இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வளர்ச்சி அடைந்திருக்கிறது. யுபிஐ மூலம் நாம் எளிதாக அனைத்து விதமான கட்டணங்களையும் செலுத்தி விட முடிகிறது .எங்கு சென்றாலும் கையில் பர்ஸை கொண்டு செல்ல வேண்டும் அல்லது ஏடிஎம் கார்டை கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை எல்லாம் தற்போது கிடையாது.
பேடிஎம் யுபிஐ: ஸ்மார்ட் போன் இருக்கிறது அதில் யுபிஐ செயலி இருக்கிறது என்றாலே போதும் யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் கணக்கிலிருந்து பணம் அனுப்பிக் கொள்ள முடியும். இந்தியாவில் யுபிஐ சேவையை பலரிடமும் கொண்டு சேர்த்த பெருமை பேடிஎம் நிறுவனத்திற்கு உண்டு. இந்த பேடிஎம் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

கோல்டு காயின்ஸ் திட்டம்: பேடிஎம் பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் செயலி மூலம் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயம் கிடைக்கும். அதாவது தங்கம் சேர்க்க வேண்டும் என்றால் நீங்கள் சீட்டு போட வேண்டும் தனியாக முதலீடு செய்ய வேண்டும் என அவசியம் கிடையாது , உங்களின் அன்றாட செலவுகளே உங்களுக்கு தங்கத்தை பெற்று தரும் என பேடிஎம் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு பேமெண்டுக்கும் கோல்டு காயின்: பேடிஎம் நிறுவனத்தின் கோல்டு காய்ன்ஸ் என்ற திட்டத்தின் மூலம் எப்படி நாம் தங்கத்தை பெறுவது என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம் . இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு பேடிஎம் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி பேடிஎம் செயலி பயன்படுத்தி நீங்கள் ஒரு கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பினாலும் சரி அல்லது ஆன்லைனில் பொருள் வாங்க பணம் கட்டினாலும் சரி , யாருக்கேனும் பணம் அனுப்பினாலும் சரி , ரீசார்ஜ் செய்வது , பல்வேறு பில்களை கட்டுவது என பேடிஎம் செயலியின் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் உங்களுக்கு தங்க நாணயத்தை சேர்த்துக் கொடுக்கும்.

மதிப்பில் 1% கோல்டு காயின்: நாம் மேற்கொள்ளக்கூடிய அந்த பரிவர்த்தனையின் மதிப்பில் ஒரு சதவீதம் தொகை உங்களுக்கான தங்க நாணயமாக உங்களுடைய கணக்கில் வந்து சேரும் . உதாரணமாக நீங்கள் ஆயிரம் ரூபாய் பேடிஎம் மூலம் பணம் செலுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு பத்து ரூபாய் மதிப்பிலான கோல்ட் காயின் உங்கள் கணக்கில் வந்து சேர்ந்துவிடும். பின்னர் இந்த கோல்ட் காயின்களை நீங்கள் டிஜிட்டல் கோல்டாக மாற்றிக் கொள்ளலாம். இது உங்களுடைய கணக்கில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படும் .
இனி செலவிலும் சேமிப்பு: இதன் மூலம் நாம் மேற்கொள்ளும்ம் ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனையும் நமக்கு தங்கத்தை வாங்கி வைக்க உதவும் என பேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . நெட் பேங்கிங், யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என அனைத்து வகையான பேமென்ட்களுக்கும் உங்களுக்கு கோல்ட் காயின் என்பது கிடைக்கும். குறிப்பாக கிரெடிட் கார்டு மற்றும் ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு இரட்டிப்பு கோல்டு காயின்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிரெடிட் கார்டு இருந்தா டபுள்: உதாரணமாக நீங்கள் பேடிஎம் செயலி வாயிலாக கிரெடிட் கார்டு அல்லது ரூபே கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏதேனும் ஒரு பரிவர்த்தனை மேற்கொள்கிறீர்கள் என வைத்துக் கொண்டால் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய் உங்களுக்கு 20 ரூபாய் மதிப்பிலான கோல்டு காயின்கள் கிடைக்கும். இது அப்படியே உங்களுடைய கணக்கில் டிஜிட்டல் கோல்டாக சேமிக்கப்படும் .
பின்னர் நமக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது இந்த டிஜிட்டல் கோட்டை பயன்படுத்திக் கொண்டு பணமாக மாற்றலாம் அல்லது நகையாக மாற்றலாம் அல்லது பார்களாக வாங்கலாம். மக்களின் அன்றாட செலவினங்களை தங்கத்தை சேமிப்பதற்கான வாய்ப்பாக மாற்றும் ஒரு திட்டமாக இதனை கொண்டு வந்துள்ளதாக பேடிஎம் கூறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!



Click it and Unblock the Notifications