கொரோனாவின் வருகைக்கு பிறகு பலருக்கும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் கொரோனா காலத்தில் மக்களின் வேலை மற்றும் வாழும் சுற்று சூழலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் தங்களுக்கு தெரிந்த வேலைகளை வீட்டில் இருந்தே தொழிலாக தொடங்கினர். இதில் சில சவால்கள் என்பது இருந்தாலும், பணம் சம்பாதிக்க எளிதான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க கொரோனா பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அப்படி வீட்டில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான 5 வழிகளை இங்கே பார்க்கலாம்.
ப்ரீலான்சிங்
உங்களிடம் உள்ள குறிப்பிட்ட திறமையை பயன்படுத்தி, அதனையும் காசாக்கலாம். உங்களது சேவையினை காசாக்கலாம். இதில் குறிப்பாக எழுதுதல், கிராபிக் டிசைனிங், சமூக வலைதளங்கள், எடிட்டிங் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்றைய காலகட்டங்களில் பல இணையதளங்களில் ப்ரீலான்சிங் செய்யலாம். இதன் மூலம் வருமானம் பார்க்கலாம்.
ஆன்லைன் டியூசன்
ஆன்லைனில் பல்வேறு பணிகளை செய்யலாம். உதாராணத்திற்கு பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கலாம். அதற்கான தேவை என்பது சந்தையில் அதிகரித்து வருகின்றது. ஆக நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே பள்ளிகளுக்கு, பல்கலைக் கழகங்களுக்கு வகுப்பு எடுக்கலாம். இதன் மூலம் உங்களது அனுபவங்களை காசாக்க முடியும்.
ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யலாம்
ஆன்லைனில் உங்களது உற்பத்தி செய்யும் பொருட்கள் அல்லது விற்பனை சேவையினை செய்யலாம். இதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும். உதாரணத்திற்கு ஷாப்பிபை, அமேசான் என பல உள்ளன. ஆக அதுபோல ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யலாம். இதில் நீங்கள் குறைந்த விலையில் வாங்கி, அதிக விலைக்கு விற்றும் லாபம் பார்க்கலாம். இதே உற்பத்தி செய்யும் பொருட்களையும் விற்பனை செய்யலாம்.
யூடியூப் சேனல் அல்லது இணையதளம் மூலம் சம்பாதிக்கலாம்
இன்றைய காலகட்டத்தில் ஏராளமான யூடியூப் சேனல்கள் உள்ளன. அதன் மூலம் பலரும் வருமானம் ஈட்டுவதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் உங்களது திறமையினை வெளிபடுத்த முடியும், இதில் விளம்பரங்கள், ஸ்பான்சர்ஷிப், சந்தைப்படுத்தல் என பலவற்றின் மூலம் வருமானம் ஈட்டமுடியும்.
உதவிகள்
பலருக்கும் தங்களது வேலைகளை செய்ய நேரம் இருக்காது. அல்லது தெரிந்திருக்காது. அதுபோன்ற சமயங்களில் அதற்கு தேவையான உதவிகளை அவர்களுக்கு செய்யலாம். உதாரணத்திற்கு யூடியூப் சேனல் நடத்தி வருபவர்களுக்கு உதவி செய்யலாம். இதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
அதிக முதலீடு தேவையில்லை
இவைகள் மட்டும் அல்ல, இன்னும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆக அவற்றில் உங்களுக்கு ஏற்றமான ஒன்று, பொருத்தமான ஒன்றை தேர்வு செய்து, அதன் மூலம் பணி செய்து வருமானம் ஈட்டலாம். இதில் சில கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இதுபோன்ற தொழில்களுக்கு, அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்காது. உங்களுக்கு திறமை இருந்தாலே போதுமானது. ஆக குறைந்த முதலீட்டில் அல்லது உங்களிடம் இருந்து லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போன் இருந்தாலே போதுமானதாக இருக்கும்.
எதிர்பார்ப்பு
இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க, பலதரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்த அப்டேட் எதுவும் பட்ஜெட்டில் வருமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.


Click it and Unblock the Notifications