தற்போது தங்கம் வாங்க வேண்டும் என்றால் நாம் கடைகளுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஈ காமர்ஸ் தொடங்கி குயிக் காமர்ஸ் வரை நாம் ஆர்டர் செய்த பத்து நிமிடங்களில் தங்கம் நம் கைக்கு வந்து சேரக்கூடிய வகையில் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் வளர்ச்சி கண்டு விட்டன.
இந்தியாவில் தற்போது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் , பிளிங்கிட், செப்டோ போன்ற குயிக்காமர்ஸ் தளங்களும் அமேசான் , பிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் தளங்கள், நகை விற்பனை நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகளை நமக்கு ஏற்படுத்தி தந்திருக்கின்றன. இந்த செயலிகளை நாம் ஓபன் செய்து தூய்மையான தங்க நாணயங்களை ஆர்டர் செய்தால் நம் கைகளுக்கு அந்த நகை /நாணயம் என்பது வந்து சேர்ந்து விடும்.

தற்போது தங்க நகைகள் இதற்காகவே குயிக்காமஸ் மற்றும் ஈ-காமர்ஸ் நிறுவனங்களோடு கூட்டு ஒப்பந்தம் செய்திருக்கின்றன. 24 கேரட் கொண்ட தூய்மையான தங்கத்தை நாம் இந்த தளங்கள் வழியாக வாங்க முடியும். சில சமயங்களில் நமது கிரெடிட் கார்டு டெபிட் கார்டுகளுக்கு சலுகைகளும் கிடைக்கின்றன .எனவே நேரடியாக கடைக்கு சென்று வாங்குவதை காட்டிலும் இதில் சற்றே நமக்கு சேமிப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் இவ்வாறு ஆன்லைனில் தங்கம் வாங்கும் போது முக்கியமான சில விஷயங்களை கவனிக்க வேண்டும் இல்லை என்றால் நாம் ஏமாந்து தான் போக வேண்டும் .
புகழ்பெற்ற இணையதளம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற பல்வேறு நகை விற்பனை நிறுவனங்களே நேரடியாக தங்களின் இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் தங்க நகைகளையும் நாணயங்களையும் விற்பனை செய்கின்றன . அதேபோல புகழ்பெற்ற அமேசான் , செப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் போன்றவையும் நமக்கு ஆன்லைன் வாயிலாக தங்கம் வாங்கும் வாய்ப்பை வழங்குகின்றன. நாம் தங்க நாணயம் அல்லது நகை வாங்கக் கூடிய இணையதளம் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலிதானா என்பதை ஒரு முறைக்கு பலமுறை பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
ஹால்மார்க்: நீங்கள் நேரடியாக கடைக்கு சென்று நகை வாங்கினாலும் சரி ஆன்லைனில் நகை வாங்கினாலும் சரி நீங்கள் வாங்கக்கூடிய நகை பிஐஎஸ் ஹால்மார்க் குறியீடு கொண்ட நகையாக இருக்க வேண்டும் . இல்லை என்றால் அது போலி நகை. எனவே நீங்கள் வாங்கும் நகையில் ஹால்மார்க் குறியீடு இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள் .
ரிட்டர்ன்/ எக்ஸ்சேஞ்ச் பாலிசி: ஆன்லைனில் தங்கம் வாங்கும்போது அந்த விற்பனைக்கான ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் பாலிசி எப்படி இருக்கிறது என்பதை கவனியுங்கள். சில நிறுவனங்கள் நோ எக்ஸ்சேஞ்ச் / ரிட்டர்ன் பாலிசி வைத்திருக்கும். நகை வாங்கிய பிறகு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை எக்ஸ்சேஞ்ச் செய்ய முடியாத சூழலும் உண்டாகலாம். எனவே நீங்கள் நகை வாங்குவதற்கு முன்னர் அதற்கான ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் பாலிசியை படித்து தெரிந்து கொள்வது நல்லது. சில நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் எக்ஸ்சேஞ்ச் அல்லது ரிட்டர்ன் செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பினை வழங்கும். அதே போல இந்த ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் பாலிசி கீழ் குறிப்பிட்ட சில விதிமுறைகளை நிறுவனங்கள் விதிக்கும்.
விலை: நீங்கள் ஆன்லைனில் நகை தேர்ந்தெடுக்கும் போது ஒரு விலை காட்டும் இறுதியாக நீங்கள் பணம் செலுத்தும் போது ஒரு விலை காட்டும். எனவே நீங்கள் நகையை தேர்ந்தெடுத்த உடனேயே அதற்கு எவ்வளவு செய்கூலி சேதாரம் வசூல் செய்யப்படுகிறது ,அன்றைய நாளில் தங்கத்தின் விலை என்ன, ஜிஎஸ்டி தவிர்த்து வேறு ஏதேனும் வரிகள் விதிக்கப்படுகின்றனவா, ஷிப்பிங் சார்ஜ் எவ்வளவு ஆகியவற்றை கணக்கிடுவது அவசியம்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications