தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு காரணமாக இந்திய சந்தையில் தற்போது போலி நகைகள் புழக்கம் அதிகரிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. பார்ப்பதற்கு அச்சு அசல் 22 கேரட் தங்க நகையை போலவே இருக்கும். ஆனால் உண்மையில் அது தங்கம் இல்லை. சாதாரண மக்கள் பலரும் இவற்றை வாங்கி ஏமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே நீங்கள் புதிதாக நகை நம் வாங்க செல்கிறீர்கள் என்றால் அது உண்மையான தங்கம் தானா அல்லது போலியா என்பதை கண்டுபிடிப்பதற்கு மிக எளிமையான ஒரு வழிமுறை இருக்கிறது. இதற்கு ஒரு ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும் பின் வரக்கூடிய செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய நகையாகட்டும் அல்லது நீங்கள் புதிதாக வாங்கக்கூடிய நகையாகட்டும் போலியானதா உண்மையானதா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படக்கூடிய அனைத்து நகைகளுக்குமே ஹால்மார்க் குறியீடு என்பது கட்டாயம். இந்திய தர நிர்ணய ஆணையமான பிஐஎஸ் சார்பாக ஒவ்வொரு தங்க நகையும் ஆய்வு செய்யப்படுகிறது. அந்த தங்க நகையில் எவ்வளவு தங்கம் இருக்கிறது, அதன் தூய்மை தன்மை என்ன என்பதை ஆய்வு செய்து பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை போடப்படுகிறது. போலி நகைகள் புழக்கத்தை தடுக்கவும் பொதுமக்கள் ஏமாறாமல் இருக்கவும் இந்த ஹால்மார்க் முத்திரை நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்தியாவில் தற்போது தங்கம் மட்டுமல்ல வெள்ளி நகைகளுக்குமே கூட ஹால்மார்க் முத்திரை என்பது கட்டாயமாகப்பட்டிருக்கிறது. ஹால்மார்க் என்பது அரசு அளிக்கக்கூடிய ஒரு தரச் சான்றிதழ். இது உண்மையான தங்கம் தான் இதில் இத்தனை சதவீதம் தங்கம் இருக்கிறது என்பதை குறித்து ஒரு சான்றிதழ் என கொள்ளலாம்.

இந்தியாவில் தங்க நகைகள் 22 கேரட் , 18 கேரட் , 14 கேரட் என பல கேரட் வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் என்றால் 91.6 சதவீதம் தங்கம் கொண்டது, 18 கேரட் என்றால் 75%, 14 கேரட் என்றால் 58.5 சதவீதம் தங்கம் கொண்டது. சில கடைகளில் 22 கேரட் என கூறி 18 அல்ல்து 14 கேரட் தங்கத்தை கூட உங்கள் தலையில் கட்டி ஏமாற்ற வாய்ப்புள்ளது.

எனவே தங்கம் வாங்க செல்வதற்கு முன்பு BIS Care என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்திய தர நிர்ணய அமைப்பே இந்த செயலியை நிர்வகிக்கிறது. இதனை அடுத்து லாகின் செய்ய வேண்டும். இவ்வாறு லாகின் செய்த பின்னர் நீங்கள் வாங்கக்கூடிய நகையில் இருக்கக்கூடிய HUID நம்பர் அதாவது ஆறு இலக்கம் கொண்ட எண்களும் எழுத்துகளும் கலந்த ஒரு குறியீடு இருக்கும்.
பிஐஎஸ் கேர் செயலியில் Verify HUID என்பதை கிளிக் செய்து இந்த HUID நம்பரை உள்ளிட வேண்டும். உடனடியாக அந்த நகை விற்பனை செய்யக்கூடிய நிறுவனத்தின் விவரம், எந்த மையத்தில் இந்த நகை ஹால்மார்க் செய்யப்பட்டது, இது எந்த வகையான நகை , எந்த தேதியில் ஹால்மார்க் செய்யப்பட்டது என்ற தகவல் அதில் காட்டிவிடும்.
ஒவ்வொரு நகையையும் ஹால்மார்க் செய்யும்போது அந்த நகைக்கென HUID கோடு என்பது வழங்கப்பட்டு விடும், அது அந்த நகைக்கான ஒரு தனித்துவ எண். ஒருவேளை Verify HUIDஇல் குறிப்பிட்ட நகைக்கான விவரங்கள் காட்டவில்லை என்றால் அது போலி நகை. உடனே அந்த கடையை விட்டு வெளியேறிவிடுங்கள். வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் குறியீடு கட்டாயம் என்பதால் அதையும் இந்த செயலியில் பரிசோதிக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!



Click it and Unblock the Notifications