இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கும் ,வெளி மாநிலங்களுக்கும் செல்வதற்கு ரயில்களையே பயன்படுத்துகின்றனர். குறைந்த அளவு கட்டணம் மற்றும் சௌகரியமான பயணம் ஆகிய இரண்டுமே பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை விரும்புவதற்கு காரணமாக அமைகிறது.
தட்கல் டிக்கெட்: ரயில் பயணங்களை பொறுத்தவரை நாம் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் . திடீரென வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் பயணிகளுக்காகவே ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் என்ற முறையை அமல்படுத்திருக்கிறது. இதன்படி பயணம் செய்யும் நாளுக்கு முந்தைய நாள் நாம் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ள முடியும். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

ஏஜேன்சிகள் ஆதிக்கம்: காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட் புக்கிங் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும். இதனால் சாமானிய மக்கள் தங்களுக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வந்தனர், ஏஜென்சிகள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துவிட்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இந்த நிலையில் தான் ரயில்வே நிர்வாகம் தட்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
தட்கல் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயம்: ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை குறிப்பிட்டாக வேண்டும். ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் இருக்கும் தங்களுடைய கணக்கோடு ஆதாரை இணைத்து அங்கீகரித்தவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும். இது தவிர ஜூலை 15ஆம் தேதியிலிருந்து தட்கல் முறையில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி-ஐ உள்ளீடு செய்து மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் 30 நிமிடங்கள் : தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்கள் தங்களுடைய ஐஆர்சிடிசி கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து கேஒய்சி முடித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஐஆர்சிடிசி கணக்குடன் எப்படி ஆதாரை இணைப்பது என்பது குறித்து தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை சேர்ப்பது எப்படி?
- ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்கு சென்று லாகின் செய்யவும்
- Profile பிரிவில் Link Aadhaar என்பதை தேர்வு செய்யவும்
- ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டையில் இருக்கும் பெயரை உள்ளிடவும்
- இதனை அடுத்து Send OTP என்பதை தேர்வு செய்யவும்
- ஓடிபி-ஐ உள்ளிட்டு Verify OTP ஐ கிளிக் செய்ய வேண்டும் பின்னர் KYC விவரங்கள் சரிபார்க்கப்படும்.
- 'Update' என்பதை தேர்வு செய்தால் போதும் உங்களின் ஆதார் கணக்கு ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்கப்பட்டு விடும்.
ஊழியர்களே இந்த 2 திட்டங்கள்ல முதலீடு செஞ்சாவே போதும்!! நீங்க கோடீஸ்வரர் ஆகலாம்!!
ஆதார் கணக்கை ஐஆர்சிடிசி கணக்குடன் அங்கீகரிப்பது எப்படி?
- முதலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் உங்களுடைய பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து லாகின் செய்ய வேண்டும்
- 'My Account' என்ற பிரிவில் 'Authenticate User' என்பதை தேர்வு செய்ய வேண்டும்
- உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்
- 'Verify Details' என்பதை கிளிக் செய்ய வேண்டும்
- ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்களின் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்
- அந்த ஓடிபி-ஐ திரையில் உள்ளிட வேண்டும், பின்னர் Submit button கிளி செய்தால் ஆதார் அமைப்பிடம் இருந்து உங்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
- சரிபார்ப்பு வெற்றி பெற்றால் திரையில் அதற்கான தகவல் காண்பிக்கப்படும் அல்லது MY ACCOUNT என்ற பிரிவில் Authentication status என்பதை கிளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.
ஆதார் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றாலும் அது திரையில் காட்டும், நீங்கள் சமர்ப்பித்த தகவல்களில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதையும் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்து மீண்டும் சமர்ப்பிக்கவும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications