட்டணம் செலுத்தி இருக்கின்றனர். இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து தான் KYV முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது ஃபாஸ்டேக் கணக்குகளில் கேஒய்வி செய்வதற்கான நடைமுறையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எளிமைப்படுத்தி இருக்கிறது . இது ஃபாஸ்டேக் பயனர்களுக்கு பெரிய நிவாரணத்தை வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் படி இனி வாகனங்களின் பக்கவாட்டு புகைப்படங்களை பதிவேற்ற தேவையில்லை.
கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கு வாகனத்தின் முகப்பு பகுதி மற்றும் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்ட பக்கத்தின் புகைப்படம் மட்டுமே போதுமானது என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் பயனர் தன்னுடைய வாகன எண், சேசிஸ் எண் அல்லது மொபைல் நம்பரை வாஹன் தளத்தில் உள்ளீடு செய்யும் போது அதிலிருந்து தானாகவே அந்த வாகனத்திற்கான ஆர்சி விவரங்கள் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த KYV நடைமுறையை முடிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படும். இந்த KYV பாலிசி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னே வழங்கப்பட்ட ஃபாஸ்டேக் கணக்கு வைத்திருப்பவர்கள் விரைவில் இந்த கேஒய்வியை முடித்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அந்த கணக்கு தொடர்பான புகார்கள் வரும்போது அந்த கணக்கு நீக்கப்படலாம் என சொல்லபப்டுகிறது. மேலும் ஃபாஸ்டேக் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு KYV முடித்துக் கொள்ளுமாறு எஸ்எம்எஸ் மூலம் நினைவுபடுத்தும் என அரசு கூறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications