தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில் புதிய தங்க நகைகளை வாங்க முடியவில்லை என புலம்பும் மக்கள் மத்தியில், வீட்டில் இருக்கும் தங்கத்தின் மூலம் எப்படி நிதி திரட்டுவது என யோசிக்கும் சிலரும் இருக்கின்றனர்.
தங்க நகையை விற்றுவிட்டால் பணம் கிடைக்க போகிறது இதில் என்ன பெரிய விஷயம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது ஒருமுறை மட்டுமே ஈட்டக்கூடிய வழி, நாம் இப்போது பார்க்க போவது நீங்கள் விற்கப்படும் தங்கத்திற்கு ஒவ்வொரு வருடமும் பிக்சட் டெபாசிட் போட்டது போல் வட்டி வருமானம் கிடைக்கும்.

வங்கியின் எப்படி பணத்தை டெபாசிட் செய்து வருமானத்தை ஈடுக்கிறோமோ அதேபோல் வீட்டில் இருக்கும் தங்கத்தை டெபாசிட் செய்து வருடாந்திர அடிப்படையில் வருமானம் ஈட்ட முடியும். இந்த திட்டத்தின் பெயர் தான் Gold Monetization Scheme, இதுகுறித்து ஸ்கைமேன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனர் டிவிட்டரில் எளிய விளக்கம் கொடுத்துள்ளார்.
ராஜேஷ் அவர்களின் பதிவில், உங்கள் வீட்டில் உள்ள தங்கத்தை வருமானம் ஈட்ட வைக்க இது ஒரு முறை. அதாவது, உங்கள் வீட்டிலுள்ள தங்கத்தை, அரசிடம் ஒப்படைத்து, அதற்கு ஈடான தொகைக்கு வருடா வருடம் வட்டி வருமானமும், தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும் பயனையும் ஒரு சேர அனுபவிக்கலாம். இந்த திட்டத்தை மத்திய அரசு கோல்டு மானிடைசேஷன் ஸ்கீம் என்ற பெயரில் வழங்குகிறது.
Gold Monetization Scheme பயன்களை எப்படி பெறுவது? : நீங்கள், உங்கள் வீட்டிலுள்ள தங்கத்தை, உங்களுக்கு அருகிலுள்ள Collection and Purity Testing Centres (CPTC) க்கு எடுத்துச் சென்று, அதன் மதிப்பினை அளவீடு செய்து அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் தங்கம், உருக்கப்பட்டு, 995 purity க்கு எடுத்துக் கொள்ளப்படும்.
வங்கிகள் : இந்த சான்றிதழை, குறிப்பிட்ட வங்கிகளுக்கு (ஐசிஐசிஐ வங்கி, கார்ப்பரேஷன் வங்கி/யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, யெஸ் வங்கி, தேனா வங்கி/பரோடா வங்கி) எடுத்துச் சென்று, டெபாசிட் செய்ய வேண்டும். உங்களது பெயரில், ஒரு டெபாசிட் கணக்கு தொடங்கப்பட்டு, உங்களது தங்கம் (995 purity) கிராம் கணக்கில் வரவு வைக்கப்படும்.
டெபாசிட் காலம்: நீங்கள், உங்கள் டெபாசிட் காலத்தினை தேர்வு செய்து ரசீதினை பெற்றுக் கொள்ள் வேண்டும். இத்தகைய திட்டத்திற்கு குறுகிய கால (1-3 ஆண்டுகள்) வங்கி வைப்பு, நடுத்தர (5-7 ஆண்டுகள்) மற்றும்
நீண்ட கால (12-15 ஆண்டுகள்) அரசு வைப்புத் திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
டெபாசிட் முதிர்வு : உங்கள் டெபாசிட் காலத்திற்கு, வட்டி தொகையை அந்தந்த வங்கியின் விதிமுறை படி உங்களுக்கு maturity யின் பொது வழங்கப்படும்.
வட்டி வருமானம்: தற்போது அதிகபட்ச வட்டி 2.25% முதல் 2.50% வரை வழங்குகிறார்கள். டெபாசிட் முதிர்ச்சியின்போது, நீங்கள் பணமாகவோ அல்லது தங்கமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.
தங்க காயின்: நீங்கள் கொடுத்தது தங்க நகையாக இருந்தாலும், உங்களுக்கு கையில் கிடைப்பது தங்க காயின் அல்லது 99.9% தங்க பிஸ்கட் தான் கிடைக்கும். இதனால் செய்கூலி, சேதாரம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படலாம்.
வருமான வரி பலன்கள்: இந்த டெபாசிட் மூலம் நீங்கள் ஈட்டும் வருமானத்திற்கு வருமான வரியோ சொத்து வரியோ கிடையாது. உங்கள் தங்கம் விலை அதிகரித்திருந்தால், அதற்கான capital gains ம் வரியிலிருந்து (LTCG/STCG) விலக்கு அளிக்கப் படுகிறது. இதனால் வரி சுமையும் பெரிய அளவில் குறைகிறது.
வீட்டில் தங்கம் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்: ஒரு இந்திய குடிமகன்/குடிமகள் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்ற கணக்கு உள்ளது. உதாரணமாக திருமணமான பெண்கள் 500 கிராம்,
திருமணமாகாத பெண்கள் 250 கிராம், ஆண்கள் 100 கிராம் என்ற அளவீடு உள்ளது.
முக்கிய குறிப்பு: நீங்கள் டெபாசிட் செய்யும் உங்களது நகைகள் உருக்கப்பட்டு, 995 purity க்கு மாற்றப்படும். நீங்கள் வைத்த நகைகள், டெபாசிட் முதிர்ச்சியின் போது, அந்த நாளின் தங்க மதிப்பில், பணமாகவோ அல்லது தங்க காயின் அல்லது பிஸ்கட் ஆகவோ தான் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications