மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு முதலீட்டு முறை, இந்த முதலீட்டு முறையின் கீழ் பலரிடமிருந்து பணத்தை வசூலித்து பலவிதமான பங்குகள், பத்திரங்கள் வாங்கப்படும். எந்த பங்குகளை வாங்க வேண்டும், எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை முதலீட்டு துறையில் கைதேர்ந்த நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படும்.
இப்படி கைதேர்ந்த நிதி மேலாளர் உருவாக்கிய போர்ட்போலியோவில் தனிநபர் முதலீடு செய்யும் வாய்ப்பை பெறலாம், இதுதான் மியூச்சவல் பண்ட். இந்த போர்ட்போலியோ-க்கள் திட்டத்திற்கு ஏற்றார் போல், இலக்குகளுக்கு ஏற்ப, சந்தை நிலவரத்தை பொருத்து மாறுப்படும். எனவே ஒரு தனிநபர்களுக்கு தங்களுடைய இலக்குகளை அடைய எது பொறுத்தமானது என்பதை ஆய்வு செய்து தேர்வு செய்ய வேண்டும்.

மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் முன்பு முதலில் உங்கள் இலக்குகளைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் முதலீடு எதற்காக ஓய்வுகாலம், குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல் இப்படி எது உங்கள் இலக்கு? அதற்கேற்ப நீண்டுகால, குறுகிய கால திட்டங்களைத் தேர்வு செய்ய எளிதாக இருக்தும்.
அடத்த ஸ்டெப் சரியான ஃபண்டைத் தேர்வு செய்வது, இதற்கு நிதி நிபுணர்கள் அல்லது ஆன்லைன் ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறுவது உத்தமம். உங்கள் இலக்கிற்குப் பொருத்தமான 'ரிஸ்க்’ அளவீட்டை (குறைவு, மிதம், அதிகம்) கொண்ட ஃபண்டைத் தேர்வு செய்ய நிதி நிபுணர்கள் உதவுவார்கள்.
இல்லையெனில் சொந்தமாக நீங்கள் தேர்வு செய்துள்ள பண்டின் வரலாற்று செயல்பாடுகளை கணக்கிட்டு அதன் பின்பு முதலீடு செய்ய முடிவு எடுங்கள். இதுவும் முடியாதெனில் மியூச்சுவல் பண்டில் நீண்ட காலமாக முதலீடு செய்யும் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் ஆலோசனை கேட்கலாம். ஆனால் முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
சரி எந்த பண்டில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்துவிட்டீர்கள் எனில் அடுத்த முக்கியமன முடிவை எடுக்க வேண்டும். மியூச்சவல் பண்ட் முதலீட்டில் SIP மற்றும் LUMPSUM என இரண்டு முதலீட்டு வகை உள்ளது. நீங்கள் புதிதாக முதலீடு செய்கிறீர்கள் எனில் ரூ.100 முதல் முதலீடு செய்ய வாய்ப்பு அளிக்கும் SIP (Systematic Investment Plan) மூலம் மாதந்தோறும் சிறுகச் சிறுக முதலீடு செய்யலாம்.
மியூச்சவல் பண்டில் முதலீடு செய்ய எங்கு கணக்கு திறப்பது? என்பது அடுத்த முக்கியமான கேள்வி. தற்போது பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஃபண்ட் முதலீட்டுச் சேவை வழங்குகின்றன. அதேபோல் ஆன்லைனிலேயே மியூச்சுவல் பண்ட் கணக்கை திறக்கலாம்.
கணக்கை துவங்கி தேர்வு செய்யப்பட்ட பண்டில் SIP முறையில் முதலீடு செய்ய ஒரு முறை தொடங்கிவிட்டால் போதும். மாதந்தோறும் உங்கள் SIP தொகை தானாகவே கழிக்கப்படும். நிபுணர்கள் உங்கள் முதலீட்டை நிர்வகிப்பார்கள். மார்க்கெட் ஏற்ற இறக்கங்களில் கவலைப்பட வேண்டியதில்லை, நீண்டுகால முதலீடு நல்ல லாபம் தரும்.
SIP திட்டத்தில் முதலீடு செய்வதால் சந்தை ஏற்ற இறக்கங்களில் சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே இருக்கும். இதேபோல் உங்கள் முதலீட்டை பல துறைகளை சார்ந்து முதலீடு செய்யவும், இதனால் மோசமான காலக்கட்டத்தில் ஒரு துறையில் பணத்தை இழந்தாலும் மற்றொரு துறையில் அதிகப்படியான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பங்குச் சந்தை முதலீட்டில் ரிஸ்க் உள்ளது, இதேபோல் மியூச்சுவல் பண்ட் முதலீட்டிலும் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில் சில ரிஸ்க் உள்ளது. எனவே முதலீடு செய்வதற்கு முன் சரியாக ரிஸ்க் எடுப்பதையும் ஆராய்ச்சி செய்வதையும் உறுதிசெய்யவும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications