சென்னை: எல்ஐசி நிறுவனம் நாட்டின் மிக முக்கியமான ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக எல்ஐசி நிறுவனம் ஆயுள் காப்பீடு திட்டங்களை மட்டும் இல்லாமல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக பலருக்கும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது.
எல்ஐசி திட்டம்: எல்ஐசி நிறுவனம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வகையில் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தில் இணையும் பெண்கள் மாதந்தோறும் 7000 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். பெண்களுக்கு நிதி சார்ந்த் விழிப்புணர்வையும் காப்பீடு சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த திட்டமே கொண்டு வரப்பட்டுள்ளது.

பீமா சகி யோஜனா: எல்ஐசி பீமா சகி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது .பெண்களுக்கு நிலையான மாத வருமானத்தை வழங்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது . பெண்கள் பத்தாம் வகுப்பு முடித்தவர்களாக இருந்தால் எல்ஐசி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து எல்ஐசி முகவர்களாக மாறலாம். இப்படி முகவர்களாகும் பெண்களுக்கு மாதந்தோறும் 7000 ரூபாய் வழங்கப்படும்.
ஊக்கத்தொகை எவ்வளவு: இந்தியாவை சேர்ந்த பெண்கள் யார் வேண்டுமானாலும் எல்ஐசி முகவராக மாறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம் இவர்களுக்கு முதல் ஓராண்டு காலத்திற்கு மாதந்தோறும் 7,000 ரூபாய் ஸ்டை ஃபண்டாக வழங்கப்படும். முதல் ஆண்டில் இவர்கள் மூலம் எடுக்கப்பட்டும் பாலிசிகளில் 65% பாலிசிகள் ஆக்டிவாக இருந்தால் இரண்டாம் ஆண்டில் மாதம் 6 ,000 ரூபாய் கிடைக்கும், மூன்றாவது ஆண்டில் இது 5,000 ரூபாயாக கிடைக்கும்.
கியாரண்டி வருமானம்: இந்த ஊக்கத் தொகை போக உங்கள் மூலம் கிடைக்கும் பாலிசிகளுக்கு என தனியாக போனஸ் தொகை வழங்கப்படும். எனவே முதல் மூன்று ஆண்டுகளுக்கு உங்களுக்கு மாதாந்திர வருமானம் என்பது கியாரண்டி ஆகிவிட்டது.

என்ன தகுதி தேவை?: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது . 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம். ஏற்கனவே எல்ஐசி ஏஜெண்ட்டுகளாக இருப்பவர்கள், எல்ஐசி ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களான கணவன், மனைவி, குழந்தைகள் ,பெற்றோர் ,உடன் பிறந்தவர்கள் ஓய்வு பெற்ற எல்ஐசி ஊழியர்கள் மற்றும் மறு நியமனம் பெற விரும்பும் முன்னாள் ஏஜென்ட்கள் இதற்கு விண்ணப்பம் செய்ய முடியாது.
எப்படி விண்ணப்பம் செய்வது: எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்து கொள்ளலாம். உங்களின் பெயர் , முகவரி, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் உள்ளிட்டவை கேட்கப்படும். இதனை உள்ளிட்ட பிறகு நீங்கள் இதற்கு தகுதி பெற்றவராக இருந்தால் தேர்வு செய்யப்பட்டு காப்பீடு குறித்த பயிற்சியும் மாதாந்திர எல்ஐசி முகவரிற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications