ஒரே நாளில் ஆயுஷ்மான் கார்டு! விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள்?

திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகள் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பையே கரைத்து விடும். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PM-JAY) திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சையை பெற முடியும். இந்த சேவையை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆயுஷ்மான் கார்டு மூலம் பயனாளிகள் பெறலாம்.

இந்த கார்டை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், நீங்கள் தகுதியுள்ளவராக இருந்தால் வெறும் 24 மணி நேரத்திற்குள் உங்கள் ஆயுஷ்மான் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான தகுதிகள் என்ன? என்னென்ன ஆவணங்கள் தேவை? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என அத்தனை கேள்விகளுக்கும் விடை அளிக்கிறது இப்பதிவு.

ஒரே நாளில் ஆயுஷ்மான் கார்டு! விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள்?

ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) என்பது இந்திய மக்களுக்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டமாகும். இது பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) என்றும் அழைக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஏழ்மையான குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள், நிதி நெருக்கடி இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

எப்படி பதிவிறக்கம் செய்வது?
பயனாளர்கள் ஆயுஷ்மான் கார்டை ஆயுஷ்மான் ஆப் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். PMJAY போர்ட்டல் அல்லது உமாங் ஆப் (Umang app) மூலமாகவும் பதிவிறக்கம் செய்து செய்யலாம். அதற்கு ஆதார் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல், ஓடிபி இருந்தால், பிடிஎஃப் பார்மேட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

24 மணி நேரத்தில் எப்படி பெறுவது?
ஆயுஷ்மான் கார்டு பெறுவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது, குறிப்பாக உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால் இது இன்னும் சுலபமாக பெறலாம். உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இடம் பெற்றிருந்தால், நீங்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பித்து 24 மணிநேரத்திற்குள் கார்டை பெற்றுக் கொள்ள முடியும். முன்பு அதற்கான தகுதி ஒரு தனிப்பட்ட பயனாளி பட்டியலை பொறுத்தே இருந்தது. ஆனால் இப்போது பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு செல்லுபடியாகும் ரேஷன் கார்டே தகுதிக்கான முதன்மை ஆவணமாகக் கருதப்படுகிறது.
சொத்து வாங்க சரியான நேரம்! 2026-ல் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்களாக மாறப்போகும் அந்த 5 நகரங்கள் எவை?
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
ஆயுஷ்மான் கார்டை எளிதாக ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
ஸ்டெப் 1: இதற்காக நீங்கள் அதிகாரப்பூர்வ தளமான https://nha.gov.in./ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அங்கு போர்ட்டல்ஸ் என்ற பிரிவில் Am I Eligible என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அங்கு Beneficiary என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, உங்களுடைய மொபைல் நம்பர், ஓடிபி கொடுத்து லாகின் செய்ய வேண்டும். இது மற்றொரு பக்கத்தில் தொடங்கும்.
ஸ்டெப் 3: தொடங்கிய புதிய பக்கத்தில் PM-JAY என்ற திட்டத்தின் கீழ், உங்களுடைய மாநிலம், மாவட்டம், உங்கள் பெயர் அல்லது ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு நம்பர் கொடுத்தும் சப்மிட் செய்யலாம்.
ஸ்டெப் 4: மேற்கூறியவாறு விவரங்கள் கொடுத்த பிறகு உங்களுடைய விவரங்கள் ஸ்கிரீனில் தெரிந்தால், மற்ற வெரிபிகேஷன் செயல்பாடுகளையும் முடிக்க வேண்டும். போட்டோ அப்லோட் செய்ய வேண்டியிருக்கும். இது தவிர ஓடிபி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து, உங்கள் அப்ளிகேஷனை சப்மிட் கொடுக்க வேண்டும். ஒருமுறை நீங்கள் சப்மிட் செய்த பிறகு, திரும்பவும் உங்கள் அப்ளிகேஷன் நிலையை தெரிந்து கொள்ள மீண்டும் லாகின் செய்து என்ன நிலையில் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். இதை நீங்கள் ஆயுஷ்மான் பாரத் ஆப் மூலமாகவும் அப்ளை செய்து கொள்ளலாம்.
கோடிக்கணக்கான டன் தங்கம் எங்கே? இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் எவ்வளவு? அதிர வைக்கும் உண்மைகள்?
70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து இந்திய குடிமக்களும் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். அவர்களின் வருமானம் எவ்வளவு இருந்தாலும் அல்லது ஏற்கனவே அவர்களிடம் வேறு மருத்துவ காப்பீடு இருந்தாலும் இது பொருந்தும். ஆயுஷ்மான் கார்டு அனைத்து வயதினரும் பெறக்கூடிய ஒன்றுதான். ஆனால், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு சில கூடுதல் சலுகைகளை வழங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+