சென்னை: பொருளாதார ரீதியாக மிடில் கிளாஸ் நிலையில் இருக்கும் நபர்களுக்கு கார் வாங்குவது ஒரு கனவாக இருக்கும். ஒருவர் நல்ல வருமானம் பெற்றாலும், மொத்த தொகையை செலுத்தி கார் வாங்குவதே கடினமான ஒன்றுதான். எனவே இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய காரை பாதுகாப்புடன் வைத்திருப்பது அவசியம். அதற்கு தான் கார் வாங்கிய உடன் இன்சூரன்ஸ் பெறுவது முக்கியமான ஒன்றாக தற்போதைய காலத்தில் மாறிவிட்டது. காப்பீட்டிற்கான அவசியம் அதிகரித்து விட்டதால், அதை சார்ந்த மோசடிகளும் அதிகரித்துள்ளன. மோசடி செய்பவர்கள் மக்களைக் கவர்வதற்காக பாதுகாப்பற்ற காப்பீடுகளை குறைந்த விலையில் ஏற்பாடு செய்து தருகின்றனர். இதுபோன்ற கார் காப்பீட்டு மோசடியைத் தவிர்க்க ஒரு சில முக்கியமான குறிப்புகளையும், விழிப்புணர்வுகளையும் இந்தக் கட்டுரையில் காண்போம்.
கார் இன்சூரன்ஸ் மோசடிகள் : போலி காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மோசடி முகவர்கள், காப்பீட்டை ஏற்பாடு செய்து தருவதற்கு, சந்தையின் பிற இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சராசரி கட்டணத்தை விட குறைவான கட்டணத்தை பெறுகின்றனர். அதுமட்டுமின்றி சில சலுகைகளையும் கூறி வாடிக்கையாளர்களை கவருகின்றனர். இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் தவறான நம்பிக்கையை உருவாக்குகின்றனர். வாடிக்கையார்களிடமிருந்து தொகையை பெற்றவுடன், அனைவராலும் நன்கு அறியப்படும் நிறுவனங்களின் லோகோவை வைத்து போலி காப்பீடுகளைத் தருகின்றனர்.

கார் இன்சூரன்ஸ் மோசடியைத் தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைத் தேர்வு செய்யவும்: எப்பொழுதும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து கார் காப்பீட்டை வாங்க வேண்டும். எந்த ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை நம்புவதற்கு முன், அந்த நிறுவனத்தின் நற்சான்றிதழ் மற்றும் உரிமங்களை சரி பார்ப்பது நல்லது.
2. பாலிசி விவரங்களைச் சரிபார்க்கவும்: காப்பீட்டுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நன்கு சரி பார்ப்பது மிகவும் முக்கியம். பிரீமியம் தொகை மற்றும் பாலிசியின் கால அளவை சரி பார்க்கவும்.
3. மூன்றாம் தரப்பு முகவர்களைத் தவிர்க்கவும்: அங்கீகரிக்கப்படாத முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் (புரோக்கர் ) மூலம் கார் காப்பிட்டை வாங்குவதைத் தவிர்க்கவும். அவ்வாறு வாங்குவதாக இருந்தால் ஏதேனும் காப்பீட்டு நிறுவனம் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களுடன் நேரடியாகப் பேசி முடிவெடுங்கள்.
4. கார் வாங்கும் ஏஜென்சியில் இருந்து காப்பீட்டை பெறுவது: முடிந்தவரை நீங்கள் கார் வாங்கும் ஏஜென்சியில் இருந்து காப்பீட்டை பெறுவது நல்ல முடிவாகும். மேலும் இது மோசடி அபாயத்தைக் குறைக்கிறது. அவர்கள் நம்பும் வகையில் கொள்கைகளை கொடுத்திருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்ளுங்கள்.
5. UID எண்களைச் சரிபார்க்கவும்: காப்பீட்டு நிறுவனத்தின் தனிப்பட்ட அடையாள எண்ணான UID-யை சரி பார்க்கவும். இந்த UID அவர்கள் கொடுக்கும் பாலிசி ஆவணத்தில் இடம்பெற்றிருக்கும்.
கார் காப்பீடு மோசடியில் நிதி இழப்புகள் மற்றும் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் பின்பற்றினால், மோசடி நடவடிக்கைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி பொதுவாக எப்படிப்பட்ட மோசடிகள் நடைபெறுகிறது என்று நீங்கள் அறிந்திருந்தால், மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications